2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா? கோலியால் டெண்டுல்கரின் சாதனைகளை மிஞ்ச முடியுமா? கங்கூலி பிசிசியின் தலைவர் ஆவாரா? விளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியுமா? உலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து, டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள், அடுத்த ஐபிஎல் போட்டிகள் இவற்றின் முடிவுகளை நம்மால் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா? ஜோதிட சாஸ்திரத்தின் உதவியால், எதிர் காலப் போட்டிகளில் நம் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள முடியுமா? அறிவியல் கண்ணோட்டத்துடன் ஜோதிட சாஸ்திரத்தை அணுகும் நவீன ஜோதிட நிபுணரான கிரீன் ஸ்டோன் லோபோ, இவை சாத்தியமே என்று உறுதியாகச் சொல்கிறார். இந்தத் துறையில் 25 வருடங்களாக மிக விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ச்சி செய்து, லோபோ, 12 கிரகங்கள் கொண்ட ஒரு ஜோதிடக் கணிப்பு முறையை உருவாக்கியிருக்கிறார். இந்த முறையில் ஒருவரின் ஜோதிட பலன்களை மிகத் துல்லியமாக கணிக்க முடியும். ஆயிரக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்களையும், கடந்த கால முக்கிய விளையாட்டு நிகழ்வுகளையும் இவர் ஆராய்ச்சி செய்து, அதன் அடிப்படையில், உலககெங்கிலுமுள்ள கிரிக்கெட் இரசிகர்களின் மனங்களில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார். இந்தியக் கிரிகெட்டின் சிக்கலான, சுவாரசியமான எதிர்காலத்தைப் பற்றி சொல்ல லோபோ ரெடி! கேட்க நீங்கள் ரெடியா?
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.