இந்து மதமானது பரந்த சமுத்திரம் போன்று, இமாலய பர்வதத்தைப் போன்ற தனிப்பட்ட அற்புதமாக விளங்குகிறது.இந்து மதத்தின் அணைத்துச் செல்லும் பாங்கும், சகிப்புத் தன்மையும், ஒன்றுக்கொன்று மாறுபட்ட விரோதமான கொள்கைகளுக்கு கூட இடமளிக்கிறது. இந்து மதம் ஒரு குறிப்பிட்ட வரையறையில் அடங்காததாக,அநேக சமயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.நமது சமுதாயமானது அநேக கொள்கைகைகளின் கூட்டமைப்பாக (Federation ) அமைதிருப்பதைப்போல், இந்து மதமும் அநேக சமயங்கள் சங்கமிக்கும் ஒரு சமுதாயமாக விளங்குகிறது . கடவுளே இல்லை என்ற நாஸ்திகவாதம் தொடங்கி,கடவுள் -ஆத்மா -தர்மம்-அதர்மம் முதலியவற்றை விளக்கும் மாறுபட்ட தத்துவங்கள் இந்து மதம் என்ற அகண்ட விருக்ஷத்தின் கிளைகளாக வளர்ந்து வேர்விட்டுத் தழைத்திருகின்றன .
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.