23,99 €
inkl. MwSt.

Versandfertig in über 4 Wochen
payback
12 °P sammeln
  • Broschiertes Buch

சுரங்க இரதம் அடுத்த நிறுத்தத்தில் நின்றது. அவள் சிரித்துக்கொண்டு இறங்கிச் சென்றாள். சித்தனுக்கு, 'இதயம் போகுதே எனையே பிரிந்தே காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே... ' என்பதான வேதனை அவன் இதயத்தையும் ஆத்மாவையும் பிழிந்து சக்கையாக்கியது. அவன் அவள் போவதைப் பார்த்துப் புழுவாய்த் துடித்தான். அவன் துடிப்பைப் பொறுக்கமுடியாத சுரங்க இரதம் ஒரே இழுவையில் அவளை மறைத்து அவனுக்கு உதவாதவற்றைக் காட்சியாக்கியது. 'இதயம் போகுதே எனையே பிரிந்தே...' அவன் மீண்டும் முழுமுழுத்தான். இது எப்படிச் சாத்தியமாகிறது? அவனுக்கு விளங்கவில்லை. ஏதோ போதைவஸ்தை உண்ட மயக்கம் அவனிடம். மீண்டும் அவன் உதடுகள் 'இதயம்…mehr

Produktbeschreibung
சுரங்க இரதம் அடுத்த நிறுத்தத்தில் நின்றது. அவள் சிரித்துக்கொண்டு இறங்கிச் சென்றாள். சித்தனுக்கு, 'இதயம் போகுதே எனையே பிரிந்தே காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ இதயம் போகுதே... ' என்பதான வேதனை அவன் இதயத்தையும் ஆத்மாவையும் பிழிந்து சக்கையாக்கியது. அவன் அவள் போவதைப் பார்த்துப் புழுவாய்த் துடித்தான். அவன் துடிப்பைப் பொறுக்கமுடியாத சுரங்க இரதம் ஒரே இழுவையில் அவளை மறைத்து அவனுக்கு உதவாதவற்றைக் காட்சியாக்கியது. 'இதயம் போகுதே எனையே பிரிந்தே...' அவன் மீண்டும் முழுமுழுத்தான். இது எப்படிச் சாத்தியமாகிறது? அவனுக்கு விளங்கவில்லை. ஏதோ போதைவஸ்தை உண்ட மயக்கம் அவனிடம். மீண்டும் அவன் உதடுகள் 'இதயம் போனதே எனையே பிரிந்தே...' என்றது. மற்றவர்கள் இதைக் கேட்டால் சிரிப்பார்கள். கண்டதும் காதலா என்று கிண்டல் செய்வார்கள் என்பதும் அவனுக்கு விளங்கியது. என்று கோடிடும் இது; எனது பதினைந்தாவது நாவலும் இருபத்து இரண்டாவது படைப்புமாகும். இந்த நாவல் பலரும் தொட்டால் சுடும் என்று தள்ளிப்போகும் விஷயத்தை, பேசாப்பொருள் பேசுவதாகப் பேசிச் செல்கிறது. அது எதைத் தொட்டுச் செல்கிறது என்பதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.