இன்றைய உலகில் அறிவும் கல்வி தகுதியும் மாத்திரம் ஒரு மனிதன் பிரகாசிப்பதற்கும், வெற்றிப்பெறுவதற்கும் உதவுவதில்லை. உலகம் பல்வேறு துறைகளில் முன்னேறி வருவதால், முக்கிய வாழ்வியல் திறன்கள் மறைந்துள்ள பல மதிப்பீடுகளை மறந்துள்ளோம். நாம் நமது பின்னணியின் அடிப்படையில் பகுத்தறிவதாலும், மதிப்பளவுகளை கொண்டுள்ளதாலும், பின்னால் உள்ள பல காரியங்களைக் குறித்து அறிவில்லாதிருக்கிறோம். அதுவே நாம் இன்று அடுத்த தலைமுறையில் உள்ள ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் வேண்டிய, அத்தியாவசிய வாழ்வியல் திறன்களைக் கற்றுக் கொடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு சாத்தியமான காரணமாக இருக்கலாம். '21 ஆம் நூற்றாண்டுத் திறன்கள்' என்கின்ற வார்த்தை இன்று பெரிய அளவில் கல்வித் துறையிலும், பெருநிறுவனங்களிலும் உச்சரிக்கப்படுகிறது. தொடர்புக்கொள்ளுதல், உடனுழைத்தல், தொழில்நுட்ப எழுத்தறிவு, விமர்சன சிந்தனை, சிக்கலைத் தீர்த்தல், உலக குடிமகனாயிருத்தல், ஆராய்தல் மற்றும் புதுமுறைக்காணல் ஆகியன 21 ஆம் நூற்றாண்டுத் திறன்களை உள்ளடக்கிய மைய திறன்கள் ஆகும். இந்தத் திறன்கள் கல்வி தகுதிகளையும், சான்றிதழ்களையும் விடக் கற்றல் மற்றும் வேலை செய்யும் சூழல்களில் மிக முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன. திறன்கள் மாத்திரமே ஒரு மனிதனுக்கு வேண்டிய ஆரோக்கியமான கற்றல் மற்றும் வேலை செய்யும் சூழல்களைத் தருவதில்லை. திறன்கள் மத்தியில் மறைந்திருந்து அதனைச் சரியான முறையில் செயல்படுத்த, உபயோகிக்க மதிப்பீடுகளும் உதவும். 'திறனிலிருந்து வெற்றிவரை" ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தம்மை தாமே மதிப்பதற்கும், தம்மை தாமே அறிவதற்கும், வளங்களை உபயோகிப்பதற்கும், ஒருவரோடொருவர் சரியான முறையில் தொடர்புக்கொள்வதற்கும், நேர்மறையான அணுகு
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.