எளிய மக்களின் கதைகளை எளிய மொழியிலேயே சொல்லிவிடமுடியும் என்றாலும் இறக்குமதி செய்யப்பட்ட வெவ்வேறு பாணிகளைக் கையாண்டு அக்கதைகளைச் சிக்கலானவையாக மாற்றிவிடுகிறார்கள் பலர். அப்படி மாற்றினால் மட்டுமே அது இலக்கியமாகக் கொள்ளப்படும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். சோம. வள்ளியப்பனின் எழுத்து அந்த வகையில் மாறுபட்டது. சமுதாயத்தில் நம்மைச் சுற்றிப் பல்வேறு நிலைகளில் வாழும் மனிதர்களை, அவர்களின் குணாதிசயங்களை, பலதரப்பட்ட உணர்வுகளை, அவரவர் நிலைப்பாடுகளை சிக்கலில்லாத, குழப்பமில்லாத நடையில் விவரித்துக்கொண்டு செல்கிறார் அவர். அந்த எளிமை அதற்குண்டான வசீகரத்தை எப்படியோ பெற்றுக்கொண்டு விடுகிறது. நீங்களும் அதை உணர்வீர்கள். ஜீவனுள்ள இந்தக் கதைகள் உங்களோடு நேரடியாகப் பேசும். தாக்கத்தையும் ஏற்படுத்தும். சோம. வள்ளியப்பனின் எழுத்தில் 'நெஞ்சமெல்லாம் நீ' என்னும் சிறுகதைத் தொகுப்பும் 'பட்டாம்பூச்சியின் கண்ணாமூச்சி காலங்கள்' என்னும் குறுநாவலும் முன்னதாக வெளிவந்துள்ளன.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.