தொடர்ந்து அமீர்களின் கொடுங்கோன்மைகளைப் பற்றி மிக விரிவான புனைகதைகளை எழுதினார் அய்னி. அதனால் அலிம்கானின் போலீஸால் கைது செய்யப்பட்ட அய்னி, அர்க் என்ற ஊரில் சிறையில் அடைக்கப்பட்டார். ஒருநாள் அவருக்கு 75 பிரம்படிகள் கொடுக்கப்பட்டன. ஒரு மனிதன் 75 பிரம்படிகள் வாங்கினால் இறந்துவிடுவான். அய்னியும் அந்தப் பிரம்படிகளோடு இறந்திருக்க வேண்டும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அன்றைய தினம் தஜிகிஸ்தான் தலைநகரம் சோவியத் படைகளிடம் வீழ்ச்சி அடைந்ததால் எல்லா கைதிகளும் விடுவிக்கப்பட்டார்கள். 75 பிரம்படிகளை வாங்கிக் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடந்த அய்னியை சோவியத் வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டது. அன்றைய தினம் 1917, ஏப்ரல் 9-ஆம் தேதி. - புத்தகத்திலிருந்து...
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.