ஒரு சமஸ்தானத்து இளவரசர் மாளிகையில் இறந்து விடுகிறார். சில வருடங்கள் கழித்து அந்த ஊருக்கு ஒரு சந்நியாசி வருகிறார். வந்ததோடு நில்லாமல், நான்தான் இறந்துபோனதாகச் சொல்லப்படும் இளவரசர் என்கிறார் அவர். ஊரே பரபரப்பாகிறது. ராஜ வம்சத்து விவகாரம் நீதிமன்றத்துக்குச் செல்கிறது. சந்தியாசியை நம்பலாமா? ஆம் எனில் இறந்தவர் யார்? யாருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன? மர்ம சந்நியாசிதான் இளவரசர் என்றால் இத்தனை வருடங்கள் அவர் எங்கு போயிருந்தார்? ஏன் அரண்மனைக்கு வரவில்லை? ஒருவேளை வாரிசு இல்லாத சமஸ்தானத்தைக் கைப்பற்ற பிரிட்டிஷ் இந்திய அரசு போட்ட திட்டமா இது? விசித்திரமான, விறுவிறுப்பான, எண்ணற்ற ஊசிமுனை திருப்பங்களைக் கொண்ட இந்த மர்ம வழக்கை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் நூலாசிரியர் சொக்கலிங்கம். கற்பனையை விஞ்சும் உண்மை வரலாறு இந்நூல்.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.