21,99 €
inkl. MwSt.

Versandfertig in über 4 Wochen
payback
11 °P sammeln
  • Broschiertes Buch

வீட்டின் வரவு செலவு கணக்கே பெரும்பாடாக இருக்கும்போது எங்கே நாட்டின் பொருளாதாரம் குறித்து யோசிப்பது? இப்படி நினைப்பவர்கள்தான் நம்மில் அநேகம் பேர். ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. ஆண்டுக்கொரு முறை வருமான வரி கட்டுகிறோம். அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற்றுக்கொள்கிறோம். இத்தோடு நமக்கும் நம் நாட்டுக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிடுகிறது என்று நினைத்துக்கொள்கிறோம். தவறு. நீங்கள் கட்டும் வரியை யார் நிர்ணயம் செய்கிறார்கள்? உங்களுக்கு அரசால் எப்படிச் சில சலுகைகளை அளிக்கமுடிகிறது? அதற்கான நிதியை அரசு எப்படிப் பெறுகிறது? அரசு…mehr

Produktbeschreibung
வீட்டின் வரவு செலவு கணக்கே பெரும்பாடாக இருக்கும்போது எங்கே நாட்டின் பொருளாதாரம் குறித்து யோசிப்பது? இப்படி நினைப்பவர்கள்தான் நம்மில் அநேகம் பேர். ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. ஆண்டுக்கொரு முறை வருமான வரி கட்டுகிறோம். அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற்றுக்கொள்கிறோம். இத்தோடு நமக்கும் நம் நாட்டுக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிடுகிறது என்று நினைத்துக்கொள்கிறோம். தவறு. நீங்கள் கட்டும் வரியை யார் நிர்ணயம் செய்கிறார்கள்? உங்களுக்கு அரசால் எப்படிச் சில சலுகைகளை அளிக்கமுடிகிறது? அதற்கான நிதியை அரசு எப்படிப் பெறுகிறது? அரசு எவ்வாறு வருமானம் ஈட்டுகிறது? சாலை, குடிநீர், கட்டுமானம், ராணுவம் என்று எப்படி அரசால் செலவழிக்கமுடிகிறது? அரசும் நம்மைப் போல் கடன் வாங்குமா? எனில் யாரிடமிருந்து? அரசும் வரவு செலவு கணக்கு போட்டுப் பார்க்குமா? அரசுக்கும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றுமா? ஆம் எனில் அவற்றை எப்படி அவர்கள் கையாள்கிறார்கள்? இப்படியாக ஒவ்வொரு தலைப்பையும் அக்குவேறு, ஆணிவேறாக பிரித்து அரசு ஒரு பட்ஜெட்டை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பது வரை நாம் கனம் என்று நினைக்கும் ஒரு விஷயத்தை மிக, மிக எளிதாக, இலகுவாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் சோம. வள்ளியப்பன். நம் தேசத்தின் பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஓரளவுக்கேனும் தெரிந்து வைத்துக்கொள்வது நம் உரிமை. ஒரு குடிமகனாக அது நம் கடமையும்கூட.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.