1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

செத்துப் போனாள் திலகா. சரியாய் முப்பது மணி நேரம். ஒரு பகல், ஒரு ராத்திரி... மறுநாள் பகல் பனிரெண்டு மணிக்கு நினைவு வராமல் மூச்சுவிடுவதை நிறுத்திக் கொண்டாள். ஜெயகர் அழுது அழுது முகம் வற்றிப்போய் பிரமை பிடித்திருந்தான். சம்பூர்ணம் இரண்டொரு தடவை மயக்க நிலைக்கு போய் விட்டு திரும்பியிருந்தாள். சம்பூர்ணத்தின் கணவர் மகாதேவன் துண்டை வாயில் பொத்தி குமுறித் தீர்த்தார். திலகா போஸ்ட் மார்ட்டம் போய் ஆஸ்பத்திரியின் சம்பிரதாயங்களை முடித்து காடாத்துணியில் சுற்றப்பட்டு வீடு திரும்பி தெரு ஜனங்கள், ஜெயகரின் ஆபீஸ் கும்பல் கொண்டு வந்து சாத்திய மாலைகளில் புதைந்து - இருட்டுகிற வேளையில் நொய்யல் ஆற்று மயானத்திற்கு போய்…mehr

Produktbeschreibung
செத்துப் போனாள் திலகா.
சரியாய் முப்பது மணி நேரம். ஒரு பகல், ஒரு ராத்திரி... மறுநாள் பகல் பனிரெண்டு மணிக்கு நினைவு வராமல் மூச்சுவிடுவதை நிறுத்திக் கொண்டாள்.
ஜெயகர் அழுது அழுது முகம் வற்றிப்போய் பிரமை பிடித்திருந்தான்.
சம்பூர்ணம் இரண்டொரு தடவை மயக்க நிலைக்கு போய் விட்டு திரும்பியிருந்தாள். சம்பூர்ணத்தின் கணவர் மகாதேவன் துண்டை வாயில் பொத்தி குமுறித் தீர்த்தார்.
திலகா போஸ்ட் மார்ட்டம் போய் ஆஸ்பத்திரியின் சம்பிரதாயங்களை முடித்து காடாத்துணியில் சுற்றப்பட்டு வீடு திரும்பி தெரு ஜனங்கள், ஜெயகரின் ஆபீஸ் கும்பல் கொண்டு வந்து சாத்திய மாலைகளில் புதைந்து - இருட்டுகிற வேளையில் நொய்யல் ஆற்று மயானத்திற்கு போய் மறுபடியும் ஒரு தடவை நெருப்பில் குளித்து சாம்பலாகி உதிர்ந்துபோன ரெண்டாம் நாள்.
மோவாயில் நான்கு நாள் தாடியோடு அறைக்குள் உட்கார்ந்து சுவரையே பார்த்துக்கொண்டிருந்த ஜெயகரை சம்பூர்ணத்தின் குரல் கலைத்தது. கம்மிப் போன குரல்.
“ஜெயகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்கார். ஏதோ கேக்கணுமாம்.”
“என்ன விஷயமாம்?” ஆச்சர்யமாய் தலையை உயர்த்தினான்.
“தெரியலை.”
ஜெயகர் தொய்வாய் எழுந்து வந்தான். ஹால் சோபாவில் இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் சாய்ந்திருந்தார்.
“சிரமம் தர்றதுக்காக மன்னிக்கணும் மிஸ்டர் ஜெயகர்.”
“ஸோ வாட்? நீங்க உங்க டூட்டியைச் செய்யறீங்க. என்ன கேக்கணுமோ கேளுங்க இன்ஸ்பெக்டர்.