1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

பெங்களூர். காவி நிற விஸ்வேஸ்வரைய்யா மியூசிய கட்டிடத்துக்கும் பின்புறமாய் நடந்து கொண்டிருந்தார்கள் சத்யகலாவும், பிரசன்னகுமாரும், மேகங்களோடு போராடி மீண்டு வந்த சொற்ப வெய்யில் மரங்களிடம் மறுபடியும் தோற்றுப்போய் அடர் நிழலாய்த் தரையில் விழுந்து கொண்டிருந்தது. நீல நிற ஃப்ளேட் உல்லி ஸாரிக்குள் இருந்த சத்யகலா ரோஜாவிடம் நிறத்தை இரவல் வாங்கியிருந்தாள். சிரிக்கிற போது கண்களில் வாட்ஸ் கணக்கில் வெளிச்சம் வீசியது. லேடீஸ் ஹாஸ்டலில் இருந்துகொண்டு பெங்களூரின் ஒரு ரெப்யூடட் கன்சர்னுக்கு ரிஷ்ப்ஸனிஸ்ட்டாகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு அழகான இருபது சத்யகலா. அவளின் கையைப் பற்றியபடியே நடந்து கொண்டிருந்த பிரசன்னகுமார்…mehr

Produktbeschreibung
பெங்களூர்.
காவி நிற விஸ்வேஸ்வரைய்யா மியூசிய கட்டிடத்துக்கும் பின்புறமாய் நடந்து கொண்டிருந்தார்கள் சத்யகலாவும், பிரசன்னகுமாரும், மேகங்களோடு போராடி மீண்டு வந்த சொற்ப வெய்யில் மரங்களிடம் மறுபடியும் தோற்றுப்போய் அடர் நிழலாய்த் தரையில் விழுந்து கொண்டிருந்தது.
நீல நிற ஃப்ளேட் உல்லி ஸாரிக்குள் இருந்த சத்யகலா ரோஜாவிடம் நிறத்தை இரவல் வாங்கியிருந்தாள். சிரிக்கிற போது கண்களில் வாட்ஸ் கணக்கில் வெளிச்சம் வீசியது. லேடீஸ் ஹாஸ்டலில் இருந்துகொண்டு பெங்களூரின் ஒரு ரெப்யூடட் கன்சர்னுக்கு ரிஷ்ப்ஸனிஸ்ட்டாகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு அழகான இருபது சத்யகலா.
அவளின் கையைப் பற்றியபடியே நடந்து கொண்டிருந்த பிரசன்னகுமார் ஒழுங்கான எடை, உயர விகிதாச்சாரத்தில் இருந்தான். எந்த வாசகமுமில்லாத டீ ஷர்ட் போட்டிருந்தான். ஹொசூர் ரோட்டில் பதினொராவது கிலோ மீட்டரிலிருக்கும் பாமாசந்திரா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் மெக் அண்ட் கியர் டெக்னிகல் சர்வீஸின் நிர்வாகி.
நடந்தபடியே கிசுகிசுத்தான்.
“சத்யா...”
திரும்பினாள். “ம்?”
“ரெண்டே வாரத்துல நம்ம ப்ரெண்ட்ஷிப் இப்படி டெவலப் ஆகும்னு நான் நினைக்கவேயில்லை...”
புன்னகைத்தாள் சத்யகலா“ரெண்டு மூணு தடவை என்னோட எம். டி. ஐ பார்க்க வந்தீங்க... என்கிட்டே சுவாரஸ்யமா பேசினீங்க... ஒருதடவை தியேட்டர்ல பார்த்தோம் நாலஞ்சு நாளா இந்த பார்க்கில் சந்திக்கறோம்... இது வெறும் ஃப்ரெண்ட்ஷிப் இல்ல பிரசன்னகுமார்...”
அந்தத் தள்ளுவண்டியைக் கடந்தபோது நின்றான் ப்ரசன்னகுமார்,
“ஐஸ்க்ரீம்?”
தலையாட்டினாள்.
“வேண்டாம்”
கோபித்தான்.
“எது கேட்டாலும் வேண்டாம்னு சொல்லு. இன்னிக்கு என்னோட ட்ரீட். சாப்பிட்டே ஆகணும்... ஹோட்டல் ஹைவே இன்?”
“ப்ரச...”
அவள் சொல்ல ஆரம்பிக்குமுன் ஸ்கூட்டர் சாவியைக் கையில் சுழற்றியபடி திரும்பி நடக்க ஆரம்பித்தான் ப்ரசன்னகுமார்.
“உன்கிட்டே கேட்டுட்டிருந்தா நடக்காது நாம இப்போ போகறோம்”
சொன்ன ப்ரசன்ன குமாரோடு நடந்தாள் சத்யகலா மரத்தடி நிழலில் நனைந்துக் கொண்டிருந்தது இளநீல வெஸ்பா எக்ஸ்ஈ அதனை சமீபித்ததும் ஸ்டாண்டினின்றும் விடுவித்து சீட்டில் பரவிக்கொண்டான். கிக்கரின் மேல் கால் வைத்து உதைவிட-ஸ்டார்ட் ஆகி சப்தித்தது ஸ்கூட்டர்.
“ம்... ஏறு...”
என்றபடி திரும்பி சத்யகலாவைப் பார்த்தவன் “ஏன் சத்யகலா எதுக்கு தயங்கறே...?”
“யாராவது பார்த்துட்டா என்ன பண்றதுன்னு பயமாயிருக்கு...”
சொன்னவளைப் பார்த்து நோகாமல் தலையில் தட்டிக் கொண்டான்இதுக்குத்தானா? என்னோட அப்பா, அம்மா நானூறு கிலோ மீட்டர்ஸுக்கு அந்தப் பக்கம் மெட்ராஸ்ல இருங்காங்க... உன்னையும் ஹாஸ்டல்ல யாரும் கேட்கப் போறதில்லே”
“அதான் கிடையாது ப்ரசன்னா... நான் தங்கியிருக்கிற ஹாஸ்டல் ரொம்பவும் கண்டிப்பான ஹாஸ்டல் வார்டன் கனகதாராருக்கு இந்த லவ் விவகாரமே பிடிக்காது. யாரவது காதலிக்கறாங்கன்னு தெரிஞ்ச உடனடியா ஹாஸ்டலை விட்டு தொரத்திடுவாங்க”
ப்ரசன்னகுமார் சிரித்தான்.