1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

“என்னம்மா?” என்றான் அதிர்ச்சியாய். “இதை ஏன் சாப்பிட்டே?” “ஏன் சாப்பிட்டா என்ன?” “இதையெல்லாம் சாப்பிடக்கூடாது!” “அதான் ஏன்?” “இது நம்மளோடது இல்லே... பக்கத்தாத்துல புதுசா குடிவந்தவ கொடுத்தது இது!” “சரி... இருக்கட்டுமே... இதை சாப்பிட்டா என்ன? ரொம்ப நல்லாதானே இருக்கு” “என்ன அகில் புரியாமப் பேசறே? அவ யாரோ? நம்மவா கெடயாது. கண்டவங்க கொடுக்கறதெல்லாம் சாப்பிடலாமா? வேலைக்காரிக்கு கொடுத்தனுப்ப வச்சிருந்தேன்... நீ சாப்ட்டுட்டியே...” அகிலனுக்கு அம்மாவை இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் பிடிப்பதிலை. ஜாதிப்பித்து அதிகம். எவ்வளவோ எடுத்துச் சொல்லியாச்சு... ஐம்பதில் வளையுமா என்ன? அதனால் அவள் இந்த டாபிக் பத்தி…mehr

Produktbeschreibung
“என்னம்மா?” என்றான் அதிர்ச்சியாய்.
“இதை ஏன் சாப்பிட்டே?”
“ஏன் சாப்பிட்டா என்ன?”
“இதையெல்லாம் சாப்பிடக்கூடாது!”
“அதான் ஏன்?”
“இது நம்மளோடது இல்லே... பக்கத்தாத்துல புதுசா குடிவந்தவ கொடுத்தது இது!”
“சரி... இருக்கட்டுமே... இதை சாப்பிட்டா என்ன? ரொம்ப நல்லாதானே இருக்கு”
“என்ன அகில் புரியாமப் பேசறே? அவ யாரோ? நம்மவா கெடயாது. கண்டவங்க கொடுக்கறதெல்லாம் சாப்பிடலாமா? வேலைக்காரிக்கு கொடுத்தனுப்ப வச்சிருந்தேன்... நீ சாப்ட்டுட்டியே...”
அகிலனுக்கு அம்மாவை இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் பிடிப்பதிலை. ஜாதிப்பித்து அதிகம். எவ்வளவோ எடுத்துச் சொல்லியாச்சு... ஐம்பதில் வளையுமா என்ன? அதனால் அவள் இந்த டாபிக் பத்தி பேசும்போதெல்லாம் கப்சிப்பென்று வாயைப் பொத்திக் கொள்வான்.
“உடம்புதான் சரியில்லையேம்மா... சமைக்கறதுக்கு ஒரு ஆளைப்போட்டுக்கலாம்” என்றாலும் விடமாட்டாள்.
“அதெப்படி... அவாள்லாம் சுத்தபத்தமா இருப்பாள்ன்றது நமக்கு எப்படித் தெரியும்? ஏதோ, துடைக்க, கழுவன்னு ஒரு ஆளைப் போட்டாச்சு. அதுபோதும். என் கையும், காலும் நன்னாதானே இருக்கு? என் உடம்புல உசிர் இருக்கற வரைக்கும் என் ஒரே பிள்ளைக்கு நான்தான் சமைச்சிப் போடுவேன். அம்மா மேல நிஜமாகவே அக்கறை இருக்கற பிள்ளை... என் சுமையக் குறைக்க வேலைக்காரிய சேர்த்துக்கன்னு சொல்லமாட்டான்.”
“பின்னே?“சீக்கிரமா பொண்ணைப் பாரும்மா... இந்த வீட்டுக்கு ஒரு மாட்டுப் பொண்ணைக் கொண்டு வந்து உன் சிரமத்தை குறைக்கிறேன்னு சொல்வான்!”
“போச்சுடா... ஆரம்பிச்சிட்டியா?” சலித்துக் கொள்வான்.
“உனக்கும் வயசாகல்லியோ... ஏன் எப்பப் பார்த்தாலும் கல்யாணப் பேச்சை எடுத்தாலே சலிச்சுக்கறே?”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லேம்மா... இப்ப வேண்டாங்கறேன். அவ்வளவுதான்!”
“அதான் ஏன்?”
“பிஸினஸ்ல கொஞ்சம் சரிவு. அதை சரிக்கட்டணும். அதுவேதான் இப்ப என்னோட கான்ஸன்ட்ரேஷன் எல்லாம். அது சரியான பிறகு பண்ணிக்கறேன்.”
“எப்ப சரியாகும்?”
“இப்ப சொல்ல முடியாதும்மா!” என்று நழுவி விடுவான்.
அதனாலேயே அம்மா எதிரில் அதிகமாய் நிற்கமாட்டான். உடனே கல்யாணப் பேச்சை எடுத்து விடுவாளோ என்கிற பயம்.
இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொன்னதற்கு பிஸினஸின் சரிவு மட்டுமல்ல... இன்னொரு முக்கியமான காரணமும் இருந்தது.
அது - வர்ஷினி!
“அம்மா டிபன் ரெடியா?”
“ரெடிதான்... நீ முதல்ல போய் குளிச்சிட்டு வா!”
அகிலன் முகம் மாறினான்.
“குளிச்சிட்டு வர்றதா? என்னைப் பார்த்தா பத்து நாளா குளிக்காதவன் மாதிரியாத் தெரியுது?” தன்னை குனிந்து பார்த்துக் கொண்டான்