1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
1 °P sammeln
  • Format: ePub

நி லவுப் பெண் சீவிச் சிங்காரித்து... ஒளி வீசும் மேனியுடன்... மென்மையான நாணத்துடன், வானில் மெல்ல நடை போட்டுக் கொண்டிருக்க, நட்சத்திரப் பட்டாளங்கள் தோழியாய்க் கூடவே துணைக்குப் போக... வெண் மேகங்கள், நிலவுப் பெண்ணிற்குப் பட்டுக் கம்பளம் விரித்து... வெஞ்சாமரம் வீசிக் கொண்டிருக்க... என்று வானமே மிக ரம்யத்துடன் காணப்பட்டது.
இரவு பத்து மணி.
மாடி போர்டிகோவில்... பிரம்பு நாற்காலியில் அமர்ந்து தோட்டத்தையே வெறித்துக் கொண்டிருந்தார், சதாசிவம்.
மார்கழிப் பனியோடு... தோட்டத்து மலர்களின் வாசமும் இணைந்து, பின்னிப் பிணைந்து, அவரைத் தீண்டி நகர்ந்தது.
அந்தக் குளிர்ந்த பனித் தென்றலை ஆழ்ந்து சுவாசிக்க,
…mehr

Produktbeschreibung
நிலவுப் பெண் சீவிச் சிங்காரித்து... ஒளி வீசும் மேனியுடன்... மென்மையான நாணத்துடன், வானில் மெல்ல நடை போட்டுக் கொண்டிருக்க, நட்சத்திரப் பட்டாளங்கள் தோழியாய்க் கூடவே துணைக்குப் போக... வெண் மேகங்கள், நிலவுப் பெண்ணிற்குப் பட்டுக் கம்பளம் விரித்து... வெஞ்சாமரம் வீசிக் கொண்டிருக்க... என்று வானமே மிக ரம்யத்துடன் காணப்பட்டது.

இரவு பத்து மணி.

மாடி போர்டிகோவில்... பிரம்பு நாற்காலியில் அமர்ந்து தோட்டத்தையே வெறித்துக் கொண்டிருந்தார், சதாசிவம்.

மார்கழிப் பனியோடு... தோட்டத்து மலர்களின் வாசமும் இணைந்து, பின்னிப் பிணைந்து, அவரைத் தீண்டி நகர்ந்தது.

அந்தக் குளிர்ந்த பனித் தென்றலை ஆழ்ந்து சுவாசிக்க, குளிரெடுத்தது. சால்வையை இழுத்து நன்றாகப் போர்த்திக் கொண்டார்.

அவரால் இப்பொழுதெல்லாம் நாள் முழுக்க உழைக்க முடியவில்லை. அஞ்சனா மட்டும் இல்லையென்றால் பெரிதாய்த் திண்டாடி விடுவார்.

சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என்று பெரும் அவதிப்படும் சதாசிவத்திற்கு இப்போதெல்லாம் நெஞ்சில் ஊசி குத்துவதுபோல வலி புறப்பட்டு அவரைக் கஷ்டப்படுத்தியது.

அவ்வளவு பெரிய அரண்மனை போன்ற பங்களாவில் தனிமை வேறு வாட்டி வதைத்தது. இத்தனை நாளும் தெரியாத தனிமை வயதாக ஆகப் பாடாய்ப் படுத்தியது.

எத்தனையோ கனவுகளோடும்... கற்பனைகளோடும் அவர் தேவகி என்ற அழகிய நங்கையை மணந்தார்.

தேவகியின் மிதமிஞ்சிய அன்பில், நேசத்தில், பாசத்தில், அக்கறையில் தண்ணீரில் கரையும் சர்க்கரையாய்தான் கரைந்து போனார்.

அவளைக் கைப்பிடித்த நேரம் பிசினஸும் பல்கிப் பெருகியது. அவர்களின் மிதமிஞ்சிய காதல் வாழ்க்கையில் ஜெயசூர்யா மலர்ந்தான்.

அவனுக்கு ஐந்து வயதாகும் போது... தேவகி மீண்டும் கருவுற்றாள்! ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் பெண் குழந்தை எனத் தெரிய வந்தது! சதாசிவம் பெரும் மகிழ்ச்சி கொண்டார்.

ஏழாம் மாதம் தேவகி சுரம் வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அந்த சுரம் விஷ சுரமாய் மாறி... டாக்டர்கள் எவ்வளவு போராடியும் அவளைப் பிழைக்க வைக்க முடியவில்லை. தேவகி வயிற்றுப் பிள்ளையோடு இறந்து போனாள்.

நேசம் கொண்ட மனைவி மரணித்துவிட கத்தினார். துடிதுடித்தார். துவண்டு போனார்.

ஒரு நாள் தற்கொலைக்கு முயற்சிக்க. அவருடைய தாயும், தகப்பனும் கண்டுவிட்டுக் காப்பாற்றினர்.

“குழந்தையை அநாதையாக்கி விட்டுப் போயிடாதே, சிவம்! அவளுக்கு விதி... இப்படிப் பொட்டென்று போய்ச் சேரணும்னு. சிவம்... இந்தக் குழந்தையின் முகத்தைப் பார். அவன் எதிர்காலம் உன் கையில் தான் இருக்கு. இந்தக் குழந்தைக்காகவாவது நீ வாழ வேண்டும், சிவம்...!”

“தேவகி உன் தலையில் பெரிய பொறுப்பையும், கடமையையும் விட்டுவிட்டுப் போயிருக்கிறாள். அதுவும் நீ செய்வாய் என்று நம்பி.”

“ஏமாத்திவிடாதே, சிவம்! தாய் இறந்தது கூடத் தெரியாமல் வெள்ளையாய் விளையாடித் திரியும்... இந்த ஜெயசூர்யாவுக்குத் தாயுமானவனா நீ மாறணும், சிவம்!”

“மனசைத் தளர விடாதே. நம்பிக்கையை இழப்பது உயிரை இழப்பதற்குச் சமம்! சிவம்... சிவம்... உன்னால் இந்தத் துக்கத்திலிருந்து மேலெழ முடியும். உன்னால் இந்தத் துன்பத்தைப் புறம் கண்டு ஓட வைக்க முடியும். உன் மனைவியின் மரணம் தந்த காயம்... உன்னை மலையளவு எழுந்து நிற்க வைக்கும்.”

“நீ நம்ம ஜெயசூர்யாவுக்காகவாவது வாழணும், சிவம்! எங்களை அநாதையாக்கிடாதேப்பா!” என்று தாய் பாகீரதி அழ...

சதாசிவத்திற்கு அப்போதுதான் தான் எவ்வளவு பெரிய பாவம் செய்ய இருந்தோம் என்று தோன்றியது.

நிதானமாய் யோசித்தார். நிமிர்ந்து எழுந்தார்.

பாகீரதியின் அளவுக்கு அதிகமான புத்தி புகட்டலால்... விண்ணுக்கும் மண்ணுக்குமாய் உயர்ந்து நின்றார்.

அவருடைய தகப்பன், நகை, துணிக்கடை நிறுவினார் என்றால் அவரின் மகன் சதாசிவமோ கடைக்குத் தேவையான தங்க, வைர, பிளாட்டின நகைகளைச் செய்யும் தொழிற்சாலையை நிறுவி... செய்கூலி, சேதாரம் இல்லாமல் விற்பனை செய்தார்.

அதே போல் துணிக் கடைக்குத் தேவையான துணிகளை நெய்யச் சொந்தமாக மில்லை நிறுவி... அங்கே நெய்யும் துணிகளைக் குறைந்த அளவு லாபத்திற்கு விற்க... விற்பனை அமோகமாய் இருந்தது.

படிப்படியாய் உயர்ந்து தமிழக, ஆந்திர மலைப் பிரதேசங்களில் காபி தேயிலைத் தோட்டங்களை வாங்கிப் போட்டார்.

கர்நாடகாவின் பெங்களூரிலும், சிக்மங்களூரிலும் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் என்றும்...

ஆந்திராவின் செகந்திராபாத், வாரங்கல், மெஹ்பூப் நகர், திருமலை போன்ற இடங்களில் பெரிய பெரிய ஷாப்பிங் மால்களும்,

ஐதராபாத்தில் கார் ஸ்பேர்பார்ட்ஸ் என்று நிறுவி வெற்றி நடைபோட்டார்.