1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

ச க்திவேல் பெரும் பணக்காரர்!
ஊரே அவர் பின்புதான்!
ஏதாவது அடிக்கடி, பிரச்சனை என்றால்... அந்த ஊர் மக்கள் காவல் நிலையம் செல்ல மாட்டார்கள். சக்திவேல் ஐயாவிடம் தான் வருவார்கள்.
நேர்மையானவர்! நியாயவாதி! பெரும் வள்ளல்!
இந்தத் தகுதிகள் போதாதா...? ஒரு ஊரையும், ஒரு பெரும் கூட்டத்தையும் கட்டிப் போட்டு வைப்பதற்கு!
அவருடைய மகன்தான் ராகுல்! படிப்பு சரிவர ஏறாததால் பனிரெண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு தந்தையோடு பண்ணைக்கு விவசாயத்தைப் பார்வையிடச் சென்றான். பின் தந்தைக்கு வயசாக அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு முழு கணக்கு வழக்கு, பண்ணை நிர்வாகம் என்று பார்த்துக் கொண்டான்!
ராகுலின் மனைவி
…mehr

Produktbeschreibung
க்திவேல் பெரும் பணக்காரர்!

ஊரே அவர் பின்புதான்!

ஏதாவது அடிக்கடி, பிரச்சனை என்றால்... அந்த ஊர் மக்கள் காவல் நிலையம் செல்ல மாட்டார்கள். சக்திவேல் ஐயாவிடம் தான் வருவார்கள்.

நேர்மையானவர்! நியாயவாதி! பெரும் வள்ளல்!

இந்தத் தகுதிகள் போதாதா...? ஒரு ஊரையும், ஒரு பெரும் கூட்டத்தையும் கட்டிப் போட்டு வைப்பதற்கு!

அவருடைய மகன்தான் ராகுல்! படிப்பு சரிவர ஏறாததால் பனிரெண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு தந்தையோடு பண்ணைக்கு விவசாயத்தைப் பார்வையிடச் சென்றான். பின் தந்தைக்கு வயசாக அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு முழு கணக்கு வழக்கு, பண்ணை நிர்வாகம் என்று பார்த்துக் கொண்டான்!

ராகுலின் மனைவி நித்யா! பத்து வயதில் பரத் என்று மகனிருக்கிறான்!

சக்திவேல் ஐயாவின் இரண்டாவது பிள்ளை, மதிவதனா!

அவர் மனைவி கற்பகம் ராகுலைப் பெற்ற பின் நீண்ட நாட்கள் கருவுறாமல் இருந்து... பதினைந்து வருடம் கழித்து கருவுற்றாள். சக்திவேல் ஐயா மகிழ்ந்தார். மனைவியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார்.

பிரசவ வலி எடுத்து ஆஸ்பத்திரியில் கற்பகத்தைச் சேர்த்தனர். நீண்ட நாட்கள் குழந்தைபேறு இல்லாமல் இருந்ததாலும், வயதாகி விட்டதாலும், இடுப்பு எலும்பு நெகிழ்வு கொடுக்காமல் போக... பிரசவம் சிக்கலாகி மதிவதனா பூமியில் தவழ்ந்த அடுத்த நொடி விண்ணுலகு சென்று விட்டாள், கற்பகம்.

சக்திவேல் ஐயா சுடு மணலில் விழுந்தவராகத் துடித்துப் போனார்! மனைவியின் மரணம் அவரைப் படுக்கையில் தள்ளியது!

அவரை படுக்கையிலிருந்து எழுந்து நடமாட வைத்தது அவர் மனைவியின் ஜாடையை உரித்து வைத்துக் கொண்டு பிறந்த மதிவதனாதான்!

'தாயை விழுங்கிக் கொண்டு வெளியே வந்த எமன்... தரித்திரம் பிடித்த சனியன்' என்று இது போன்ற குழந்தைகளை வெறுப்பவர்கள், ஏராளம்!

ஆனால், மாறாய் கற்பகம் ஜாடையில் இருந்த மதிவதனா மேல் அவர் மட்டற்ற அன்பும், பாசமும் கொண்டார்! தனது மனைவியே மீண்டும் மகள் உருவில் வந்து அவரோடு வாழ்வதாய் எண்ணி அந்தக் குழந்தைக்காக எழுந்து விட்டார், சக்திவேல் ஐயா!

ராகுலுக்கும் தங்கையென்றால் உயிர்! அவள் சொல்தான் அவனுக்கு வேதம்!

தந்தையும், தமையனும் மாறி மாறி அன்பு, பாசம், நேசம் கொண்டு வளர்த்ததால் மதிவதனா ஒரு குட்டி இளவரசி கணக்காய் வளர்ந்தாள்.

மதிவதனா பிடிவாதக்காரி! எதையும் சாதித்தே பழகியவள்!

இன்பத்தையே அறிந்தவள் ! துன்பத்தின், துயரத்தின் நிழல் கூட அறியாதவள்!

அவளுக்கு படிப்பைத் தவிர... எந்த வேலையும் தெரியாது!

தெரிந்தாலும் செய்ய வேண்டிய அவசியம் என்ன? காலால் இட்ட வேலைகளைக் கைகளால் செய்ய நிறைய வேலைக்காரர்கள் இருக்கும்போது!

நன்றாக உடுத்திக் கொள்வாள்! பட்டுப்பாவாடை, தாவணி தான் அவளுக்குப் பிடித்தமான உடை!

கல்லூரியில் தொளதொள, டைட்டான சுடிதாரில் வரும் பெண்களை விட... பட்டுப்பாவாடை, தாவணியில் அம்சமாய் வரும் இந்த அழகு தேவதையைத்தான் நிறைய கல்லூரி மாணவர்களுக்குப் பிடிக்கும்!

அவளின் தந்தைக்கு இருந்த செல்வாக்கு அடுத்ததாய் தங்கைமேல் உயிரையே வைத்திருந்த ராகுல்மேல் பயம் என யாரும் அவளை நெருங்க மாட்டார்கள்!

அவளும் தான் உண்டு, படிப்பு உண்டு என்று இருப்பாள்!

மதிவதனா... ஐந்தரையடி உயர அழகுப் பெட்டகம்!

முழுநிலவு போன்ற அழகான வட்டவடிவ வதனம்!

காதளவு நீண்ட இரு பெரிய நயனங்கள்! அந்த வட்ட முகத்துக்கு ஏற்ற கூரிய நாசி!

செங்காந்தள் மலரின் நிறத்தைக் கொண்ட அழகான இரு இதழ்கள்! ஒரு ஆப்பிளை இருகூறாய் வெட்டி வைத்தாற்போன்ற சதைப் பற்றான கன்னங்கள்!

சிற்பி வடித்த சிலையாய்... வடிவான மார்புடன்... சிறுத்த இடையுடன் கூடிய உடலமைப்பு!

அலையலையாய் நீண்ட சுருண்ட கருங்கூந்தல்!

ஆனால், அவளின் நிறம் மட்டும் மாநிறம்!

எல்லா அம்சங்களும் பொருந்திய அவளுக்கு தன் நிறம் மீது ரொம்பவே கவலை! அதை ஒரு குறையாய் எண்ணி எண்ணி மருகிப்போவாள்!

சிவப்பு தோல் மேல் பெரிதும் மோகம், அவளுக்கு!

ராகுல் தங்கையின் அறைக்குச் செல்ல... அவளோ போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு இருக்க தங்கையை தட்டி எழுப்பினான்.