பௌர்ணமி நிலவு ஒன்று பூமிக்கு வந்தது போல்... பளிச்சென்று... வைரத்தின் ஒளிவீச்சுடன்... அழகின் இலக்கணமாய் ஹாலுக்கு வந்தாள் கீர்த்தனா.
சாதாரண காட்டன் சேலையிலும் தேவதைக்கணக்காய்... புத்தம் புது மலராய்... மணம் வீசிக் கொண்டு வந்து நின்றாள்.
சமையலறையைப் பார்த்து குரல் கொடுத்தாள்.
“அம்மா... அம்மா...”
“இதோ வந்துட்டேம்மா...” கைகளை முந்தானையில் துடைத்துக் கொண்டு வந்தாள் தாய் தமிழ்ச்செல்வி.
“எனக்கு நேரமாயிடிச்சி...வரவா?” என்ற மகளை ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.
“எங்கேடி...இந்த காலம் கார்த்தால போறே? இன்னைக்கு ஆபீசும் இல்லையே!”
‘என்னம்மா மறந்துட்டியா? நேத்து நைட் சொன்னேனே! இன்று தைக்கிருத்திகை. வட சென்னிமலை கோவிலுக்கு போறேன்னு.”
“ச்சே! நான் ஒரு ஞாபகமறதிக்காரி. எப்படியோ அந்த சென்னிமலை முருகன் இனிமேலாவது உனக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும். இந்த வருடமாவது திருமணயோகம் வந்து... சமூக சேவை, நியாயம், தர்மம் எல்லாத்தையும் விட்டு ஒழிச்சிட்டு... உனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை அமைய... அந்த கடவுள்தான் கருணை காட்ட வேண்டும்!” அம்மா கவலையாய் கூறினாள்.
“ஏம்மா... சலிச்சுக்கிறே! நான் இப்போ அங்கே போறது சாமி கும்பிட மட்டும் இல்லை!’’ புதிராய் பேசினாள் கீர்த்தனா.
“பின்னே?”வயதான பெரியவர்கள் எத்தனை பேர் முருகனை தரிசிக்க ஆசைப்பட்டு... படியேற முடியாமல்... தவிச்சிட்டு இருப்பாங்க. அவங்களை எல்லாம் என் ஸ்கூட்டியில ஏத்திட்டு... பாதை வழியா கொண்டு போய் சாமி கும்பிட வைத்து... திரும்ப மலையிறங்க உதவி செய்யத்தான் அங்கே போறதே!”
“சேவை...ம்...சமூக சேவை! உன் வயசுல இருக்கிறவ எல்லாம் கையில ஒண்ணும், வயித்துல ஒண்ணுமா... புருஷனோட லட்சணமா இருக்க... நீ மட்டும் ஏன்டி வருகிறவனையெல்லாம் விரட்டிகிட்டு... சேவை சேவையின்னு அறிவு கெட்டத்தனமா அலையறே!” தமிழ்ச்செல்வி கோபமாய் கூறினாள்.
“உன் பொண்ணு ஒரு நல்லது செய்தா...உனக்குப் பிடிக்காதே! திட்டாதேம்மா! நான் செய்யும் நல்லதிற்கு புண்ணியமே கிடைக்காது!”
“பிடிக்காம இல்லடி கீர்த்தனா, நீ சேலத்துல இருந்து அவ்ளோ தூரம் ஸ்கூட்டியில போய்... மேலேயும், கீழேயும் மலை ஏறி இறங்கினால்... இந்த மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் உன் உடம்புக்கு..., ஏதாவது வந்துட்டா... என்னால் தாங்க முடியுமா? சொல்லு.”
“வயசானவங்களுக்கு செய்யறது கோடி புண்ணியம்மா!”
“புண்ணியமும் வேண்டாம்... ஒண்ணும் வேண்டாம். போக ஆசையானால்... பஸ்ல போயிட்டு உடனே திரும்பிடு” கட்டளையாய் தாய் கூற, தவித்து விட்டாள் கீர்த்தனா.
“என்னம்மா நீ! நான் செய்யும் அத்தனை நல்லதோட பலனும், உன்னையும்... அப்பாவையும் தான் வந்து சேரும். என்னை ஆசீர்வதிக்கற அத்தனை பேரும்... நீயும். உன்னை பெற்றெடுத்த மகராசனும், மகராசியும் நல்லாயிருக்கணும்னு சொல்லும்போது... என்மனசு குளிர்ந்துடும். அப்போ எவ்வளவு சந்தோஷப்படுவேன் தெரியுமா? மனித ஜென்மமா பிறப்பதே ஒரு தடவைதான்! மனிதர்களுக்கு எந்த நேரத்துல எதுவரும் என்று சொல்ல முடியாது. அப்படியிருக்க உயிரோடு இருக்கும் காலம் வரை... மத்தவங்களுக்கு உபத்திரவம் இல்லாமல்... உதவியா இருந்தால்... என்னம்மா கெட்டுப்போகும்? ம்ம்...?” சாமர்த்தியமாய் பேசினாள்