1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

ஜெயன் அயர்ந்துபோய் அவளைப் பார்த்தான் “நீயா...?” “ஏன் என்னைப் பார்த்தால் கல்யாணப் பொண்ணு மாதிரி தெரியலையா?” கல்யாணி ஒரு சிரிப்போடு கேட்க, ஜெயன் அவளை பார்வையால் கழுவினான். “ஒரு அஞ்சு நிமிடம் அப்படி உட்கார். பெரியவரைக் கேட்டுட்டு சொல்றேன்.” ஜெயன் வரவேற்பறையின் மூலைக்குப் போய்-ஸ்டூலின் மேல் உட்கார்ந்திருந்த இன்டர்காமின் ரிசீவரை எடுத்தான். அதிகபட்ச மரியாதைக் குரலில் அரை நிமிடம் பேசினான். பிறகு ரிசீவரை வைத்துவிட்டு கல்யாணியின் பக்கமாய் திரும்பினான். “மாடிப்படி ஏறி மேலே போனதும் முதல் அறை. பெரியவர் வரச்சொன்னார். போய்ப் பாரு. அநாவசியமா ரொம்ப நேரம் பேசிட்டிருக்காதே...!” “ம்... ம்...” தலையாட்டிவிட்டு…mehr

Produktbeschreibung
ஜெயன் அயர்ந்துபோய் அவளைப் பார்த்தான் “நீயா...?”
“ஏன் என்னைப் பார்த்தால் கல்யாணப் பொண்ணு மாதிரி தெரியலையா?” கல்யாணி ஒரு சிரிப்போடு கேட்க, ஜெயன் அவளை பார்வையால் கழுவினான்.
“ஒரு அஞ்சு நிமிடம் அப்படி உட்கார். பெரியவரைக் கேட்டுட்டு சொல்றேன்.”
ஜெயன் வரவேற்பறையின் மூலைக்குப் போய்-ஸ்டூலின் மேல் உட்கார்ந்திருந்த இன்டர்காமின் ரிசீவரை எடுத்தான். அதிகபட்ச மரியாதைக் குரலில் அரை நிமிடம் பேசினான். பிறகு ரிசீவரை வைத்துவிட்டு கல்யாணியின் பக்கமாய் திரும்பினான்.
“மாடிப்படி ஏறி மேலே போனதும் முதல் அறை. பெரியவர் வரச்சொன்னார். போய்ப் பாரு. அநாவசியமா ரொம்ப நேரம் பேசிட்டிருக்காதே...!”
“ம்... ம்...” தலையாட்டிவிட்டு ஹாலுக்குள் நுழைந்தாள் கல்யாணி. ஹாலின் தரைப்பரப்பு பூராவும் கண்ணாடியாய் மொசைக். ஏராளமான சாண்ட்லியர் விளக்குகள். தேக்குமரக் கதவுகள். நிலைப்படிகள். ஆளுயரக் கண்ணாடிகள்.
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே பிரமிப்பாய் மாடிப்படிகளில் ஏறினாள்,
முதல் அறைக்கு முன்பாக வந்து நின்றாள். கதவின் நிலைப்படியில் தொங்கிக்கொண்டிருந்த அந்த திரைச்சீலையை மெல்ல விலக்கினாள். குரலின் தொனியை தாழ்த்திக்கொண்டு கேட்டாள்.
“நான் உள்ளே வரலாமா சார்?”
“வாம்மா... உள்ளே வாம்மா” குரலில் ஒருவித இனிமை விரவியிருக்க, உள்ளேயிருந்து அழைப்பு வந்ததுகல்யாணி உள்ளே போனாள். அறை அரையிருட்டாய் இருந்தது. அறையின் சன்னல்கள் இறுக்கமாய் சாத்தப்பட்டிருக்க, ஈசிச்சேர் ஒன்றில் ராஜசேகரன் சாய்ந்திருந்தார்.
ஐம்பது வயதான ராஜசேகரன் ரொம்பவும் வயோதிகமாய் தெரிந்தார். “பொல்” லென்று தலையில் வெளுத்து ஒற்றை நாடி சரீரத்தில் நிரம்பவும் ஒடிசலாய் இருந்தார். மனசுக்குள் உலாவுகிற ஒரு இனம்புரியாத கவலை கண்களில் உட்கார்ந்திருந்தது. குளிருக்கு பாதுகாப்பாக உல்லன் கோட்டைப் போட்டு, கழுத்துக்கு மப்ளரை சுற்றியிருந்தார்.
“வணக்கம் சார்.”
“வாம்மா... இப்படி உட்கார்.” ராஜசேகரன் தனக்கு எதிரேயிருந்த சோபாவைக் காட்டினார்.
கல்யாணி சோபாவின் நுனியில் தவிப்பாய் உட்கார்ந்தாள்.
“உன் பேர்தான் கல்யாணியா?”
“ஆமா சார்.”
“சொந்த ஊர் கோயமுத்தூரா?”
“ம்...”
“உன்கூட யாரும் வரலையாம்மா?”
கல்யாணி வெறுமையாய் புன்னகைத்தாள்.
“என்கூட வர்றதுக்கு யாரும் இல்ல சார். எனக்கு அஞ்சு வயசாயிருக்கும்போதே அம்மாவும் அப்பாவும் காலமாயிட்டாங்க. எனக்கு கூடப் பிறந்தவங்களும் யாரும் இல்லை. என்னோட சொந்தக்காரங்கள்ல ஒருத்தர் என்னை ஒரு கிறிஸ்தவ அநாதை விடுதியில் கொண்டு போய் சேர்த்துவிட்டார். அந்த அநாதை விடுதியிலேயே வளர்ந்து, சிரத்தையா படிச்சு முன்னுக்கு வந்து, இப்போ ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு இருக்கேன்.”
“எந்த கம்பெனி?”
“ஹைபவர் ட்ரான்ஸ்மிஷன் பெல்ட்ஸ் கம்பெனி.”“என்னவா இருக்கிறே?”
“டைப்பிஸ்டு.”
ராஜசேகரன் சில விநாடிகள் மவுனமாய் இருந்துவிட்டு, பின் மெல்லிய குரலில் கேட்டார்.
“அந்த திருமண விளம்பரத்தை என்றைக்குப் பார்த்தே?”
“நேத்தைக்கு சாயந்தரம்.”
“அந்த விளம்பரத்தைப் பார்த்ததுமே உன்னோட மனசுல, என்ன எண்ணம் வந்தது?”
கல்யாணி மெல்ல தலைகுனிந்து தன் வலது கை விரல் நகங்களையே பார்த்துக்கொண்டு சொன்னாள். “சார், நீங்கள் கொடுத்த அந்த திருமண விளம்பரத்தில் வாசகங்கள் வித்தியாசமாக இருந்தன. “அவசரமாய் நடைபெற வேண்டிய ஒரு திருமணம். 25 வயதான அழகான மணமகனுக்கு 20 வயதுக்கு உட்பட்ட மணமகள் தேவை. கடிதப் போக்குவரத்து வேண்டாம். சம்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் மணப் பெண்ணோடு நேரில் வரவும். முகவரி...” இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் மனதுக்குள்ளே ஒரு இனம்புரியாத ஆவல். எந்தவிதமான சொந்த பந்தம் இல்லாத எனக்கு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் கட்டி வைக்க யாருமே முன்வரப் போறதில்லை. அதனால், இந்த விளம்பரம் மீது அக்கறை எடுத்துகிட்டு நானே புறப்பட்டு வந்தேன்...”
கல்யாணப் பேச்சை நிறுத்திவிட்டு, அவர் முகத்தைப் பார்த்தாள்