1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

அதுவரை பல்லை கடித்து பொறுமையோடிருந்த மாலதி முதல் ஆளாய் வகுப்பை விட்டு வெளியில் வந்தாள். பகலிலிருந்தே அவளுக்கு நல்ல வயிற்றுவலி. அதனாலேயே கொண்டு வந்திருந்த சாப்பாட்டைக் கூட சாப்பிடவில்லை. “ஏய்... மாலு!” வினோலியா கூப்பிட்டாள். நடந்துக் கொண்டிருந்த மாலதி நின்று திரும்பினாள். “ம்... என்ன?” “என்னை விட்டுட்டு நீ பாட்டுக்கு ஓடறே?” “ஸாரி வினோ! ஸ்டமக்பெய்ன்... தாங்க முடியலே! என்னால பஸ்ல வர முடியாது. நான் வீட்டுக்கு ஆட்டோவுல போய்டலாம்னு இருக்கேன். இன்னைக்கு ஒருநாள் நீ தனியா போய்டு... வேறு வழியில்லே!” மாலதியும், வினோலியாவும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். ஒரே பஸ்ஸில் பயணம் செய்பவர்கள். ஒரே பஸ் என்றாலும்…mehr

Produktbeschreibung
அதுவரை பல்லை கடித்து பொறுமையோடிருந்த மாலதி முதல் ஆளாய் வகுப்பை விட்டு வெளியில் வந்தாள். பகலிலிருந்தே அவளுக்கு நல்ல வயிற்றுவலி. அதனாலேயே கொண்டு வந்திருந்த சாப்பாட்டைக் கூட சாப்பிடவில்லை.
“ஏய்... மாலு!” வினோலியா கூப்பிட்டாள்.
நடந்துக் கொண்டிருந்த மாலதி நின்று திரும்பினாள்.
“ம்... என்ன?”
“என்னை விட்டுட்டு நீ பாட்டுக்கு ஓடறே?”
“ஸாரி வினோ! ஸ்டமக்பெய்ன்... தாங்க முடியலே! என்னால பஸ்ல வர முடியாது. நான் வீட்டுக்கு ஆட்டோவுல போய்டலாம்னு இருக்கேன். இன்னைக்கு ஒருநாள் நீ தனியா போய்டு... வேறு வழியில்லே!”
மாலதியும், வினோலியாவும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். ஒரே பஸ்ஸில் பயணம் செய்பவர்கள். ஒரே பஸ் என்றாலும் வினோலியாவின் வீடு... நங்கநல்லூரில் இருந்தது. மாலதியின் வீடு பள்ளியிலிருந்து சற்று தூரத்தில்தான் இருந்தது.
வினோலியா தோழியை கவலையுடன் பார்த்தாள்.
“ரொம்ப முடியலியா மாலு! நானும் உன்கூட துணைக்கு வரட்டுமா?”
“சேச்சே... வேணாம்பா... உனக்கேன் கஷ்டம்? நானே போய்க்கறேன்!’’
“பார்த்து... ஜாக்கிரதையா போ... என்ன?”
“சரி!” என்று வலியுடன் அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டுச் சென்றாள் மாலதிஎதிர்வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக் கொண்டாள்.
எதேச்சையாக வாசலுக்கு வந்த அம்பிகா.
எதிர்வீட்டின் வாசலில் வந்து நின்ற ஆட்டோவை பார்த்தாள்.
ஆட்டோவிலிருந்து மாலதி வயிற்றை பிடித்துக் கொண்டு முகம் சுருக்கியபடி இறங்கினாள். ஆட்டோ ஒரு வட்டம் போட்டு திரும்பியது.
அம்பிகா அருகில் வந்தாள்.
“என்ன மாலதி? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”
“வயிறு வலிக்குது ஆன்ட்டி!”
“அப்படியா?” என்றபடி ஆச்சர்யமாய் பார்த்தவள் விபரம் புரிந்து முகம் மலர்ந்தாள்,
“வீட்டுக்குள்ளே போய் ஒரு ஓரமா உக்காரு! உங்கம்மாவுக்கு ஒரு போன் பண்ணிட்டு வந்திடறேன்” என்று பக்கத்தில் இருந்த மளிகை கடையை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்.
சிரத்தையுடன் வேலையில் மூழ்கி இருந்தாள் சரஸ்வதி. அவள் கையில் ஃபைல் இருந்தது. டேபிள் மீதிருந்த காபி ஆறிப்போய் ஆடைக் கட்டி இருந்தது.
சரஸ்வதி கார்ப்பரேஷன் ரெவின்யூ ஆபிஸில் சீனியர் அக்கவுண்டன்டாக பணிபுரிகிறாள்.
டேபிள் மீதிருந்த போன் அலறுகிறது.
சரஸ்வதி எடுத்தாள்.
“ஹலோ... சரஸ்வதி ஸ்பீக்கிங்!”
“ஹலோ... நான்தான் அம்பிகா பேசறேன்”
“என்ன, ஆச்சர்யமாயிருக்கு? நீங்களா பேசுவது?” வியப்பாய் கேட்டாள்