1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
1 °P sammeln
  • Format: ePub

காரை விட்டு இறங்கினார் மகாதேவன். கடற்கரை செல்லும் வழியெங்கும் கடைகள். கூட்டங்கள். டிரைவரை அழைத்தார்.
“மணி!”
“ஸார்!” என்றவாறு இறங்கி ஓடிவந்தான் மணிகண்டன்.
“இன்னிக்கு எதுவும் விசேஷ நாளா? இவ்ளோ கூட்டமா இருக்கே?”
“ஸார்! இன்னிக்கு பௌர்ணமி ஸார். கடல் அலைகளையும் நிலவையும் பார்க்க ரொம்ப அருமையா இருக்கும். அதான் இவ்வளவு கூட்டம்!”
“அப்போ கடற்கரையிலும் ரொம்ப கூட்டமா இருக்குமோ?”
“இருக்கும் ஸார். எதுக்கும் கொஞ்சம் நகர்ந்து போய் நடமாட்டம் கம்மியா இருக்கிற பக்கம் போனா நல்லது.”
“சரி, நான் பார்த்துக்கிறேன். நீ காரை ஓரமா நிறுத்திட்டு காபி எதுவும் சாப்பிடுறதா இருந்தா சாப்பிடு. நான்
…mehr

Produktbeschreibung
காரை விட்டு இறங்கினார் மகாதேவன். கடற்கரை செல்லும் வழியெங்கும் கடைகள். கூட்டங்கள். டிரைவரை அழைத்தார்.

“மணி!”

“ஸார்!” என்றவாறு இறங்கி ஓடிவந்தான் மணிகண்டன்.

“இன்னிக்கு எதுவும் விசேஷ நாளா? இவ்ளோ கூட்டமா இருக்கே?”

“ஸார்! இன்னிக்கு பௌர்ணமி ஸார். கடல் அலைகளையும் நிலவையும் பார்க்க ரொம்ப அருமையா இருக்கும். அதான் இவ்வளவு கூட்டம்!”

“அப்போ கடற்கரையிலும் ரொம்ப கூட்டமா இருக்குமோ?”

“இருக்கும் ஸார். எதுக்கும் கொஞ்சம் நகர்ந்து போய் நடமாட்டம் கம்மியா இருக்கிற பக்கம் போனா நல்லது.”

“சரி, நான் பார்த்துக்கிறேன். நீ காரை ஓரமா நிறுத்திட்டு காபி எதுவும் சாப்பிடுறதா இருந்தா சாப்பிடு. நான் போயிட்டு வர்றேன்.”

“நானும் வரவா ஸார்?” எனக் கேட்டான் பவ்யமாய்.

“இல்லை வேண்டாம். நான் கொஞ்ச நேரம் தனிமையா இருக்கணும். எம்மக நடந்த இடத்தில் கொஞ்ச நேரம் உட்காரணும். என்னைத் தேடாதே. பசிச்சா சாப்பிட்டு வெயிட் பண்ணு... சரியா? ''

“சரிங்க ஸார்!” என்றவாறு பின்பக்கம் கதவைத் திறந்தான்.

குனிந்து அந்தப் பொருளை எடுத்துக் கொண்டார் மகாதேவன். உடலும் உள்ளமும் பதறியது. கைகள் நடுங்க அதைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டார். பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்த பொருளைப் பார்த்ததும் உலர்ந்திருந்த கண்கள் மீண்டும் ஊற்றெடுத்தது. நடப்பதற்கு சற்றுத் தடுமாறினார்.

மணிகண்டன் குரல் கொடுத்தான். “ஸார்!”

“ம்...!”

“வந்து... சத்யா சார் உங்களைத் தனியா விடக்கூடாதுன்னு சொன்னாங்க. எப்பவும் என்னையும் கூடப் போன்னு சொன்னாங்க!” என்றான் தயங்கி.

வருத்தமாய்ப் புன்னகைத்தார் மகாதேவன். “எம்மேல உள்ள அக்கறையில் அப்படிச் சொல்லியிருப்பான். நீ என்னைப் பற்றிக் கவலைப்படாதே. ஆமா! வழக்கமா நிலா இங்கே வரும்போதெல்லாம் எங்கே சுற்றிப் பார்ப்பாள்? எந்த இடம் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்?”

“ஸார்! அம்மா எப்போ வந்தாலும் அதோ தெரியுதே அந்த பில்டிங்லதான் மணிக்கணக்கா நிற்பாங்க!” எனக் காட்டிய திசையைப் பார்த்து வியந்தார். அது ஒரு வெற்றுக் கட்டிடம். கோவிலோ சிலைகளோ கடைகளோ இல்லாத இடம்.

“இதுவா? இங்கே நின்று என்ன செய்வாள்?” என்றார் வியப்பாய்.

“ஸார்! இங்கேதான் மூணு கடலும் ஒண்ணாச் சேருதாம். அதுக்கு அடையாளமாத்தான் இந்த பில்டிங்க கட்டி வெச்சிருக்காங்களாம். இங்கே நின்னு கடலை அமைதியா ரசிக்கத்தான் நிலாம்மா பிரியப்படுவாங்க.”

மீண்டும் மனம் கனத்தது. நிலா எப்போதும் இப்படித்தான். அவள் ஒரு தனிமை விரும்பி. கூட்டமாய் இருக்கும் தியேட்டர்களுக்கு போக விரும்ப மாட்டாள். கேசட்டை வாங்கித் தன் அறையில் அமர்ந்து தனியாக படம் பார்ப்பாள். செவ்வாய், வெள்ளி அன்று கோவிலுக்குப் போகாமல் புதன்கிழமை மட்டுமே போவாள்.

கேட்டால், அன்னிக்குத் தாம்ப்பா கோவில்ல கூட்டமே இருக்காது. சாமியை நின்று நிதானமாய்ப் பார்க்கலாம் என்பாள். கல்யாண வீடு, விருந்து, விசேஷம் எங்கு என்று நடந்தாலும் வர மறுத்துவிடுவாள். அன்றே அதை மாற்றியிருக்க வேண்டும்.

தன் மகள் அமைதியே உருவானவள். அமைதியை விரும்புகிறாள் எனக் கவனியாமல் விட்டதால்தான் என் மகள் அமைதியாகி விட்டாளோ?

அப்போதே நாலு இடத்திற்கு அழைத்துச் சென்று அனைவரிடமும் பழக வைத்திருக்க வேண்டும். அப்படிப் பழகியிருந்தால் துணிச்சலும் தைரியமும் இயல்பாகவே வந்திருக்கலாம்.

பெற்றவனிடமே பேசத் துணிவில்லாமல் என் மகள் என்னைத் தவிக்கவிட்டு போயிருக்க மாட்டாள். எல்லாம் என்னால்தானே! செல்லமாய் வளர்த்த நான் அவளைத் தைரியமாய் வளர்க்கவில்லையே!

“ஸார்!” மணிகண்டன் குரல் கொடுக்க, திடுக்கிட்டு நிமிர்ந்தார்.