“அக்கா!” - கொஞ்சலாய் அழைத்தாள் மீரா. பரிட்சை பேப்பர் திருத்திக் கொண்டிருந்த ராதா தலையை நிமிர்த்தாமலே “ம்...!” என்றாள். இரண்டு வருடம் முன்னே பின்னே என்று பிறந்திருந்தாலும் உருவ ஒற்றுமை அச்சு அசலாய் ஒரே போல் அமைந்திருந்தது.
ராதாவிற்கு அலை அலையாய்ச் சுருள் கேசம். மீராவுக்குத் தளர்வாய்ப் பட்டுக் கூந்தல். “அம்மா திணறக்கூடாதுன்னுதான் அப்பாவோட சுருள் முடியை ராதா வாங்கிண்டு வந்திருக்கா!” தலைவாரி விடும் போதெல்லாம்
அம்மா சொல்லும் வார்த்தை இது. “ஹும்... அதுதான். எனக்குப் பெரிய தலைவலியாய்ப் போச்சி... இல்லேன்னா நான் எது செய்தாலும் அக்காமேல பழியைப் போட்டுட்டு தப்பிச்சிக்கலாம். உங்களாலயும் கண்டுபிடிக்க முடியாது!” வருத்தமான குரலில் மீரா சொல்ல, அம்மா முதுகில் பட்டெனப் போடுவாள்.
“எத்தனை குழந்தைங்க ஒரே மாதிரி இருந்தாலும் தாய் தன் குழந்தைகளைச் சரியா கண்டுபிடிச்சிடுவா. அதுவும் உன்னைக் கண்டுபிடிக்க பெரிய திறமை எதுவும் வேணாம். இந்த ஓட்டை வாயே போதும். ஒரு நேரமாவது வாயை மூடிக்கொண்டு இருக்கிறாயா? உன்னோடு பிறந்தவள்தானே இவளும்... இவ பேசுறது வீட்டை விட்டு வெளியே கேக்குதா! நீ பேசினா தெருவில நின்னாலே கேக்குது.”
“போங்கம்மா! வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும். ஊமையா இருந்தா தலையில மொளகா அரைச்சிடுவாங்க. ஏய் ராதா! நீ ஊமைக் கோட்டானா இருக்கிறதுக்கும் எனக்குத்தானேடி திட்டு விழுது. வாயைத் திறந்து பேசேன்!” ராதாவிடம் சீறுவாள் மீரா.
“அடிக்கழுதை! அவளை ஏன்டி மிரட்டுற. ஒரு வாயாடி போதாதா...! அவளாவது அமைதியா அடக்கமா இருக்கட்டும். அப்போதான்டி புகுந்த வீட்ல போய் நல்லா குடும்பம் நடத்த முடியும். நீயும் வாயைக் குறைச்சு அமைதியாக வாழப் பழகிக்கோ. அப்பத்தான் வாழ்க்கை நல்லா அமையும்.”
அம்மா சொன்னது போல் நடக்கவில்லையே... அமைதியாகவே இருந்த ராதா எதைச் சாதித்தாள்? எல்லாவற்றையும் இழக்கத்தானே செய்தாள். ஜன்னல் வழியாக வந்த தென்றல் ராதாவின் கூந்தலைக் கலைத்துச் சென்றது. தலை பின்னிக் கூந்தலோடு பூவும் சூடாமல் அக்கா இருந்ததே இல்லை எனலாம். படிக்கும்போதே கிளம்பிப் போகும் அவசரத்தில் ஒற்றை ரோஜாவைப் பறித்துக் காதோரமாய்ச் செருகிவிட்டுப் போவாள் மீரா. ராதா அப்படி அல்ல... காலையில் எழுந்து முற்றத்தில் படர விட்டிருக்கும் ஜாதியையும், முல்லையையும், மல்லிகை யையும் பறித்துப் பொறுமையாக அவற்றைக் கட்டிச் சாமி படங்களுக்குப் போட்டுவிட்டு அம்மா தலையில் துளி சூட்டிவிட்டு, தனது கூந்தலில் அம்சமாய் வைத்துக்கொண்டுதான் செல்வாள்.
“ராதா! இந்த யெல்லோ புடவைக்கு மேட்சாய் இந்த யெல்லோ ரோஸ் வெச்சிட்டுப் போயேன்!” எனும் மீராவிடம் புன்னகையாலே மறுத்துவிடுவாள். “வாசனை இல்லாத பூ எதுக்கு மீரா? அதெல்லாம் அழகுக்கு வளர்க்கலாம். ஆனா மல்லிகைப்பூ வெச்சாத்தான் தலையும் மணக்கும். அந்தப் பூவுக்கும் பெருமை!” என்று சொல்வாள்.
இன்று அந்தப் பூக்கள் எல்லாம் மாலையில் மலர்ந்து மறுநாள் வீணே உதிர்ந்து போகின்றன. உதிரும் முன் ராதாவிற்குத் தங்கள் வாசனையை ஜன்னல் வழியே வாரி வழங்கி விடுகின்றன. அதனாலேயே இரவு மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பாள் ராதா. நிலவொளியும் மல்லிகை மணமும் பூந்தென்றல் காற்றும் அவள் காதோடு ஆயிரம் கவிதைகள் சொல்லும். தன்னை மறந்து அதில் லயித்துப் போய் விடுவாள். இன்று அந்த ரசனைகள் அனைத்தும் இந்த மலர்களைப் போல் வாடி உதிர்ந்து விட்டனவோ!
“என்னடி! கூப்பிட்டு அரைமணி நேரமாச்சு. ஒன்னும் சொல்லாம இருக்கே!” பேப்பரை மடித்து மார்க் போட்டவாறே கேட்டாள் ராதா.
“ம்! ஆமாம், கூப்பிட்டேன் இல்ல? அக்கா! காலையில சீதாராமன் மாமா வந்திடுவாரு. நான் போகட்டுமா... இல்லை போக வேண்டாமா?” கேட்டவளைத் திரும்பிப் பார்த்தாள் ராதா. அவளது கண்கள் கட்டிலின் மீதிருந்த சூட்கேஸ் மீது சென்று மீண்டும் தங்கையின் முகத்தில் வந்து நின்றன. பின் அமைதியாக அடுத்த பேப்பரைப் பிரித்துத் திருத்த
ஆரம்பித்தாள்.
“இப்படி ஒண்ணும் பேசாம இருந்தா நான் எப்படி போறதாம். ஒண்ணு போன்னு சொல்லு... இல்லேன்னா போயிட்டு வான்னு சொல்லு...!” வேகமாகத் தொடங்கியவள் தமக்கையின் பார்வையால் அடங்கினாள்.