1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

சென்னை. அடையார் போட் கிளப் ரோட்டில் - சினிமா டைரக்டர் ஹரிஹரபுத்ரன் பங்களா. உதட்டில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க - பீர் வளர்த்துவிட்ட தொப்பையை - இடதுகை விரல்களால் செல்லமாய் வருடிக் கொண்டே - சுற்றிலும் உட்கார்ந்திருந்த பத்திரிகை நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். “வரிசையா மூணு சில்வர் ஜூபிளி படங்களைக் குடுத்திருக்கீங்க... இந்த வெற்றிக்கு எது காரணம்ன்னு நினைக்கறீங்க...?” “நான் எடுத்துக்கிட்ட கதையம்சம்தான்...” “இசைக்காகத்தான் படம் ஒடிச்சுன்னு சொல்றாங்களே...?” “சம்பந்தப்பட்டவங்க அப்படி சொல்ல வெச்சுருக்காங்க... என் படங்களோட வெற்றிக்கு காரணம் நல்ல கதைதான்... இந்தக் கருத்தை…mehr

Produktbeschreibung
சென்னை.
அடையார் போட் கிளப் ரோட்டில் - சினிமா டைரக்டர் ஹரிஹரபுத்ரன் பங்களா. உதட்டில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க - பீர் வளர்த்துவிட்ட தொப்பையை - இடதுகை விரல்களால் செல்லமாய் வருடிக் கொண்டே - சுற்றிலும் உட்கார்ந்திருந்த பத்திரிகை நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
“வரிசையா மூணு சில்வர் ஜூபிளி படங்களைக் குடுத்திருக்கீங்க... இந்த வெற்றிக்கு எது காரணம்ன்னு நினைக்கறீங்க...?”
“நான் எடுத்துக்கிட்ட கதையம்சம்தான்...”
“இசைக்காகத்தான் படம் ஒடிச்சுன்னு சொல்றாங்களே...?”
“சம்பந்தப்பட்டவங்க அப்படி சொல்ல வெச்சுருக்காங்க... என் படங்களோட வெற்றிக்கு காரணம் நல்ல கதைதான்... இந்தக் கருத்தை ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையே பட்டவர்த்தனமா எழுதியிருக்கு...”
“உங்க அடுத்த படம் என்ன...?”
“ஊமை புல்லாங்குழல்கள்...”
“லவ் ஸ்டோரியா...?”
“படத்தைப் பத்தி இப்ப எதுவும் சொல்றதுக்கில்லை...”
“ஹீரோ யாரு...?”
“என் படத்துக்கு ஹீரோ கதைதான்...”
“கமர்ஷியல் படமா… ஆர்ட் படமா...?”“ஓடினா... கமர்ஷியல் படம்... ஓடாட்டி... ஆர்ட் படம்னு சொல்லிக்கலாம்...”
“ஒரு பழம் பெரும் டைரக்டர் உங்களைப் பத்தி கருத்து தெரிவிக்கும்போது - ‘தலைக்கனம் பிடிச்சவர் ஹரிஹரபுத்ரன்’னு சொல்லியிருக்காரே...?”
“அவர் சொன்னது சரிதான்... ஏன்னா என்னோட - தலையில் நிறைய விஷயம் இருக்கிறதுனால - கனக்கத்தான் செய்யும்...”
“ஒரு பர்சனல் கேள்வி. கேக்கலாமா...?”
“கேக்க வேண்டாம்...”
“உங்க எதிர்கால லட்சியம் என்ன...?”
“எனக்கு மட்டுமில்லை... இந்த சினி ஃபீல்டில் இருக்கிற ஒவ்வொருத்தருக்கும்... பணம் சம்பாதிக்கிறதுதான் லட்சியம்... சினிமாக்காரங்ககிட்டே இதுமாதிரியான கேள்வியைக் கேட்காதீங்க... ரப்பிஷ்...!” கையிலிருந்த சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் இட்டு தீய்த்துக் கொண்டிருக்கும்போதே -
டீ பாயின் மேல் இருந்த அந்த டெலிபோன் கிணுகிணுத்தது.
ஹரிஹரபுத்ரன் ரிஸீவரை எடுத்தார்.
“ஹலோ...” மறுமுனையில் பெண் குரல்.
“அப்பா... நான் முகிலா பேசறேன்...”
ஹரிஹரபுத்ரன் உடம்பு பூராவும் மலர்ந்தார்.
“அடடே... நீயாம்மா? வழக்கமா ராத்திரி நேரம்தான் போன் பண்ணுவே... இப்ப என்னம்மா... திடீர்ன்னு...?”
“ஐயோ... அப்பா... நான்... இப்ப நியூயார்க்கிலிருந்து ஓவர்சீஸ் கால் மூலமா பேசலை...?”
“பின்னே...?”
“மீனம்பாக்கம் ஏர்போர்ட்டிலிருந்து...”ஆனந்தத்தில் அதிர்ந்தார் ஹரிஹரபுத்ரன்