1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
1 °P sammeln
  • Format: ePub

கு டும்பத்தில் ஆடவர்கள் வேலைக்குச் சென்றால் அங்கே சண்டையோ சச்சரவோ வருவதில்லை. காலையில் எழுந்து வேலைக்குச் செல்லும் ஆண் பணி முடிந்து களைத்து வருகையில் பதமாய்க் கவனித்து உணவு பரிமாறி உண்டு உறங்கி, மறுநாள் மீண்டும் வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும் நேரம் சண்டை போடவோ குற்றம் குறை காணவோ பொழுதும் இருக்காது. அவசியமும் இருக்காது. பொருளாதாரச் சிக்கலும் வராது. ஆனால் இதுவே ஒரு குடும்பத் தலைவன் வேலைக்குச் செல்லாமல் இருந்துவிட்டால் அனைத்தும் தலைகீழாகி விடும். பிரச்சனைகளின் ஆணிவேர் பொருளாதாரம். அதாவது வருமானம் இல்லாமை. இந்த இல்லாமை எல்லாச் சங்கடத்தையும் வரவழைக்கும்.
பெரியசாமியும் இந்த ரகம்தான். உடல்
…mehr

Produktbeschreibung
குடும்பத்தில் ஆடவர்கள் வேலைக்குச் சென்றால் அங்கே சண்டையோ சச்சரவோ வருவதில்லை. காலையில் எழுந்து வேலைக்குச் செல்லும் ஆண் பணி முடிந்து களைத்து வருகையில் பதமாய்க் கவனித்து உணவு பரிமாறி உண்டு உறங்கி, மறுநாள் மீண்டும் வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும் நேரம் சண்டை போடவோ குற்றம் குறை காணவோ பொழுதும் இருக்காது. அவசியமும் இருக்காது. பொருளாதாரச் சிக்கலும் வராது. ஆனால் இதுவே ஒரு குடும்பத் தலைவன் வேலைக்குச் செல்லாமல் இருந்துவிட்டால் அனைத்தும் தலைகீழாகி விடும். பிரச்சனைகளின் ஆணிவேர் பொருளாதாரம். அதாவது வருமானம் இல்லாமை. இந்த இல்லாமை எல்லாச் சங்கடத்தையும் வரவழைக்கும்.

பெரியசாமியும் இந்த ரகம்தான். உடல் உழைப்பில் அதிக நாட்டமும் ஆர்வமும் இல்லாதவர். வசதியாக இருந்தவரை உழைக்காமலேயே இருந்து பழகியதால் உடலும் வளைய மறுத்தது. குந்தித் தின்றால் குன்றும் குறையுமே. அப்படித்தான் பெரியசாமியின் சொத்துக்கள் விற்பனையாயின. சொத்துக்கள் போனபின் மனைவியின் நகைகள் காணாமல் போயின. இதில் லட்சுமியின் சம்மதமோ அபிப்பிராயமோ கேட்கப்படுவதில்லை. பிள்ளைகள் வளரும் வரை அவரைக் கேள்வி கேட்க ஆளில்லை. ஆனால் பிள்ளைகள் வளரும் போது, துணிமணி வாங்க அது இதென்று தேவை வரும்போது, பணப் பற்றாக்குறை பல சண்டைகளை விளைவித்தது. பெரியசாமி தொடங்கும் சண்டையை அவர்தான் முடித்தும் வைப்பார். ஒரே ஒரு வார்த்தை கேட்டு அனைவரின் வாயையும் அடைத்துவிடுவார். அதோடு அன்றைய போர் முடிவிற்கு வந்துவிடும் இன்றும் அதே முறையைக் கையில் எடுத்தார்.

“அப்போ உன் மாமனை நினைச்சுக்கிட்டுத்தான் கல்யாணம் வேண்டாம்னு தள்ளிப்போடுறியா? அவனைக் கட்டிக்கிட்டு என்ன செய்யப்போற நீ? எப்பவும் வயல்காடு, கரும்புத் தோட்டம்னு காடு கரையிலேயே பழியாக் கிடப்பவனை, ஒரு படிப்பறிவு இல்லாத முட்டாப்பயலைக் கட்டிக்கொண்டு கிணற்றடியிலும் மாட்டுத்தொழுவத்திலும் உன் காலத்தைக் கடத்தப் போகிறாயா? இதுக்கு நான் ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன். நான் பார்த்த மாப்பிள்ளையைக் கட்டிக்கொண்டால் அவர்களை வைத்தே மற்ற இரு பெண்களைக் கடத்தி விடுவேன். என் கனவில் மண்ணையள்ளிப் போட்டுவிடாதே. இந்தத் திருமணம் மட்டும் நடக்கவில்லையென்றால் நான் இதே உத்திரத்தில் கயிற்றில் தொங்கி விடுவேன். அப்புறம் தாயும் மகள்களுமாய் எவனைக் கட்டிக்கொண்டாலும் சரி!” - உச்ச ஸ்தாயியில் பெரியசாமி கத்த, “ஐயோ” - என வாயை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் லட்சுமி.

பாரதி கண்களை இறுக மூடிக்கொண்டாள். அப்பா தனது பிரம்ம அஸ்திரத்தை எய்துவிட்டார். கயிற்றில் தொங்கிவிடுவேன் என்ற ஒற்றைச் சொல் போதும். அம்மாவும் இனிக் கெஞ்சி அழுவாள். பாவம், அம்மா! நம்மால் அழ வேண்டாம். இந்த அப்பாவும்தான் என்னென்ன பேசுகிறார். போயும் போயும் மாமா உடனா தன்னை இணைத்துப் பேச வேண்டும். அவர் எனக்கு இன்னொரு தகப்பன் ஆயிற்றே. எப்படிப் பார்த்தாலும் மாமாவிற்கு முப்பத்து ஐந்து வயதிற்கும் மேல் இருக்கும். அவரைப் போய்ச் சந்தேகப்படலாமா? தன் படிப்பிற்காகச் செலவு செய்வதும் புதிது புதிதாய் ஆடைகள் வாங்கித் தருவதும் தவிர தவறான பேச்சோ பார்வையோ இல்லாத மாமாவை எப்படி அப்பா இப்படிப் பேசலாம். இதுவரை ஒரு துணி எடுத்துத் தந்திருப்பாரா? ஒரு நோட்டு... புத்தகம்? ஏன் அம்மாவிற்கு ஒரு முழம் பூ கூட வாங்கித் தந்ததில்லையே. மாப்பிள்ளை மட்டும் யார் கேட்டது இவரிடம்? இதில் மிரட்டல் வேறு. வெறுப்பால் முகத்தைச் சுழித்தாள்