1,99 €
inkl. MwSt.
**Unverbindliche Preisempfehlung des Herstellers
Sofort per Download lieferbar
payback
1 °P sammeln
  • Format: ePub

மகேந்திரன் கார்ப்பரேஷனில் கிளார்க்காக வேலை செய்து கொண்டிருக்கிறான். நல்ல மனிதன், நல்ல கணவன், நல்ல தந்தை! குழந்தைகள் மீதும், அகிலா மீதும் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறான். மனைவி சந்தோஷமும், குழந்தைகள் சந்தோஷமும்தான் அவனுக்கு முக்கியம். அகிலா தனக்கு மனைவியாய் கிடைத்தது தன் முன்னோர்கள் செய்த புண்ணியம் என்றே கருதினான்.! மகேந்திரனுக்குப் பெற்றோர் இல்லை. தாய்மாமனின் பராமரிப்பில்தான் வளர்ந்து, படித்து, உத்யோகத்திற்குப் போனான். அவர் தான் அகிலாவைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்தார். அகிலா பேரழகி! அடர்த்தியான நீண்ட கூந்தல் அவள் முக அழகை இன்னும் அதிகப்படுத்திக் காட்டியது. மகேந்திரன் கறுப்பு! ஆனால் மனசு…mehr

Produktbeschreibung
மகேந்திரன் கார்ப்பரேஷனில் கிளார்க்காக வேலை செய்து கொண்டிருக்கிறான்.
நல்ல மனிதன், நல்ல கணவன், நல்ல தந்தை! குழந்தைகள் மீதும், அகிலா மீதும் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறான். மனைவி சந்தோஷமும், குழந்தைகள் சந்தோஷமும்தான் அவனுக்கு முக்கியம்.
அகிலா தனக்கு மனைவியாய் கிடைத்தது தன் முன்னோர்கள் செய்த புண்ணியம் என்றே கருதினான்.!
மகேந்திரனுக்குப் பெற்றோர் இல்லை. தாய்மாமனின் பராமரிப்பில்தான் வளர்ந்து, படித்து, உத்யோகத்திற்குப் போனான்.
அவர் தான் அகிலாவைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்.
அகிலா பேரழகி! அடர்த்தியான நீண்ட கூந்தல் அவள் முக அழகை இன்னும் அதிகப்படுத்திக் காட்டியது.
மகேந்திரன் கறுப்பு! ஆனால் மனசு வெள்ளை. பார்க்க களையாக இருக்கும் சராசரி ஆண்மகன்.
மாமா தனக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷமாய் அகிலாவைத் தேடிப்பிடத்து ஒப்படைத்திருப்பதாகக் கருதிய மகேந்திரன் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான். அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்பதறிந்து அவள் கேட்கும் முன்பே வாங்கி வந்து அவள் மகிழ்வதைப் பார்த்து பூரித்துப் போகும் அன்பான கணவன்.
பதினோரு வருட தாம்பத்தியத்தில் அவன் ஒரு நாள் கூட, கடிந்தோ, முகம் சுருக்கியோ பேசியதில்லை. பெற்றோரை சிறிய வயதிலேயே இழந்து விட்ட மகேந்திரன் மனைவியை தாயாகவும் நேசித்தான்.
நிஜத்தில் சொல்லப் போனால் மகேந்திரனை விட, அவனை கணவனாய் அடைந்த அகிலாதான் அதிஷ்டசாலி எனலாம்.
அன்று அலுவலகத்தில் சம்பளத்தோடு சேர்த்து தீபாவளி போனஸும் தந்தனர்உடனே மகேந்திரன் அதை எப்படி செலவழிக்கலாம் என்று பட்ஜெட் போட ஆரம்பித்தான்...
ஒரு குறிப்பிட்ட தொகையை ரேவதியின் கல்லூரிப் படிப்பிற்கு உதவும் திட்டத்தில் பேங்கில் போட்டான். மீதிப் பணத்தில் அகிலாவுக்கும், குழந்தைகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கென துணிகள் எடுத்தான். அகிலாவிற்குப் பிடித்த பாதாம் அல்வாவை அரைகிலோ வாங்கிக் கொண்டு உற்சாகமாய் வீட்டிற்கு வந்தான்.
“அகில்... அகில்... மை டியர் அகில்”
“என்ன... ஐயா ரொம்ப துள்ளிக் குதிச்சிட்டு வர்றீங்க?” சிரித்தபடி வெளிப்பட்ட அகிலா தன்னை விசேஷமாய் அலங்கரித்துக் கொண்டிருந்தாள். தலை நிறைய ஜாதி மல்லிகை ப்ரூட் பாடி ஸ்ப்ரேயின் நறுமணம். மெல்லிய ஷிபான் சேலை.
“வாவ்!” என்று இடுப்பில் கைவைத்தபடி அவளை ஏற இறங்கப் பார்த்தான்.
“என்ன அப்படிப் பார்க்கறீங்க?”
“வாயடைக்க வச்சுட்டியே அகில்! ரேவதியும், ப்ரீத்தியும் - எங்கே?” அக்கம் பக்கம் பார்த்தபடி அவளை நெருங்கினான்.
அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அகிலா குறுஞ்சிரிப்புடன் பின்னே நகர்ந்தாள்.
“வந்ததும் வராததுமா என்ன இதெல்லாம்? ரேவதி ட்யூஷனுக்குப் போயிருக்கா... ப்ரீத்தி பக்கத்து வீட்லே விளையாடிட்டிருக்கா...!”
“அப்புறமென்ன?” இன்னும் நெருங்கினான்.
“ஹலோ... சார்! நான் உங்க பொண்டாட்டி! எப்பவும் உங்க கூடவே இருக்கிற பொண்டாட்டி. இந்த விளையாட்டெல்லாம் நைட்ல வச்சுக்குங்க! உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கீங்க. மொதல்ல குளிச்சிட்டு வாங்க!” அவன் மார்பில் கைவைத்து விளையாட்டாய் தள்ளிவிட்டாள்.
“ஹூம்...” பெருமூச்சு விட்டபடி பாத்ரூமை நோக்கி நகர்ந்தான்