1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
1 °P sammeln
  • Format: ePub

ராஜா சங்கீதாவின் கழுத்தில் தாலி கட்டி விட்டான். அவர்களது உபச்சாரத்தைத் தாங்க முடியவில்லை. அளவுக்கு அதிகமான பணிவும், செயற்கைத்தனமும் ராஜா வீட்டில் யாருக்குமே பிடிக்கவில்லை. முதல்நாள் ராத்திரியிலிருந்தே தொடர்ந்து வாண வேடிக்கை நடத்திக்கொண்டிருந்தார் சொக்கலிங்கம். பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தார். ராஜாவுக்கு ஒரு வகை உபச்சாரம்... அப்பா, அம்மாவுக்கு வேறு வகை என்று ஏகவாரியாக பிரித்து இருந்தார்கள். எல்லாம் முடிந்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சொக்கலிங்கம் வீடு அலங்கரிக்கப் பட்டிருந்தது. ராஜா கல்யாணம் முடிந்த களைப்பில் ‘அக்கடா’ என்று சாய்ந்திருந்தான். சகாயம், ஜெர்வின் அருகில் வந்தார்கள்.…mehr

Produktbeschreibung
ராஜா சங்கீதாவின் கழுத்தில் தாலி கட்டி விட்டான்.
அவர்களது உபச்சாரத்தைத் தாங்க முடியவில்லை. அளவுக்கு அதிகமான பணிவும், செயற்கைத்தனமும் ராஜா வீட்டில் யாருக்குமே பிடிக்கவில்லை.
முதல்நாள் ராத்திரியிலிருந்தே தொடர்ந்து வாண வேடிக்கை நடத்திக்கொண்டிருந்தார் சொக்கலிங்கம்.
பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தார்.
ராஜாவுக்கு ஒரு வகை உபச்சாரம்...
அப்பா, அம்மாவுக்கு வேறு வகை என்று ஏகவாரியாக பிரித்து இருந்தார்கள்.
எல்லாம் முடிந்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சொக்கலிங்கம் வீடு அலங்கரிக்கப் பட்டிருந்தது.
ராஜா கல்யாணம் முடிந்த களைப்பில் ‘அக்கடா’ என்று சாய்ந்திருந்தான்.
சகாயம், ஜெர்வின் அருகில் வந்தார்கள்.
“ராஜா! இன்னும் கொஞ்ச நேரத்துல சாந்தி முகூர்த்தம். நீ குழந்தை இல்லை. எல்லாம் தெரியும் உனக்கு. ஆனாலும் சொல்றோம். கிராமத்துப் பொண்ணு! அதிகம் தைரியம் இருக்காது. அவ மிரண்டு போற மாதிரி செயல்படாதே!”
“அண்ணா! நீங்க கவலையே பட வேண்டாம். எனக்கு களைப்பா இருக்கு. இன்னிக்கு எதுவும் நடக்காது!”
“அப்படியில்லைடா!”
சொக்கலிங்கம் வந்தார்“மாப்ளை ரெடியா?”
“தோ... வந்துட்டே இருக்கான்.”
அவர் போய்விட்டார். பட்டுவேட்டி, சட்டை சகிதம் தனியறைக்குள் நுழைந்தான் ராஜா.
சற்று நேரத்தில் சங்கீதா உள்ளே வர, கதவு தாளிடப்பட்டது வெளியே.
பால் செம்புடன் குனிந்த தலை நிமிராமல் வந்த சங்கீதா, அதை வைத்துவிட்டு, நமஸ்கரித்தாள்.
“எழுந்திரு! தமிழ் சினிமால்லாம் வேண்டாம். இயல்பா இருப்பம். நிறையப் பேசுவோம்! இப்படி வந்து உட்காரு!”
சங்கீதா கூச்சத்துடன் உட்கார்ந்தாள்.
“என்னைப்பாரு! எத்தனை நேரம் நிலத்தையே பார்த்துட்டு இருப்பே?”
“எனக்கு வெக்கமா இருக்கு!”
“அப்ப படுத்துத் தூங்கலாமா?”
“உங்க இஷ்டம்!”
அருகில் நெருங்கி, அவள் முகவாயைத் தொட்டு மெல்ல நிமிர்த்தினான்.
அவள் முகத்தை நேருக்கு நேர் நெருக்கத்தில் பார்த்தான்.
புருவத்துக்கு மேல் புள்ளிக் கோலமெல்லாம் போட்டு, அழகான முகத்தை அசிங்கப்படுத்தி இருந்தார்கள்.
‘சொல்லலாமா?’
‘இதுமாதிரி நகை மூட்டையாக நாளை முதல் இருக்காதே என்று சொல்லி விடலாமா?’
“அவ கிராமத்துப் பொண்ணு! எடுத்த எடுப்புல உன் அறிவு ஜீவித்தனத்தைக் காட்டி அவளை மிரள வைக்காதே!”
ஜெர்வின் சொல்லியிருந்தாள்