1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

க ல்வராயன் மலை!
அந்த மலைத்தாயின் மடியில்... சுகமாய்த் துயில்கொள்ளும் நிலமகளின் முகத்தில்... அன்பின் உயிர்நிலை மிளிர்கிறது!
அழகிய மலையடிவாரக் கிராமம் 'சக்ரவர்த்திபுரம்!'
இயற்கையின் இனிய சூழலில் அமைந்திருக்கும்... அந்தச் சுந்தர பூமி... சொர்க்க பூமி... தன்னைக் காண வருவோரையெல்லாம்... பச்சைக் கம்பளம் விரித்து... குளுமையுடன் வரவேற்றுக் கொண்டிருக்கிறது!
எங்கும் பசுமை!
எங்கும் செழுமை!
எங்கும் இனிமை!
காண்போரின் கண்களைக் கட்டியிழுத்துக் கொண்டிருக்கிறாள், நிலமகள்!
சிலுசிலுக்கும் சாரலும்... சலசலக்கும் காற்றும் நிலவும்... மலையும் மலைசார்ந்த, 'குறிஞ்சிப் பூமி!'
இயற்கையும்,
…mehr

Produktbeschreibung
ல்வராயன் மலை!

அந்த மலைத்தாயின் மடியில்... சுகமாய்த் துயில்கொள்ளும் நிலமகளின் முகத்தில்... அன்பின் உயிர்நிலை மிளிர்கிறது!

அழகிய மலையடிவாரக் கிராமம் 'சக்ரவர்த்திபுரம்!'

இயற்கையின் இனிய சூழலில் அமைந்திருக்கும்... அந்தச் சுந்தர பூமி... சொர்க்க பூமி... தன்னைக் காண வருவோரையெல்லாம்... பச்சைக் கம்பளம் விரித்து... குளுமையுடன் வரவேற்றுக் கொண்டிருக்கிறது!

எங்கும் பசுமை!

எங்கும் செழுமை!

எங்கும் இனிமை!

காண்போரின் கண்களைக் கட்டியிழுத்துக் கொண்டிருக்கிறாள், நிலமகள்!

சிலுசிலுக்கும் சாரலும்... சலசலக்கும் காற்றும் நிலவும்... மலையும் மலைசார்ந்த, 'குறிஞ்சிப் பூமி!'

இயற்கையும், மனிதனும் இணைந்து வாழ்கிற வாழ்க்கைக்கான சான்றாகச் 'சக்ரவர்த்திபுரம்' திகழ்கிறது!

'அர்ஜுன் இயற்கை உயிராற்றல் வேளாண் பண்ணை' நம்மை அன்புடன் வரவேற்கும்!

அர்ஜுன் எம்.எஸ்ஸி. அக்ரி முடித்து... வாழையைப் பற்றி ஆராய்ந்து விவசாயத்திலே டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளான்!

இயற்கை வேளாண்மையை உயிர் மூச்சாய்க் கொண்டவன்!

அங்கே அவனுக்கு ஐந்நூறு ஏக்கருக்கு மேல் விவசாய நிலமிருக்கிறது.

வேற்றுமை பார்க்காது... வறுமையில் வாடும் 150 குடும்பங்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்து... அதே நிலத்தில் ஸ்ட்ராங்கான வீடும் கட்டிக் கொடுத்திருக்கிறது.

நிலம் அர்ஜுனுக்குச் சொந்தம்! அதில் உழுது, விதைத்து, அறுவடை செய்து உண்ணுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு!

அவர்களுக்குக் காளை மாடு, பசுமாடுகள் வாங்க உதவி செய்து கொண்டிருக்கிறான்!

அங்கு வசிக்கும் மக்களின் ஜீவ நாடியே அர்ஜுன் தான்! அவர்கள் எந்தக் குறையுமின்றி நிம்மதியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!

அவன் இருநூறு ஏக்கரில் விவசாயம் செய்கிறான்!

அந்த மக்களே... அவன் பண்ணையின் விவசாய வேலைகளுக்கு வருகிறார்கள்!

நிறைவான கூலியைப் பெற்று இன்பமாய்ச் சுய கௌரவத்தோடு வாழ்கிறார்கள்!

அவர்களின் பிள்ளைகள் படிக்கவே... தரமான பள்ளியைக் கட்டி... அருமையாய் நிர்வகித்து வருகிறான்!

தொண்டுகள் பல ஆற்றி வருவதுடன்... அங்கே ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம், முதியோர்களுக் கான இல்லம் என்று செயல்படுகிறது!

அங்குள்ளவர்கள் நோய் நொடி என்றால் இரண்டு கிலோ மீட்டர் பயணித்து எடுத்தவாய் நத்தம் பிரைமரி ஹெல்த் சென்டருக்கோ... அல்லது ஐந்து கிலோ மீட்டர் பயணித்துக் கச்சிராயபாளையம் பிரைமரி ஹெல்த் சென்டருக்கோ... அல்லது பெரிய நோய் என்றால் கள்ளக்குறிச்சி ஜி.ஹெச்சுக்கோ செல்ல வேண்டும். கள்ளக்குறிச்சிக்குப் போக வேண்டும் என்றால் பதினைந்து கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டும்!

அங்குள்ள மக்கள் ஆஸ்பத்திரிக்குக் கஷ்டப்பட்டுத்தான் செல்வர்!

இல்லத்துக் குழந்தைகளுக்கும்... பெரியவர்களுக்கும்... ஒரு நோய் நொடியென்றால் அங்கேதான் அழைத்துச் செல்ல வேண்டும்!

அந்தச் சிரமங்களையெல்லாம் பார்த்து... தானே ஆஸ்பத்திரியும் ஆரம்பித்தால் என்ன என்ற எண்ணம் தோன்ற... உடனே செயல்படுத்தினான்.

அதனால், அந்தக் கிராம மக்களுக்கும், இல்லத்தவர்களுக்குமாகவே... அந்த இலவச மருத்துவமனையைக் கட்டியுள்ளான்!

இரண்டு டாக்டர்... இரண்டு நர்ஸ் போதும்.

அதற்கான நேர்முகத் தேர்வு பத்து மணிக்கு உள்ளது!

அதற்குள் பண்ணையையும்... அங்குள்ள மக்களையும் பார்த்து வர... பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான், அர்ஜுன்.

அர்ஜுன் அங்குள்ள மக்களுக்கு இறைவன்... தேவ தூதன் என்றே சொல்லலாம்!

இயற்கை விரும்பி! இயற்கையை உயிராய் நேசிக்கிறான்!

செயற்கை அவனுக்கு எதிரி!

இயற்கை உரங்களைப் பயன்படுத்தி... இயற்கை வேளாண்மை செய்து கொண்டிருக்கிறான்!

ஒரு துளி இரசாயன விஷம் கலக்காமல்... மண் அங்கே புது ஜனனம் எடுத்துக் கன்னி கழியாத நிலமாய்க் காட்சியளிக்கிறது!

அந்தப் பகுதி மக்களையும்... பிறகு விழுப்புரம் மாவட்டம் முழுவதையும் மாற்றியவன்... வெறியோடு சேலம், கடலூர் மாவட்டத்தையும் முற்றிலுமாய் இயற்கை வேளாண்மைக்கு மாற்றியுள்ளான்!

மற்ற மாவட்டங்களையும் மாற்றுவதற்காகத் தீவிரமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்!