1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
1 °P sammeln
  • Format: ePub

அ ன்பு... அளவிட முடியாத சக்தியும் பெரும் வலிமையும் வாய்ந்தது.
அந்த அன்பால் எப்பேர்பட்ட மலையளவு குணக் கேடனைக் கூட... மடுவளவாய் ஆக்கிவிட முடியும்! அன்புக்கு அடிமையாகாதோர் இவ்வுலகில் யாருமே இருக்கமாட்டார்கள்! அத்தகைய அன்பு நம்மிடையே மலையளவு குவிந்து கிடக்கிறது. நெஞ்சில் அள்ள அள்ளக் குறையாதது, அன்பு மட்டுமே! அந்த அன்பை பிறருக்கு வாரி வழங்குவதில் தயக்கம் காட்டக்கூடாது! தாராளமாய் அன்பை அனைவரிடத்திலும் விதைக்க வேண்டும்! அப்போதுதான் மீண்டும் அதே அன்பை ஆனந்தமாய் அறுவடை செய்ய முடியும்!
அன்பு காட்டக்கூடத் தெரிய வேண்டும்! அன்பு காட்டுவது கூட ஒரு கலைதான்! அந்தக் கலையை அறிந்தவர்களை மக்கள்
…mehr

Produktbeschreibung
ன்பு... அளவிட முடியாத சக்தியும் பெரும் வலிமையும் வாய்ந்தது.

அந்த அன்பால் எப்பேர்பட்ட மலையளவு குணக் கேடனைக் கூட... மடுவளவாய் ஆக்கிவிட முடியும்! அன்புக்கு அடிமையாகாதோர் இவ்வுலகில் யாருமே இருக்கமாட்டார்கள்! அத்தகைய அன்பு நம்மிடையே மலையளவு குவிந்து கிடக்கிறது. நெஞ்சில் அள்ள அள்ளக் குறையாதது, அன்பு மட்டுமே! அந்த அன்பை பிறருக்கு வாரி வழங்குவதில் தயக்கம் காட்டக்கூடாது! தாராளமாய் அன்பை அனைவரிடத்திலும் விதைக்க வேண்டும்! அப்போதுதான் மீண்டும் அதே அன்பை ஆனந்தமாய் அறுவடை செய்ய முடியும்!

அன்பு காட்டக்கூடத் தெரிய வேண்டும்! அன்பு காட்டுவது கூட ஒரு கலைதான்! அந்தக் கலையை அறிந்தவர்களை மக்கள் சமுதாயத்தில் விரல் விட்டு எண்ணி விடலாம்!

அன்பை பகைவர்களிடமும் கூட செலுத்த வேண்டும்! இவ்வாறு பகைவரிடமும் அன்பு செலுத்த... நாட்டில் பகைமையும், பழி உணர்ச்சியும், வன்முறையும், தீவிரவாதமும் அடியோடு அழிந்து விடும்!

'அன்பில்லாதவர்களிடம் சுயநலத்தை மட்டுமே காணலாம்!'

'அன்புடையவர்களிடம் பிறர் நலம் ஓங்கி, உயர்ந்து வளர்ந்திருக்கும்!'

அப்பாகூட சுயநலவாதிதான்! அவளுக்குத் தெரிந்து அன்பாய், பாசமாய் பேசியதில்லை! இழுத்து வைத்து கொஞ்சியதில்லை!

அவருடைய வார்த்தைகளில் மென்மை இருக்காது! அதிகாரத்தோடும், கட்டளையாயும்தான் பேசுவார்!

அக்கா திவ்யா அப்பாவை எதிர்த்து இதுவரைப் பேசியதே இல்லை. மானசாவும் அப்படித்தான் இருந்தாள். படிப்பு விஷயத்தில் மட்டும்... அவரிடம் பணிந்து போகப் பிடிக்கவில்லை!

மானசா தந்தையிடம் பேசுவதேயில்லை!

முகம் வாடி அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். உடல் மெலிந்து போனாள்!

சிவசங்கரனின் கண்ணிலும், கருத்திலும் மானசாவின் கோலம் பட்டது. அவருக்குக் கூட இது கஷ்டமாய் இருந்தது.

ஒரு மாதம் கடந்து... ஒருநாள்...

மானசாவை அருகில் அழைத்துப் பேசினார்.

"மானு... படிச்சி என்னம்மா செய்யப்போறே?" என்று மெதுவாய் பாசத்தோடு கேட்க... சட்டென்று கண்கள் பொத்துக் கொண்டது.

“அத்தானை படிக்க வைத்தீர்கள்! அக்காவை படிக்க வைத்தீர்கள்! எனக்கு மட்டும் முதுகலைப் படிப்பு மறுக்கப்படுவதேன்? ஒரு கண்ணுல வெண்ணெய்யும், மறு கண்ணுல சுண்ணாம்பும் வைக்கலாமா?"

“மானு... அப்போ நாமெல்லாம் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டு இருந்தோம்! படிச்சால் உதவுமேன்னு அவர்களைப் படிக்க வைத்தேன்! இன்றைக்கு அவர்கள் நிறைய சம்பாதிக்கிறாங்க! எக்கச்சக்கமான பணம் இருக்கு! நல்ல பையனாய் பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன்! நிறைய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரேன்! கட்டிட்டுப் போய் சந்தோசமா குடும்பம் நடத்து!"

“அப்பா... ப்ளீஸ்ப்பா... இது ஒன்றுக்கு மட்டும் அனுமதியுங்க! படிச்சி முடித்ததும்... நீங்க கை காட்டற மாப்பிள்ளையை மறுபேச்சே பேசாமல் கட்டிட்டுப் போய் குடும்பம் நடத்தறேன்!”

“நான் படிக்கணும்ப்பா!” என்று அழுதவளை கண்ட சிவசங்கரனுக்குக் கொஞ்சம் கஷ்டமாய் போய்விட்டது.

அவரின் திடத்தை மகளின் பிடிவாதம் வெல்ல...

"கல்லூரி திறந்து ஒரு மாதம் ஆகிறது. அட்மிஷன் முடிந்திருக்குமே மானு! என்ன செய்யலாம்?”

அப்பா கேட்க... மானசா சந்தோசமானாள்.

"ப்ளீஸ்ப்பா... எங்காவது எனக்காக ஒரு இடம் இல்லாமல் போகாது!"

“சரி முயற்சிக்கலாம்! போ... போய் நல்லா சாப்பிடு! சந்தோசமாய் இரு!”

'அப்பாவா இப்படிப் பேசுகிறார்' என்று மானசா அதிசயப்பட்டாள்.

இந்த நல்ல செய்தியைச் சொல்ல... தாயையும், அத்தையையும் தேடி ஓடினாள்.