மறுநாள்...
பகலெல்லாம் சூரியனின் கதிர் வீச்சுத் தாங்காமல்... களைத்துச் சோர்ந்திருந்த பூமிக் குழந்தை... இரவு துடிப்பாய்... துள்ளலாய்... பனியில் நனைந்த புத்தம் புது ரோஜா போலக் காட்சியளித்தது.
இன்று கௌசல்யா எட்டு மணியாகியும் வரவில்லை. தவிப்பில் அர்ச்சனாவின் நிமிடங்களைக் கரைத்து விட்டு... ஒரு எட்டரை மணி வாக்கில்... ஒரு இளைஞனுடன் டூவீலரில் வந்து இறங்கினாள்.
அந்த இளைஞன் அழகாய் இருந்தான். வண்டியைச் சர்ரென்று திருப்பிக் கையாட்டி விடை பெற்றது... அர்ச்சனாவின் இதயத்துள் பழையவற்றைக் கிளறிக் காயப்படுத்தியது.
“கௌசல்யா... யாருடி அவன்?” பயத்துடன் கேட்டாள்.
“என் பிரண்ட்மா!” அலட்சியமாய்ப் பதில் வந்தது.
“பத்திரிகைக்காரங்க கண்ணில் பட்டால்... படமெடுத்துப் போட்டு... இல்லாதது பொல்லாததை எழுதிவைத்தால்... உன் அப்பாவுக்குத்தானே அசிங்கம்!”
“அவன் வெறும் ப்ரண்ட்தான்! சும்மா கத்தாதேம்மா...! கடற்கரை போய்க் கொஞ்ச நேரம் பேசிட்டு வந்தோம்! அதைத் தப்பா எடுத்துட்டு... ஏன் பத்ரகாளியா ஆடறே?”
“ஏய், இந்த கெட்டபழக்கத்தை விட்டுடு! எங்களைக் கொல்லாதேடி! அப்பாட்ட நீ லேட்டாய் வந்ததைச் சொல்ல மாட்டேன்! நாளையில இருந்து காலேஜ் விட்டதும்... நேரே வீட்டுக்கு வர வேலையைப் பார்! புரியுதா?” சீறிவிட்டுச் சென்றாள், அர்ச்சனா.
அதற்கு அடுத்தநாள்... அன்புவும் வந்துவிட, கௌசல்யா வந்த பாடில்லை.
“கௌசல்யா இன்னுமா வரலை? ஏதாவது ப்ரண்டுங்க வீட்டுல பங்ஷன்னு போயிருப்பாளா?” பயந்து பதற்றத்துடன் கேட்டான்.
'இன்று அன்புவே கண்டு கொள்வான். கண்டதும் மகளை நினைத்து வருந்துவான். கடவுளே! அன்பு வருந்தாமல் காப்பாற்று! கௌசல்யா அந்தப் பையனோடு வந்து இறங்கக் கூடாது! கடவுளே... கடவுளே...!' மனதிற்குள் வேண்டிக் கொண்டிருக்க...
அதே இளைஞனோடு ஜோடியா... டூவீலரில் கட்டிப் பிடித்துக் கொண்டு வந்து... இறங்கி... அன்பு அங்கே இருப்பதைக் கண்டு... அந்த இளைஞனுக்குக் காற்றிலே முத்தத்தைப் பறக்க விட்டு... அவன் திரும்பிப் போகும்வரை கையாட்டி... விடைகொடுத்து மெதுவாய் வந்தாள்.
எளிதில் கோபமடையாத அன்பு... அவள் அலட்சியம் கண்டு சட்டென்று கோபமானான்.
“என்ன கௌசல்யா...? ஏன் லேட்? கல்லூரி விட்டதும் நேரே வீடு வராமல்... சரி... யார் அந்தப் பையன்? உன்னோட படிக்கிறானா?”
“இல்லே! காலேஜ்ல சீனியர்! மருத்துவம் நான்காவது வருடம் படிக்கிறான்!”
“அவனோட எங்கே போன?”
“ம்... கடற்கரையில் கால் புதையப் புதைய... ஓடிப் பிடிச்சி காதல் விளையாட்டு விளையாடிட்டு வரேன்!” நக்கலாய்ப் பதில் வந்தது.
“ஏய்...” என்று அர்ச்சனா கை ஓங்கி அருகில் போக...
“அர்ச்சனா...! நான் கேக்கறேன் இல்ல. நீ ஏன் அவசரப்படுகிறாய்? வாம்மா... வந்து உட்கார்!” என்று கௌசல்யாவை அமர வைத்து... அருகில் அமர்ந்தான்.
அலையலையாய்ப் பொங்கி எழுந்த கோபத்தை... எழுந்த வேகத்திலேயே தன்னுள் போட்டுப் புதைத்துக் கொண்டான்.
“அப்பாகிட்ட எந்தப் பயமோ... அச்சமோ வேண்டாம்! அலட்சியமும் வேண்டாம்! புரியுதா...? அந்தப் பையன் யார்?” மெதுவாய்க் கேட்டான்.
கௌசல்யா மௌனம் காத்தாள்.
“அவன் உன் நண்பனா? நண்பன்னால் அவனோட இவ்வளவு நேரம் பேசிட்டு வந்தது தப்பில்லே!”
“என்னங்க நீங்க?” - அர்ச்சனா இடைப்புக...
“கொஞ்சம் பொறு அர்ச்சனா! சின்னப்பிள்ளை! ஏன் இப்படிக் கோபப்படறே? சரி, கௌசல்யா... வெறும் ப்ரண்ட் மட்டும் தானா? உண்மையை மறைக்காமல் சொல். நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன்! தப்பிருந்தா திருத்தி... உனக்குப் புரிய வைப்பேன்!”
“ப்ரண்ட் மட்டுமில்லே... என் காதலனும் கூட! நாங்க ஒருத்தரை ஒருத்தர் டீப்பா லவ் பண்றோம்!” கௌசல்யா மௌனம் கலைய... அர்ச்சனா அழுதாள்.
“என் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்றாளே! ஐயோ...!”
“அர்ச்சனா! இப்போ என்ன நடந்துடிச்சின்னு அழறே? காதல் ஒண்ணும் தப்பில்லே! ஆனால் விபரம் தெரியாத வயதில் வரது காதலில்லே! இனக்கவர்ச்சி! மெடிக்கல் படிக்கிறே! ரொம்ப கஷ்டமான கோர்ஸ்! நீ படிப்பை மட்டும் பார்!” அன்பு அழுத்தமாய்ச் சொல்ல...
“நான் அவனைக் காதலிப்பேன்! கல்யாணமும் பண்ணிப்பேன்!”
“வேண்டாம் கௌசல்யா...!” அவள் முன் கண்ணீரோடு வந்த அர்ச்சனாவை அலட்சியமாய்ப் பார்த்தாள்.
“வேண்டாம்ன்னு சொல்ல... உனக்கு அருகதை இல்லேம்மா! உன் கல்யாணம் எப்படிப் பட்டதுன்னு கேட்டப்ப எல்லாம் லவ் மேரேஜ்ன்னு சொன்னீயே! என் அப்பா இறந்ததும்... இவரைக் கட்டிட்டு வாழறீயா? இது மட்டும் நல்லாவா இருக்கு? நான் வேண்டாம்ன்னா... இவரை விட்டுடுவீயா? காதல் பத்தி... உனக்கு என்ன தெரியும்?” என்ற கௌசல்யா உள்ளே ஓடினாள்.