1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

துவைத்து, துவைத்து கட்டுவதால் பழுப்பேறிய வேஷ்டி, மேலே கதர் துண்டு, உழைத்து, தேய்ந்து தளர்ந்த கைகள், வயது மூப்பின் காரணமாக முகத்தில் ஏற்பட்ட சுருக்கங்கள். கருப்பு நிறம் தான் என்றாலும், வெய்யிலில் நின்று வேலை பார்த்ததால், மேலும் கருத்த தேகம், வாசல் திண்ணையில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் அப்பாவை பார்த்தாள் மித்ரா. “என்னம்மா, எல்லா வேலையும் முடிஞ்சுதா. அடுத்த புதன்கிழமை நிறைஞ்ச அமாவாசை. நாள் நல்லாயிருக்கு. அன்னைக்கு கடையை ஆரம்பிச்சுடாலாமா” “சரிப்பா, எல்லாம் தயாரா இருக்கு. டைலரிங் ஷாப்பும் சேர்த்து வைக்கிறதாலே, இடம் தான் கொஞ்சம் நெருக்கமாக இருக்கு. பெரிசா இருந்த இடம் மெஷின்வாங்கி போட்ட பிறகு…mehr

Produktbeschreibung
துவைத்து, துவைத்து கட்டுவதால் பழுப்பேறிய வேஷ்டி, மேலே கதர் துண்டு, உழைத்து, தேய்ந்து தளர்ந்த கைகள், வயது மூப்பின் காரணமாக முகத்தில் ஏற்பட்ட சுருக்கங்கள்.
கருப்பு நிறம் தான் என்றாலும், வெய்யிலில் நின்று வேலை பார்த்ததால், மேலும் கருத்த தேகம், வாசல் திண்ணையில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் அப்பாவை பார்த்தாள் மித்ரா.
“என்னம்மா, எல்லா வேலையும் முடிஞ்சுதா. அடுத்த புதன்கிழமை நிறைஞ்ச அமாவாசை. நாள் நல்லாயிருக்கு. அன்னைக்கு கடையை ஆரம்பிச்சுடாலாமா”
“சரிப்பா, எல்லாம் தயாரா இருக்கு. டைலரிங் ஷாப்பும் சேர்த்து வைக்கிறதாலே, இடம் தான் கொஞ்சம் நெருக்கமாக இருக்கு. பெரிசா இருந்த இடம் மெஷின்வாங்கி போட்ட பிறகு சின்னதா போன மாதிரி தெரியுது.
இருந்தாலும் ஏரியா நல்லா இருக்கு, ஜனங்க அதிகம் நடமாடாற இடம். பக்கதிலேயே பஸ் ஸ்டாண்டு எனக்கு மனசுக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா...”
“அதுதாம்பா வேணும். எந்த ஒரு காயத்திலும் ஆர்வமும், ஈடுபாடும் ரொம்ப அவசியம். உனக்கிருக்கிற திறமைக்கு நீ நல்லா வருவேம்மா”
“இருந்தாலும், நமக்கு சாப்பாடு போட்ட நிலத்தை வித்துட்டோமேன்னு தான் மனசுக்கு வருத்தமா இருக்குப்பா”
“இதிலே வருத்தப்பட என்னம்மா இருக்கு. இனி நிலத்தில் வேலை செய்யற தெம்பு எனக்கில்லை. உழைச்ச வயசு முடிஞ்சாச்சு. அந்த பணம் உன்னோட வாழ்க்கைக்கு பயன்படட்டும்னு தான் வித்தேன்.”
“அண்ணனுக்கு இதிலே கொஞ்சமும் விருப்பமில்லை. நிலத்தை விற்றது கூட பெரிசில்லை, நான் சுயமா தொழில் ஆரம்பிக்கிறது சுத்தமா பிடிக்கலை.“இங்கே பாரு மித்ரா. உங்க ரெண்டு பேருக்கும் சம உரிமை இருக்கு. அவன் ஆண், நீ பெண் அவ்வளவு தான். நிலம் வித்த பணத்தை சரிபாதி அவன்கிட்டே கொடுத்துட்டேன்.
இன்னும் சொல்ல போனால் இனிமேதான் உன் கல்யாணம் மற்ற செலவுகள் இருக்கு.
பொறுப்புள்ள பிள்ளையா எதுவும் செய்ய நினைக்காம, நீ செய்யற வேலையிலும் முட்டுகட்டைபோட்டா எப்படி.
நீ அவனை பத்தி கவலைபடாதே. உன் கவனமெல்லாம், உன்னால் முடியுமான்னு இன்னைக்கு உன்னை ஏளனமாக பாக்கறவங்க முன்னால், நல்ல அளவில் வந்து சாதித்து காட்டுவதில் தான் இருக்கணும். புரியுதா”
“சரிப்பா நீங்க எப்ப சென்னைக்கு வர்றீங்க”
“எதுக்குமா. அதுக்குள்ள என்னை கூப்பிடற. முதலில் கடையை ஆரம்பிச்சு, அதை நடத்துவதில் கவனமா இரு. இன்னும் இரண்டு மாசம் போகட்டும், நானும் இந்த கிராமத்தை காலி பண்ணிட்டு, உன்னோடு வந்திடறேன். போதுமா”