1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

ரோஜா மாலைக்கு நடுவில் கம்பீரமாக புன்னகைத்த படி காட்சி தரும் கணவனை பார்க்கிறாள் சிவகாமி. உங்க உழைப்பிலும், முயற்சியில் உருவானது இந்த குடும்பம். இன்னைக்கு ஸ்பின்னிங் மில், நாற்பது கடை வாடகைக்கு விட்டிருக்கும் பெரிய மால், இதோ இத்தனை பெரிய கடல் போன்ற வீடு எல்லாமுமே நீங்க சம்பாதித்து கொடுத்தது. நம்ப இரண்டு மகன்களும் இதை கட்டி காக்கிறாங்க. எந்த குறையுமில்லாமல் இரண்டு பேருக்கும் கல்யாணமும் பண்ணி வச்சுட்டு தான் நீங்க போனீங்க... இன்னைக்கு பேரன், பேத்தின்னு நம்ப வம்சம் தழைச்சுட்டு இருக்கு. இருந்தாலும் எனக்கு நிறைவு இல்லைங்க... மனசெல்லாம் பாரமாக இருக்கு. எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத மாதிரியான உணர்வு…mehr

Produktbeschreibung
ரோஜா மாலைக்கு நடுவில் கம்பீரமாக புன்னகைத்த படி காட்சி தரும் கணவனை பார்க்கிறாள் சிவகாமி.
உங்க உழைப்பிலும், முயற்சியில் உருவானது இந்த
குடும்பம். இன்னைக்கு ஸ்பின்னிங் மில், நாற்பது கடை வாடகைக்கு விட்டிருக்கும் பெரிய மால், இதோ இத்தனை பெரிய கடல் போன்ற வீடு எல்லாமுமே நீங்க சம்பாதித்து கொடுத்தது. நம்ப இரண்டு மகன்களும் இதை கட்டி காக்கிறாங்க. எந்த குறையுமில்லாமல் இரண்டு பேருக்கும் கல்யாணமும் பண்ணி வச்சுட்டு தான் நீங்க போனீங்க... இன்னைக்கு பேரன், பேத்தின்னு நம்ப வம்சம் தழைச்சுட்டு இருக்கு. இருந்தாலும் எனக்கு நிறைவு இல்லைங்க... மனசெல்லாம் பாரமாக இருக்கு. எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத மாதிரியான உணர்வு தான் இருக்குங்க. இதுக்கெல்லாம் காரணம் என்னன்னு உங்களுக்கே தெரியும்.
நம்ப மூணாவது மகன் சுதாகர். இருபதைந்து வயதை
தொட்டுட்டான். அவன் கிட்டே பெரிசா எந்த மாற்றமும் இல்லை. நீங்க இருக்கும் போதே எவ்வளவு டீரிட்மெண்ட்... மருந்து மாத்திரைகள். இது பிறவி குறைபாடு. மூளை வளர்ச்சி இயல்பாக இல்லை. இதனால் பெரிசா எந்த பாதிப்பும் வராது. வளர வளர புரிஞ்சுக்கிற தன்மை அதிகரிக்கும். பெரிசா முன்னேற்றம் கிடைக்கலைன்னாலும்... இயல்பான ஆண்மகனாக இருப்பான். பயப்படாதீங்கன்னு டாக்டர் சொன்னாரு. ஸ்பெஷல் ஸ்கூலில் படிக்க வச்சோம். கஷ்டப்பட்டு பத்தாவது வரை படிச்சான். உடல் வளர்ச்சியில் எந்த குறையும் இல்லைங்க... உங்க சாயலில், கம்பீரமாக ஒரு ஆண்மகனாக, இளமைக்கே உரிய பொலிவோடு இருக்கான். அறிவு வளர்ச்சி, சுயமாக சிந்திக்கும் திறன், எதுவும் இல்லைங்க. மத்தவங்க சொல்றதை கேட்கிறான். அவ்வளவு தான்.
எவ்வளவு நாள் நான் அவனுக்கு துணை வர முடியும். எனக்கு பிறகு அவன் வாழ்க்கை... நினைக்கவே பயமா இருக்குங்க...சிவகாமியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.
“அம்மா... அம்மா...”
சமையல்காரி வேதா கூப்பிடுவது கேட்க,
முந்தானையால் கண்ணீரை துடைத்தவளாய், அறையை விட்டு வெளியே வருகிறாள்.
“அம்மா... நம்ப சுதாகர் தம்பி இன்னும் சாப்பிட வரலைம்மா... பசி தாங்க மாட்டாரு. எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட வந்துடுவாரு... பெரியவங்க இரண்டு பேரும் சாப்பிட்டு கிளம்பிட்டாங்க... அதான் உங்க கிட்டே சொல்லலாம்னு கூப்பிட்டேன்.”
மாடி ஏறுகிறாள்.
“சுதாகர்... சுதா எங்கேப்பா இருக்கே?”
மாடியில் பெரியவன் சுந்தருக்கும், அடுத்தவன் சுரேனுக்கும் தனி, தனி ரூம்கள் இருக்க,
சுதாகருக்கென்று ஒதுக்கப்பட்ட ரூம் அனைவரும் உபயோகப் படுத்தும் அறையாக மாறிவிட, அதை பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாத சுதாகர், அம்மாவின் ரூமை பயன்படுத்தி கொண்டான். இரவு படுப்பதும் அவள் ரூமில் தான்.
“சுதாகர், நீ சின்னவனாக இருந்த வரைக்கும் அம்மாவுடன் இருந்தே... இப்ப இளைஞனான பிறகும், இன்னும் அம்மாவை தேடிவர்றியே... உன் ரூமில் படுத்துக்கப்பா...”
“போம்மா... சின்ன பிள்ளையிலிருந்து நீ தானே எனக்கு அம்மா... இப்ப மட்டும் ஏன் நான் உன்னை பிரியணும். இங்கே தான் இருப்பேன்.”
“இவனுக்கு எப்படி புரிய வைப்பது...”
அவள் ரூமிலும் சுதாகரை காணாமல், திரும்பவும் கூப்பிடுகிறாள். “சுதாகர்... எங்கே இருக்கே?”
“இங்கே வாம்மா... சின்ன அண்ணன் சுரேன் ரூமில் இருக்கேன் பாரு...”
அங்கே என்ன செய்கிறான், உள்ளே நுழைந்தவள்சுரேனின் மனைவி தீபாவின் அலமாரியில் புடவைகளை வரிசைப் படுத்தி அடுக்கி கொண்டிருக்கிறான் சுதாகர்.
“என்னப்பா இது... இந்த வேலைகளை நீ செய்யலாமா... எழுந்திரு.”
“தீபா அண்ணி தான், எந்த வேலையும் பார்க்காமல் சும்மா இருக்கே. என் புடவை அலமாரியெல்லாம் ஒழுங்கா அடுக்கி வை. நான் ப்யூட்டி பார்லர் போய்ட்டு வரும் போது, எல்லாம் வரிசையாக ஒழுங்காக அடுக்கி வச்சுருக்கணும்னு சொல்லிட்டு போனாங்க.”
கடவுளே இவன் அறியாமையை பயன்படுத்தி ஒவ்வொருவரும் இவனிடம் எப்படி வேலை வாங்குகிறார்கள்.
‘இவனும் இந்த வீட்டில் சமபங்கு உரிமை உள்ளவன் இவனை ஒரு வேலைக்காரனை போல் அல்லவா நடத்துகிறார்கள்.
நேற்று சாயந்திரம் சுந்தரின் மனைவி பூஜா... இவனிடம், சுந்தரின் ஷுவை பாலிஷ் பண்ணி வைக்க சொல்லியிருக்கிறாள். கையில் எல்லாம் கறுப்பு பாலிஷ் பூசிக் கொண்டு வந்து நின்னவனை பார்த்து திகைத்து போனாள்