Nicht lieferbar
ஆச்சர்யம்! ஆனால்... உண்மை! (eBook, ePUB) - ராஜேஷ்குமார்
Schade – dieser Artikel ist leider ausverkauft. Sobald wir wissen, ob und wann der Artikel wieder verfügbar ist, informieren wir Sie an dieser Stelle.
  • Format: ePub

போலீஸ் உத்யோக அட்டையைப் பார்த்ததும் அதற்குள் முகம், கழுத்து, பிடரி என்று அவசர அவசரமாய் வியர்த்தான் கௌதமன். “வா... வாட்... டு...யூ... வாண்ட்... ஸார்...” “உங்க பேரென்ன?” “கெளதமன்.” “இந்த பாருக்கு அடிக்கடி வருவீங்களா?” “நோ நோ அக்கேஷனல்.” “பெர்மிட் வெச்சிருக்கீங்களா...?” “ம்...” “ஷோ... மீ...” கோட்டின் இடது பக்க பாக்கெட்டில்வைத்திருந்த பெர்மிட் கார்டை எடுத்துக் காட்டினான். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு - அவனிடமே கொடுத்தார். “ஸாரி ஃபார் த ட்ரபிள்... ப்ளீஸ் கேரி ஆன்...” கௌதமனுக்கு மனதில் தைரியம் ஊறியது. கேட்டான். “ஸாரி... எதுக்காக இந்த என்கொய்ரின்னு தெரிஞ்சுக்கலாமா...?” ஆபீஸர் புன்னகைத்தார்.“இந்த…mehr

Produktbeschreibung
போலீஸ் உத்யோக அட்டையைப் பார்த்ததும் அதற்குள் முகம், கழுத்து, பிடரி என்று அவசர அவசரமாய் வியர்த்தான் கௌதமன்.
“வா... வாட்... டு...யூ... வாண்ட்... ஸார்...”
“உங்க பேரென்ன?”
“கெளதமன்.”
“இந்த பாருக்கு அடிக்கடி வருவீங்களா?”
“நோ நோ அக்கேஷனல்.”
“பெர்மிட் வெச்சிருக்கீங்களா...?”
“ம்...”
“ஷோ... மீ...”
கோட்டின் இடது பக்க பாக்கெட்டில்வைத்திருந்த பெர்மிட் கார்டை எடுத்துக் காட்டினான். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு - அவனிடமே கொடுத்தார்.
“ஸாரி ஃபார் த ட்ரபிள்... ப்ளீஸ் கேரி ஆன்...”
கௌதமனுக்கு மனதில் தைரியம் ஊறியது. கேட்டான்.
“ஸாரி... எதுக்காக இந்த என்கொய்ரின்னு தெரிஞ்சுக்கலாமா...?”
ஆபீஸர் புன்னகைத்தார்.“இந்த ‘பார்’க்குள்ளே சில பேர் போதை மருந்துகளைக் கொண்டு வந்து யூஸ் பண்றதா எங்களுக்கு தகவல் வந்தது. அதான் இந்த செக்கிங். வாரத்துல ரெண்டு தடவை இது மாதிரியான செக்கிங் வருவோம்...” சொல்லிக் கொண்டே பக்கத்து மேஜையிலிருந்த இளைஞர்களை நோக்கிப் போனார்.
கௌதமன் அவசர அவசரமாய் சிக்கனை விழுங்கினான். பேரர் அதற்குள் கொண்டுவந்திருந்த - செக்கண்ட் லார்ஜையும் மடமடவென்று உள்ளே தள்ளி - டம்ளரை கீழே வைத்தான். பேரரை கையசைத்துக் கூப்பிட்டு “பில்” என்றான்.
பில் வந்தது.! - அமௌண்ட் எவ்வளவு என்று பார்த்து ரூபாய் நோட்டுக்களைத் திணித்துவிட்டு எழுந்தான். இளைஞர்களிடம் பெர்மிட் கார்டு வாங்கி பார்த்துக் கொண்டிருந்த விஜிலென்ஸ் ஆபீஸரை கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே ‘விறுவிறு’வென்று நடந்து பாரை விட்டு வெளியே வந்தான்.
இப்போது மழை லேசாய் தூறிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்து கொண்டிருந்த கார்களின் மண்டைகள் குழல் விளக்குகளின் வெளிச்சத்தில் மின்னியது.
‘மிருதுளா அறைக்குள் பிணமாய் கிடப்பது எந்த நிமிஷமும் வெளிப்பட்டு விடலாம்...’
‘சீக்கிரம் ஹோட்டலை விட்டு வெளியேறி விடுவது உத்தமம்.’
பார்க்கிங்கைத் தொட்டு தன் கண்டேஸாவுக்குள் நுழைந்தான். இக்னீஷியனை உசுப்பி, காரை வெளியே கொண்டு வந்து விரட்டினான். கார் ட்ராஃபிக்கில் கலந்ததும் உற்சாகம் கொப்பளித்தது.
‘இனிமேல் கவலையில்லை...’
ஆக்ஸிலேட்டரை அவனுடைய வலது கால் அழுத்திப் பிடித்தது.
காலிங் பெல் வீறிட்டு அலறிய சத்தம் கேட்டு, மெடிசன் சம்பந்தப்பட்ட புத்தகமொன்றில் ஆழ்ந்திருந்த டாக்டர் அற்புதராஜ் எழுந்து போய் தாழ்ப்பாளை விலக்கினார்.
கதவுக்கு வெளியே –
கௌதமன்.அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி தன் பெரிய நெற்றியை மேலேற்றினார்.
“என்னாச்சு கெளதம்...?”
உள்ளே வந்தான் அவன்.
“மொதல்ல கதவைச் சாத்துங்க டாக்டர்...”
அவர் கதவை சாத்தி தாழிட்டு விட்டு வந்தார். ஆர்வம் தாளாமல் கௌதமனின் தோள்களைப் பற்றிக் கொண்டார்.
“என்ன...?”
“காரியத்தை முடிச்சுட்டேன்...”
“குட்... டைமண்ட் எங்கே...?” கோட் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்து கர்ச்சீப்பில் சுற்றி வைத்திருந்த அந்த வைரத்தை எடுத்துக்காட்டினான். டாக்டர் அற்புதராஜ் கண்களை விரித்து, உதட்டை குவித்து சந்தோஷமாய் ஊளையிட்டார்.
“வீ காட் இட்! கெளதம் யூ ஹேவ் டன் ஏ மார்வலஸ் ஜாப். மிருதுளாவை முடிச்சுட்டு தானே கொண்டு வந்தே?”
“ஆமா...”
“யாரும் பார்த்துடலையே?”
“பார்க்கிற மாதிரியா காரியம் பண்ணுவேன்? எட்டே நிமிஷம். பார் பின்பக்க மாடிப்படி வழியா மிருதுளாவோட ரூமுக்குப் போய் அவளுக்கு ஒரு தோட்டாவை குடுத்துட்டு நான் இந்த ‘சூரஜ்’ஜை கொண்டு வந்துட்டேன்...”
“சரியா சுட்டியா?”
“தோட்டா சரியா மார்பில் பாய்ஞ்சிருச்சு.”
“செத்துட்டாளான்னு பார்த்தியா?”
“பார்க்கலை. ஆனா செத்துடுவா?”நீ பார்த்துட்டு வந்திருக்கணும். இல்லை ரெண்டாவது தடவையாவது சுட்டிருக்கணும். ஏன்னா கடைசி நேரத்துல இந்த மாதிரியான விஷயங்கள் காலை வாரும். தோட்டா சரியா மார்புல பாயாமே, அதுக்கு மேலேயோ, கீழேயோ, பாய்ஞ்சிருந்தா அரை மணி நேரத்திலிருந்து ரெண்டு மணி நேரம் வரைக்கும் உயிரோடு இருக்க வாய்ப்பிருக்கு. அந்த நேரத்துல அவ சுட்டது யார்னு போலீஸ்கிட்டே ஸ்டேட்மெண்ட் கொடுக்க வாய்ப்பிருக்கே?”
கௌதமனின் நெற்றி இப்போது வியர்த்து. மினுமினுத்தது