1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

வாலிபம் மாறும் வயதாக கூடும் மாறாது அன்பு மறையாதது அழகான மனைவி, அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே... எப்.எம்.மை ஆஃப் செய்கிறாள் ப்ரியா. “கற்பனை உலகிலேயே மிதக்கிறவர் ஆச்சே. வீட்டிலே பொண் டாட்டி ஒருத்தி இருக்கா... அவளுக்கும் உணர்ச்சிகள் இருக்கு எதுவும் தெரியாது. ஆபிஸ், வீடு, ரேடியோ, டி.வி. இது மட்டும்தான் உங்க உலகம்... அப்படிதானே...” கண்மூடி படுத்திருந்தவன், மெல்ல இமைகளை திறக்கிறான். எதிரில் கோபமாக ப்ரியா. இவளால் பரிவாக, அன்பாக, சாந்தமாக பேச தெரியாதா... திருமணமாகி ஒரு வருடம் ஆகியும்... இவளை புரிந்து கொள்ளவே முடியவில்லையே. “இப்ப உனக்கு என்ன வேணும். ஆபிஸ் விட்டு வந்து நீ கொடுத்த டீயை குடிச்சேன்.…mehr

Produktbeschreibung
வாலிபம் மாறும் வயதாக கூடும் மாறாது அன்பு மறையாதது
அழகான மனைவி, அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே... எப்.எம்.மை ஆஃப் செய்கிறாள் ப்ரியா.
“கற்பனை உலகிலேயே மிதக்கிறவர் ஆச்சே. வீட்டிலே பொண் டாட்டி ஒருத்தி இருக்கா... அவளுக்கும் உணர்ச்சிகள் இருக்கு எதுவும் தெரியாது. ஆபிஸ், வீடு, ரேடியோ, டி.வி. இது மட்டும்தான் உங்க உலகம்... அப்படிதானே...”
கண்மூடி படுத்திருந்தவன், மெல்ல இமைகளை திறக்கிறான். எதிரில் கோபமாக ப்ரியா.
இவளால் பரிவாக, அன்பாக, சாந்தமாக பேச தெரியாதா... திருமணமாகி ஒரு வருடம் ஆகியும்... இவளை புரிந்து கொள்ளவே முடியவில்லையே.
“இப்ப உனக்கு என்ன வேணும். ஆபிஸ் விட்டு வந்து நீ கொடுத்த டீயை குடிச்சேன். நிம்மதியா பத்து நிமிஷம் ரிலாக்ஸா இருப் போம்னு பெட்ரூம் வந்தேன். எதுக்கு இப்படி கோபப்படறே?”
“அடடா... உங்களைப் பத்தி தெரியாதா? கனவுலகில் மிதக்கிற ஆளு. கோபியர்களுக்கிடையே கண்ணன் மாதிரி உங்களை சுத்தி பெண்கள் இருக்க, ரொம்ப ஜாலியாக ஆபிஸில் பொழுது போக் கிட்டு... இங்கே வந்தபிறகும் அந்த நினைப்பிலேயே இருப்பீங்க.”
“நீ பேசறது சரியில்லை பிரியா. புரிஞ்சுதான் பேசறியா...”
“ஏன் நான் பேசறது உண்மையில்லைன்னு சொல்லப் போறீங்களா. அதான் கண்கூடாக பார்த்தேனே. போன மாதம் உங்க ப்ரெண்டு கல்யாணத்திற்கு போனோமே. உங்க ஆபிஸ். ஸ்டாப்ஸ் வந்திருந்தாங்க. வந்திருந்த லேடீஸ் எல்லாம் ஜீவா, ஜீவான்னு இளிச்சுக்கிட்டு பேசினதை பார்த்தேன். சை... கல்யாணமான பெண்கள் இப்படியா விவஸ்தையில்லாம பழகுவாங்க.கோபம் மூளையை தாக்க... இவள் இப்படிதான்... என்ன சொல்லியும் சமாதானம் ஆக மாட்டாள். வாயை மூடிக் கொண்டிருந்தால்தான் பிரச்சினை ஓயும். கோபத்தை கட்டுபடுத்து கிறான் ஜீவா.
வெளியேறியவள், அடுத்த பத்தாவது நிமிடம் கையில் காபியோடு வருகிறாள்.
“இந்தாங்க காபி...”
“அப்படி வச்சுட்டு போ...”
“கோபமா?”
பதில் வராமல் இருக்க, அவனருகில் நெருங்கி வருகிறாள்.
“என் ஜீவா எனக்கு மட்டும்தான் சொந்தம். நீங்க எவ்வளவு அழகு தெரியுமா... இப்படி ஆணழகனாக இருக்கிற உங்களை யாரும் மயக்கிடுவாங்களோன்னு பயம் அவ்வளவுதான்...”
அதற்கும் அவனிடம் பதிலில்லை.
“ஸாரி... ஜீவா...”
அவன் கன்னத்தை தொட்டு முத்தமிட்டவள்...
“அதான் ஸாரி சொல்லிட்டேனே... அப்புறம் என்ன?”
“நீ இப்படி பேசறது எனக்கு வருத்தமாக இருக்கு ப்ரியா. நீ என் மனைவி. எனக்கு உரிமையானவள் நீதான். அவங்ககிட்டே நட்பு முறையோடு பழகறேன் அவ்வளவுதான். இதை எத்தனையோ முறை உனக்கு புரிய வச்சுட்டேன். நீதான் திரும்ப திரும்ப பழைய இடத்துக்கே வந்து நிற்கிறே. சரி... நீ காபி குடிச்சியா?”
“ம்ஹூம்...”
“சரி எடு... ஆளுக்கு பாதி பாதி சரியா...”
மனைவியை பார்த்து புன்னகைக்கிறான் ஜீவா.
‘‘கல்யாண வாழ்க்கைங்கிறது கலைச்சு போடற சீட்டு கட்டில்லை. ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டிய வாழ்க்கை. அக்னி சாட்சியாக காலமெல்லாம் ஒருத்தருக் கொருத்தர் துணை வருவோம்னுகைபிடிச்சுட்டு, இப்ப வாழ பிடிக்கலைன்னு வந்து நிற்கிறீங்க... இரண்டு பேருமே விவாகரத்து வேணும்னு முடிவு பண்ணிட்டிங்களா?” லாயர் சிவபிரகாசத்தை கண்ணீருடன் பார்க்கிறார் அந்த பெண்.
“ஐயா... இது என் விருப்பமில்லை. அவருக்கு என்னோட வாழப் பிடிக்கலை. எவ்வளவோ அனுசரிச்சு போயிட்டேன். அவர் கேட்கிற விவாகரத்தை கொடுக்க ஏற்பாடு பண்ணுங்கய்யா.” அருகில் உட்கார்ந்திருக்கும் மேகலாவை பார்த்தவர்…
“இரண்டு பேர் கிட்டேயும் விபரம் கேட்டு, கேஸ் ஃபைல் பண்ணிடும்மா. இனி பேசி பிரயோஜனமில்லை.”
எழுந்தவளிடம்...
“மேகலா... நாளை அந்த ஆத்மநாதன் கேஸ் ஹியரிங் இருக்கு. நோட்ஸ் ரெடி பண்ணிடு.”
“ரெடி பண்ணிட்டேன் சார்...”
“குட்...”
“சார் நான் கிளம்பறேன்.”
“உட்கார் மேகலா. காலையிலிருந்து பிஸி. உன்கிட்டே கேஸ் விஷயம் தவிர; எதையுமே பேச முடியலை.”
“ரகு என்ன சொல்றான். உன் மாமனார், மாமியார் மாறியிருக் காங்களா... இல்லை பழையபடி...”
“எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட காரணமே அவங்கதான் சார்... அவங்க பேச்சை கேட்டு இவர் ரொம்பவே மாறி போயிட்டாரு. தினம் தினம் சித்ரவதை அனுபவிக்கிறேன். என் மகனுக்காக எல்லாத்தையும் பொறுத்து போறேன். மனசு வெறுக்கும்போது இரண்டு நாள் ஆறுதலாக அப்பா வீட்டில் போய் இருந்துட்டு வரேன். இவர் வா மேகலான்னு கூப்பிட்டதும்... பழைய செல்லாம் மறந்து ஓடறேன்... திரும்ப பழைய நிலை... இதுதான் என் வாழ்க்கைன்னு ஆயிடுச்சு சார்...”
“கஷ்டமாயிருக்கு மேகலா. எவ்வளவு நல்ல பொண்ணு நீ. காதலிச்சு, கைபிடிச்சவனுக்கு உன் அருமை தெரியாம போச்சே. அப்பாவிடம் சொல்லி, நல்ல வார்த்தை சொல்ல சொல்லு...” மெளனமாக இருக்கிறாள் மேகலா