1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

“விக்ரம், ஊருக்கு போய்ட்டு வந்தாலே, உன் மூடு சரியாக இரண்டு நாளாகுது. இஷ்டமில்லாமல் ஏன் போற.” “அப்படி விட முடியலைடா. என் தங்கைக்காகதான் போறேன்.” “சரி, வா, இன்னைக்கு ஹாஸ்டலில் மட்டன் சாப்பாடாம். போய் சாப்பிடலாம்.” “நான் வரலை குமார். நீ போ. எனக்கு கொஞ்சம் ‘ப்ராஜெக்ட்’ வேலை இருக்கு. முடிச்சுட்டு மெதுவா சாப்பிடறேன்.” “ஆமாம், நீ இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு வந்தா, வெறும் தயிர் சாதம் தான் கிடைக்கும். சொன்னா கேளு...” கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறான் குமார். “சரி, இப்படி பெத்தவரை விஷமாக வெறுக்கிறியே, படிப்பு முடிஞ்சதும் என்ன செய்யப்போற. ஊர் பக்கம் போய்தானே ஆகணும்.” சாப்பிட்டபடி கேட்கும் நண்பனை…mehr

Produktbeschreibung
“விக்ரம், ஊருக்கு போய்ட்டு வந்தாலே, உன் மூடு சரியாக இரண்டு நாளாகுது. இஷ்டமில்லாமல் ஏன் போற.”
“அப்படி விட முடியலைடா. என் தங்கைக்காகதான் போறேன்.”
“சரி, வா, இன்னைக்கு ஹாஸ்டலில் மட்டன் சாப்பாடாம். போய் சாப்பிடலாம்.”
“நான் வரலை குமார். நீ போ. எனக்கு கொஞ்சம் ‘ப்ராஜெக்ட்’ வேலை இருக்கு. முடிச்சுட்டு மெதுவா சாப்பிடறேன்.”
“ஆமாம், நீ இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு வந்தா, வெறும் தயிர் சாதம் தான் கிடைக்கும். சொன்னா கேளு...” கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறான் குமார்.
“சரி, இப்படி பெத்தவரை விஷமாக வெறுக்கிறியே, படிப்பு முடிஞ்சதும் என்ன செய்யப்போற. ஊர் பக்கம் போய்தானே ஆகணும்.”
சாப்பிட்டபடி கேட்கும் நண்பனை பார்த்தவன்,
“அதை பத்தி நானும் யோசிச்சுட்டு இருக்கேன். ஏதாவது கிடைக்கிற வேலையை தேடிக்கிட்டு, எங்காவது போகப்போறேன். நிச்சயமாக ஊர் பக்கம் போகமாட்டேன்.”
“நீ சொல்ற. உன் அப்பா அப்படி விட்டுடுவாறா. இல்லை, அவங்களுக்காக உன் தங்கையைதான் வேண்டாம்னு விட்டுடுவியா.”
“புரியலை குமார். பாவம் வித்யா... பொம்பளபுள்ளை. அவங்க சொல்றபடி கேட்டு இருந்துதான் ஆகணும். அப்பாவோட ஒய்ப்போடு சேர்ந்து வீட்டுவேலையெல்லாம் செய்யறாஅப்பாவுக்கு கடையில் வியாபாரம் இல்லையாம். ப்ளஸ்டு படிச்சது போதும்னு படிப்பை நிறுத்தப்போறாங்க. இதில் கல்யாணமும் பண்ணப் போறாங்களாம். எப்ப ஒழிச்சுக் கட்டுவோம்னு அந்த கிராதகி நினைச்சுட்டு இருக்கா. இப்போதைக்கு என்னாலும் எதுவும் செய்ய முடியலை. அதான் வருத்தமாக இருக்கு.”
“சரி, நீ சொல்றதை பார்த்தா, உன் தங்கையும் உங்க சித்திக்கிட்டே கஷ்டப்பட்டுகிட்டுதான் இருக்கா போலிருக்கு. கல்யாணம் பண்ணி வைக்கிறது நல்ல விஷயம்தானே. அதுக்கப்புறமாவது அவங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் இல்லையா.”
குமார் சொல்ல, அவன் சொல்வதும் ஒரு விதத்தில் சரியாக இருக்குமென்று விக்ரமிற்கு படுகிறது.
கண்ணாடி முன் நின்று தலை சீவுகிறான் முகுந்தன். சுருளான முடி படிய மறுக்கிறது.
கருப்பாக இருந்தாலும் பார்க்க அழகாகதான் இருக்கிறேன். தனக்குள் சிரித்தவன்,
“அம்மா, அம்மா...” என்றான்.
“எதுக்கு முகுந்தா கூப்பிடறே. இப்பதான் அடுப்பில் குழம்பை வச்சேன். என்ன விஷயம் சொல்லு.” வருகிறாள் சாரதா.
“ஸ்கூலில் பி.டி. மாஸ்டராக இருக்கேன். பார்க்கவும் ஆஜானுபாகுவாக அழகாகவே இருக்கேன். எதுக்காக, பெண் வீட்டில் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்க.”
“அட கடவுளே... அதுக்காக இவ்வளவு அவசரமாக கூப்பிட்டே. குறை உன்கிட்டே இல்லைபா. நமக்கு சொந்தமாக வீடு இல்லையாம். அப்பா இல்லாத பையன். கடைசி வரை குடும்ப பொறுப்பு உன் தலையில்... இவன் சம்பாத்தியத்தில் வீடு, வாசல் எல்லாம் வெறும் கனவுதான்னு... வேண்டாம்னு சொல்லிட்டதாக புரோக்கர் சொன்னாருப்பா.”
“அப்படியா சொன்னாங்க. ஏதோ நீ சொன்னியேன்னு பார்க்க சுமாராக இருந்தாலும், போட்டோவை பார்த்துட்டு சரின்னு சொன்னேன்.”“பெரிய கோடீஸ்வர வீட்டில் சம்பந்தம் பண்ணட்டும். சரி, விடு. நமக்குன்னு ஒருத்தி இனிமேலா பிறக்கப்போறா. பார்ப்போம்.”
“முகுந்தா, நான் சொல்றேன்னு கோபப்படாதே. நீ ஏன் லோன் போட்டு வீடு ஏதாவது வாங்கக்கூடாது.
இந்த காலத்தில் சொந்த வீடு இல்லைன்னா, ஒரு படி, மட்டமாகதான் நினைக்கிறாங்கப்பா.”
கட்டிலில் உட்கார்ந்தவன், அம்மாவை இழுத்து பக்கத்தில் உட்கார வைக்கிறான்.
“அம்மா, அவசரப்படவேண்டாம். என் சம்பாத்தியத்தில் கடன் எதுவும் இல்லாமல் குடும்பம் நடந்தறோம். ஏதோ கையிலும் கொஞ்ச காசு இருக்கு. இப்ப லோன் போட்டு, பணத்தை லோனுக்கு கட்டி சிரமப்படணுமா சொல்லு. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நாம் நிம்மதியைதான் தக்க வச்சுக்கணுமே தவிர, அடுத்தவங்களுக்காக வாழணும்னு நினைச்சா... நிம்மதி பறி போயிடும்மா.”
“நீ சொல்றதும் சரிதான்னு தோணுது. இருந்தாலும் நல்ல இடத்தில் பெண் வரமாட்டேங்குதே. அதான் மனசுக்கு யோசனையாக இருக்கு.”
“நீ ஏன் பெரிசா யோசிக்கிறே. நம்மை மாதிரி இருக்கிற இடத்தில் பெண் பாரு. உனக்கு பிடிச்சிருந்தால் போதும். தாலி கட்டி கூட்டிட்டு வரேன்.
எனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னுதான் ஆசைப்பட்டியே தவிர, பெரிய இடத்து சம்பந்தம் வரணும்னு ஆசைப்பட்டியாம்மா.”
“அப்படியெல்லாம் இல்லை முகுந்தா. நல்ல பெண்ணாக மனசுக்கு பிடிச்சவளாக அமைந்தால் போதும்.”
“அப்புறம் என்னம்மா. போ. போய் அடுப்பில் வச்ச குழம்பை பாரு. கரிகிடப் போகுது.”
வெண் பற்கள் தெரிய சிரிக்கும் மகனை பார்த்தபடி உள்ளே போகிறாள் சாரதா.