1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

மூடியிருந்த ஜன்னல் திரைகளை விலக்கி, வெளிச்சத்தை உண்டாக்கினாள் வேதா. அந்த விசாலமான அறையின் நடுவே போடப்பட் டிருந்த கட்டிலில் கண் விழித்து படுத்திருந்த ராஜம், மருமகளை பார்த்தாள். முகத்தில் நிரந்தரமாக தங்கி விட்ட புன்னகை. இளமையில் அவளிடமிருந்த அழகு, வயது அறுபதை நெருங்கும் சமயத்திலும் அவளை விட்டு விலக மனசில்லாமல் ஒட்டிக் கொண்டிருந்தது. கோபாலனை கை பிடித்து மருமகளாய் வந்த நாளிலிருந்து இந்த குடும்பத்துக்காக முகம் சுளிக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறாள்... “அப்ப சின்ன வயசு சமையல் வேலை, அது, இதுன்னு இழுத்து போட்டு செய்தே. உனக்கும் வயசாயிட்டு வருது வேதா. ராம, லட்சுமணன் மாதிரி அழகாக இரண்டு பிள்ளைகளை பெத்து…mehr

Produktbeschreibung
மூடியிருந்த ஜன்னல் திரைகளை விலக்கி, வெளிச்சத்தை உண்டாக்கினாள் வேதா.
அந்த விசாலமான அறையின் நடுவே போடப்பட் டிருந்த கட்டிலில் கண் விழித்து படுத்திருந்த ராஜம், மருமகளை பார்த்தாள். முகத்தில் நிரந்தரமாக தங்கி விட்ட புன்னகை. இளமையில் அவளிடமிருந்த அழகு, வயது அறுபதை நெருங்கும் சமயத்திலும் அவளை விட்டு விலக மனசில்லாமல் ஒட்டிக் கொண்டிருந்தது. கோபாலனை கை பிடித்து மருமகளாய் வந்த நாளிலிருந்து இந்த குடும்பத்துக்காக முகம் சுளிக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறாள்...
“அப்ப சின்ன வயசு சமையல் வேலை, அது, இதுன்னு இழுத்து போட்டு செய்தே. உனக்கும் வயசாயிட்டு வருது வேதா. ராம, லட்சுமணன் மாதிரி அழகாக இரண்டு பிள்ளைகளை பெத்து வச்சுருக்கே... அப்பாவுக்கு மேலே கம்பெனியை திறமையாக நடத்தறாங்க... வருமானமும் எக்கசக்கமாக வருது. அப்புறம் என்னம்மா, மேல் வேலைக்கு ஆள் வச்சுக்கே, என்னை பார்க்க தனி ஆள். அதே போல் சமையலுக்கும் ஆள் வச்சுக்க வேதா...”
அன்போடு சொல்லும் மாமியாரை புன்னகையோடு பார்ப்பாள்...
“என்னால் முடியும் அத்தை. என் பிள்ளைகளுக்கு, என் புருஷனுக்கு... என் மாமியாருக்கு நான் பார்த்து, பார்த்து செய்யற மாதிரி ஆகுமா அத்தை. வயது என் உடம்பில் தளர்ச்சியை கொண்டு வரலாம். மனசு அன்னைக்கு இருந்தது போல் இன்றும் இளமையாக தான் இருக்கு அத்தை.”
இவளை பேசி ஜெயிக்க முடியாது. அன்பாலேயே எல்லாரையும் கட்டி போட்டு விடுவாள்.
மருமகளை நினைத்து பெருமிதம் கொள்வாள்.
அருகில் வருகிறாள் வேதாராத்திரி நல்லாதூங்கினிங்களா அத்தை?”
“ராத்திரியும், பகலும் படுக்கையிலேயே இருக்கிற எனக்கு தூங்கறது தானே வேலை.”
“என்ன பண்றது அத்தை. நல்லா நடமாட்டிட்டு இருந்த உங்களை அந்த கடவுள் நாலு வருஷமாக படுக்கையில் போட்டுட்டாரு. இந்த குடும்பத்தை ஆணிவேராக இருந்து நீங்களும், மாமாவும் உருவாக்கினீங்க... மாமா தெய்வமாகிட்டாரு. நீங்க எங்க கண்முன்னே இருக்கிறது எங்களுக்கு எவ்வளவு பெரிய பலம் தெரியுமா... உங்க பேரன்களுக்கு கல்யாணம் பண்ணனும், கொள்ளு பேரன்களை பார்க்கணும். இந்த பூமியில் நீங்க அனுபவிக்க வேண்டிய சந்தோஷங்கள் நிறைய இருக்கு அத்தை. அதனால் உங்க மனசில் எந்த கவலையும் நெருங்க கூடாது. உங்க மலர்ந்த முகத்தை தான் நாங்க பார்க்கணும். நான் சொல்றது சரிதானே அத்தை.”
மனதை தொட எவ்வளவு தன்மையாக பேசுகிறாள்.
“அம்மா வேதா... உன்னோடு இருக்கும் எனக்கு எந்த குறையும் இல்லம்மா... மனசுக்குள் அப்பப்ப எட்டி பார்க்கும் விரக்தி சமயத்தில் இப்படி பேச வைக்குது. இனி இப்படி பேச மாட்டேன் போதுமா...”
“ம்... அப்படி சொல்லுங்க...”
மலர்ந்து சிரிக்கிறாள்.
“கோபால் வாக்கிங் போய்ட்டு வந்துட்டானா...”
“இன்னும் வரலை. வந்ததும் நேராக உங்களை பார்க்க தானே வருவாரு.”
ரூம் கதவை திறந்து உள்ளே வருகிறாள் சாந்தி.
“பெரியம்மா... எழுந்தாச்சா... வெந்நீர் எடுத்துட்டு வரட்டுமா... உடம்பை துடைச்சு டிரஸ் மாத்தலாமா...”
“இதோ வந்துட்டா என்னோட சேவகி. நீ போய் வேலையை பாரு வேதா... வா சாந்தி... நீ வரட்டும்னு தான் இருந்தேன்.”
ஒரு கையும், காலும் செயலிழந்து கிடக்க, இடது கையை மெல்ல ஊன்றி, தலை தூக்க, அவளுக்கு உதவி செய்து படுக்கையில் உட்கார வைக்கிறாள் சாந்தி.