1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
1 °P sammeln
  • Format: ePub

“ம்... சொல்லுக்கா. எப்படி இருக்கே? மாமா என்ன... தொழில் விஷயமாக அலஞ்சிகிட்டு இருக்காரா?” “அவருக்கே இருபத்தி நாலு மணி நேரம் பத்தாது. சரி... பொண்ணோட படத்தைப் பார்த்தியா? உனக்கு சம்மதம்தானா? உன்கிட்டே போனை எதிர்பார்த்தேன். கூப்பிடவே இல்லை.” “ஸாரிக்கா. வேலைப் பளு. நானே கூப்பிடணும்னுதான் இருந்தேன்.” “பொண்ணு ரொம்ப அழகா தேவதை மாதிரி இருக்காடா.” அமைதியாக இருந்தான். “அதான்க்கா எனக்கு தயக்கமா இருக்கு.” “என்னடா சொல்ற?”. “ஆளை அசத்தற அந்த அழகு, கண்களில் தெரிகிற கர்வம், எனக்கு நிகர் யாரும் இல்லைன்னு சொல்ற மாதிரியான புன்னகை.” “நீ என்ன பைத்தியமாடா! இப்படியொரு அழகி உனக்கு மனைவியா வர கொடுத்து வச்சிருக்கணும். அது…mehr

Produktbeschreibung
“ம்... சொல்லுக்கா. எப்படி இருக்கே? மாமா என்ன... தொழில் விஷயமாக அலஞ்சிகிட்டு இருக்காரா?”
“அவருக்கே இருபத்தி நாலு மணி நேரம் பத்தாது. சரி... பொண்ணோட படத்தைப் பார்த்தியா? உனக்கு சம்மதம்தானா? உன்கிட்டே போனை எதிர்பார்த்தேன். கூப்பிடவே இல்லை.”
“ஸாரிக்கா. வேலைப் பளு. நானே கூப்பிடணும்னுதான் இருந்தேன்.”
“பொண்ணு ரொம்ப அழகா தேவதை மாதிரி இருக்காடா.”
அமைதியாக இருந்தான்.
“அதான்க்கா எனக்கு தயக்கமா இருக்கு.”
“என்னடா சொல்ற?”.
“ஆளை அசத்தற அந்த அழகு, கண்களில் தெரிகிற கர்வம், எனக்கு நிகர் யாரும் இல்லைன்னு சொல்ற மாதிரியான புன்னகை.”
“நீ என்ன பைத்தியமாடா! இப்படியொரு அழகி உனக்கு மனைவியா வர கொடுத்து வச்சிருக்கணும். அது புரியாம என்னென்னமோ பேசற?”
“நீ என்ன சொல்றே?”
“எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அதுவும் அவ சென்னையிலே வேலை பார்க்கிறா. சவுகரியமாக இருக்கும்.”
“வேண்டாம்க்கா. கல்யாணம் முடிஞ்ச பிறகு நான் வேலைக்கு அனுப்ப மாட்டேன்.”
“அது உன் இஷ்டம்.”
“சரி... மேற்கொண்டு பேசு... பார்ப்போம்“நான் அடுத்த வாரம் புறப்பட்டு வரேன். நிச்சயமே பண்ணிடலாம்.”
“அக்கா, என் கல்யாண விஷயமா நான் பரத்கிட்டே பேசணும்.”
“யாரு... துபாயிலே இருக்கானே... அவனை சொல்றியா?”.
“ஆமா.”
“நல்லா கேளுப்பா. ரெண்டுபேரும் இணைபிரியா நண்பர்களாச்சே! அவனையும் கேட்டுட்டு முடிவு பண்ணி சொல்லு. நான் புறப்பட்டு வரேன்.”
“சரிக்கா, வச்சுடறேன்.”
போனை வைத்தவன், காகித உறையில் இருந்து படத்தை எடுத்தான்.
“என்னையா கல்யாணம் பண்ண இவ்வளவு யோசிக்கிற?”
“என்னோட அழகு உன்னை மயங்க வைக்காம... பயப்பட வைக்குதா?”
உதட்டைச் சுழித்து சிரிப்பது போல் தோன்ற, முதன் முதலாக வினிதாவின் அழகை ரசிக்க ஆரம்பித்தான்.
சமையலறையில் எண்ணெயில் வேகும் உளுந்தவடையின் வாசனை, வாசல் வரை வந்தது.
வீட்டின் உள்ளே அடியெடுத்து வைத்த பரமசிவம், சூடாக இருந்த வடை ஒன்றை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்.
“என்னங்க... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஆறு மணிக்கு மேலதானே வரேன்னு சொன்னாங்க?”
“ஆமாம். நீதான் எல்லாம் தயார் பண்ணிட்டே போலிருக்கே! காரட் அல்வா, பஜ்ஜி வடைன்னு அசத்திட்டே.”
“இந்த வினிதா... நாம சொன்னதைக் கேட்காம வேலைக்கு கிளம்பி போயிட்டா. அதான் யோசனையா இருக்கு.”
“சொன்ன மாதிரி அஞ்சு மணிக்குள்ள அவ வந்துடுவா.”
“எதுக்கும் போன் பண்ணி ஞாபகப்படுத்துங்க.”
“வேண்டாம் சிவகாமி. தேவையில்லாம அவளை ஏன் டென்ஷன் பண்ணணும்?“சொன்னா கேளுங்க.”
“சரி... விடமாட்டியே! இரு, கூப்பிடுறேன்.”
செல் போனை எடுத்து வினிதாவின் எண்களை ஒளிர விடுகிறார்...
“அப்பா... நான் மறக்கலை. சரியா அஞ்சு மணிக்கு வீட்டில் இருப்பேன். அம்மா ஞாபகப்படுத்த சொன்னாங்களா? தெரியும்... அவங்க நச்சரிப்பு தாங்காமத்தான் நீங்க கூப்பிட்டிருப்பீங்க. வச்சுடறேன்.”
“பார்த்தியா, உன் மகள் உன்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கா.”
“சொன்ன மாதிரி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றதுக்குள்ள உங்க பொண்ணு வந்தா சரி.”
“வந்துடுவா... பொறுமையா இரு.”
“சரி... உங்களுக்கு காப்பி தரட்டுமா?’’
“வேண்டாம். வடை ரொம்ப நல்லா இருக்கு. அதையே எடுத்துக்கிறேன்.”
தட்டில் மேலும் இரண்டு வடைகளை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தார்.
பஞ்சாயத்தில் கட்டட பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர் பரமசிவம்.
சம்பாத்தியத்தில் சின்னதாக ஒரு வீடு. மகளைப் படிக்க வைத்து, நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட்டார். கல்யாணம் நல்லபடியாக முடிந்துவிட்டால், தன் மனசின் பெரும் பாரம் குறைந்துவிடும் என்ற நினைப்பில் பொருத்தமான வரனைத் தேடிக்கொண்டிருந்தார்