1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
1 °P sammeln
  • Format: ePub

சுஜி சந்தோஷ குரலில் ‘அம்மா... அம்மா...’’ என்று கூப்பிட்டபடி வீட்டினுள் வந்தாள். ‘‘என்னம்மா... என்ன விஷயம்’’ சாரதா எதிர்கொண்டு வர, ‘‘அம்மா, நான் எழுதின கவிதை ‘தீப்பொறி’ இதழில் வெளிவந்திருக்கு. இங்கே பாருங்களேன்.’’ புத்தகத்தை அவளிடம் நீட்ட. ‘‘என்ன சுஜி, உன் கவிதை வந்திருக்கா, எங்கே கொடுபார்ப்போம்’’ நந்தினி அங்கே வர, “இருங்க அண்ணி, அம்மா முதலில் படிக்கட்டும்’’ “நந்தினி, இந்தாம்மா... நீயேபடி... எல்லோரும் கேட்கலாம் கெளதமும் வந்தாச்சு’’ சாரதா சொல்ல, “அம்மா நீங்க தான் படிக்கணும்... உங்களுக்கு எழுத, படிக்க சொல்லி கொடுத்திருக்கேன். இப்பதான் நல்லா படிக்கிறீங்க. எழுதறீங்க, சங்கோஜபடாம படிங்கம்மா.” சுஜி,…mehr

Produktbeschreibung
சுஜி சந்தோஷ குரலில் ‘அம்மா... அம்மா...’’ என்று கூப்பிட்டபடி வீட்டினுள் வந்தாள்.
‘‘என்னம்மா... என்ன விஷயம்’’
சாரதா எதிர்கொண்டு வர, ‘‘அம்மா, நான் எழுதின கவிதை ‘தீப்பொறி’ இதழில் வெளிவந்திருக்கு. இங்கே பாருங்களேன்.’’
புத்தகத்தை அவளிடம் நீட்ட.
‘‘என்ன சுஜி, உன் கவிதை வந்திருக்கா, எங்கே கொடுபார்ப்போம்’’ நந்தினி அங்கே வர,
“இருங்க அண்ணி, அம்மா முதலில் படிக்கட்டும்’’
“நந்தினி, இந்தாம்மா... நீயேபடி... எல்லோரும் கேட்கலாம் கெளதமும் வந்தாச்சு’’ சாரதா சொல்ல,
“அம்மா நீங்க தான் படிக்கணும்... உங்களுக்கு எழுத, படிக்க சொல்லி கொடுத்திருக்கேன். இப்பதான் நல்லா படிக்கிறீங்க. எழுதறீங்க, சங்கோஜபடாம படிங்கம்மா.”
சுஜி, அம்மாவின் அருகில் வந்து அவள் தோள்களை பற்றிக் கொண்டாள்.
சுஜியின் கவிதையை எழுத்துகூட்டி மெல்ல படிக்க ஆரம்பித்தாள் சாரதா. பரந்த ஆகாயம், படபடக்கும் பறவைகள்.
சில்லென்ற காற்று, சிறகடிக்கும் உணர்வுகள்,
மனதில் பூ மழையாய் நினைவுகள் அனைத்தையும் இழந்து விட்டேன் என்று
துக்கப்பட்ட நேரத்தில் கடவுள் அனுப்பிய தேவதையாய் என்னருகில் நீ, என் சோகங்களை உன் தோள்களில் சுமந்து உன் இதமான ஸ்பரிசத்தில்
மயிலறகு வருடலாய்,என் மனதில் சாமரம் வீசிய
உன்னை என் உதடுகள்
‘‘அம்மா’’ என்றழைத்தாலும்
என் மனம் தெய்வமே என்று தான் அழைக்கின்றது
படித்தவள் கண்கலங்க சுஜியை கட்டிக்கொள்கிறாள்.
‘‘உன் கவிதை ரொம்ப நல்லாருக்கு சுஜி. நம்ப அம்மாவை நினைச்சுதான் இந்த கவிதை எழுதியிருக்கேன்னு தெரியுது”
கௌதம் மனம் நெகிழ்ந்து சொல்ல,
நந்தினி அத்தையின் அருகில் வருகிறாள்.
‘‘அத்தை, என்ன இது, கண்ணை துடைங்க, உங்க மகள் எழுதின கவிதையை, உங்க வாயால படிச்சு கேட்டது, மனசுக்கு சந்தோஷமா இருக்கு. உங்க அன்பும், பாசமும் கடைசிவரை இந்த குடும்பத்தை சந்தோஷமா வழிநடத்தும்.”
‘சுஜிம்மா, இதை போல நீ எல்லா விஷயத்திலும் வெற்றி பெற்று, வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு வரணும் இந்த அம்மாவோட ஆசிர்வாதம் என்னைக்கும் உனக்கு இருக்கு’’
‘‘அம்மா, வெறும் ஆசிர்வாதத்தோடு முடிச்சுடாதீங்க. கவிதை வெளியானதற்கு, உங்க கையால சூடா கேசரி செய்து எடுத்துட்டு வாங்க... எல்லோரும் சாப்பிடலாம்.’’
“உன் கவிதை வந்ததுக்கு அம்மாவை வேலை வாங்கறே பாத்தியா, அத்தை இருக்கட்டும். நான் போயி செஞ்சு எடுத்துட்டு வரேன்.’’
‘‘நோ அண்ணி... நீங்க செஞ்சா அது கேசரியாக இருக்காது. அதுக்கு வேற ஏதாவது பெயர் வைக்கணும் ப்ளீஸ் அண்ணி, அம்மாவே செய்யட்டும்சுஜி, கண்களில் குறும்பு மின்ன சொல்ல, நந்தினி அவளை செல்லமாக அடிக்க, அதை பார்த்து ரசித்தபடி எழுந்து அடுப்படி நோக்கி சென்றாள் சாரதா.
சாப்பிட்டு மேஜையின் முன் அமர்ந்திருந்தார் சிவராமன். வகை, வகையாக பழங்கள் வெட்கப்பட்டு தட்டுகளில் வைக்கப்பட்டிருக்க, ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ், பால் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது. சூடா காபி டம்ளருடன் வந்த சமையல் ஆள் அதையும் டேபிளின் மீது வைத்தான்