1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
1 °P sammeln
  • Format: ePub

அம்மாவின் முகம் கண்டு மகனும் மகளும் துணுக்குற்றனர். “அம்மா, ஏன் ஒரு மாதிரியாயிருக்கே?” மகளின் கேள்விக்கு கிருஷ்ணவேணி எதுவும் சொல்லவில்லை. ஐயரிடம் அர்ச்சனைப் பொருட்களைக் கொடுத்து அர்ச்சனை செய்யச் சொன்னாள் அர்ச்சனையை முடித்துக்கொண்டு வெளியே வந்த கிருஷ்ணவேணி நவநீதனிடம், “நீ காருக்குப் போ, நாங்க பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வர்றோம்” என்றாள். இப்படி நேரத்தைக் கடத்துவது நவநீதனுக்கு எரிச்சலாக வந்தது. அவனுக்கு உடனடியாக கோகிலாவைப் பார்த்துவிட வேண்டும் என துடிப்பு உண்டானது. கோவில், அர்ச்சனை... இப்பொழுது பிரகாரம் சுற்றல் என அம்மா நேரத்தைக் கடத்துவது பிடிக்கவில்லையென்றாலும் எதுவும் சொல்லமுடியாமல் காருக்கு…mehr

Produktbeschreibung
அம்மாவின் முகம் கண்டு மகனும் மகளும் துணுக்குற்றனர்.
“அம்மா, ஏன் ஒரு மாதிரியாயிருக்கே?”
மகளின் கேள்விக்கு கிருஷ்ணவேணி எதுவும் சொல்லவில்லை.
ஐயரிடம் அர்ச்சனைப் பொருட்களைக் கொடுத்து அர்ச்சனை செய்யச் சொன்னாள்
அர்ச்சனையை முடித்துக்கொண்டு வெளியே வந்த கிருஷ்ணவேணி நவநீதனிடம், “நீ காருக்குப் போ, நாங்க பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வர்றோம்” என்றாள்.
இப்படி நேரத்தைக் கடத்துவது நவநீதனுக்கு எரிச்சலாக வந்தது.
அவனுக்கு உடனடியாக கோகிலாவைப் பார்த்துவிட வேண்டும் என துடிப்பு உண்டானது.
கோவில், அர்ச்சனை... இப்பொழுது பிரகாரம் சுற்றல் என அம்மா நேரத்தைக் கடத்துவது பிடிக்கவில்லையென்றாலும் எதுவும் சொல்லமுடியாமல் காருக்கு வந்தான்.
கிருஷ்ணவேணியும், சாந்தியும் கோவிலைச் சுற்றினர்.
‘சாந்தி உன்கிட்ட ஒரு விஷம் சொல்லணும்’ அம்மா அக்கம் பக்கம் யாரும் இல்லாவிட்டாலும் கிசுகிசுப்பாகப் பேசினாள்.
“என்னம்மா?”
“ரொம்ப அதிர்ச்சியாயிருக்குடி!”
“என்ன அதிர்ச்சி?”
“நாம பார்க்கப்போற பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சாம்டி.”“அம்மா, நீ என்ன சொல்றே?” பிரகாரத்திலிருந்த பத்ரகாளியின் சிலையின் முக உணர்வுகளைப் பிரதிபலித்தாள் சாந்தி.
“அம்மா, அந்தப் பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தா அவங்க ஏன் நம்மை பெண் பார்க்கக் கூப்பிடறாங்க? பொண்ணுக்கு ரெண்டாங்கல்யாணம் பண்றவங்க பொண்ணு விதவை, டைவேர்ஸி, அப்படின்னு விவரத்தை பதிவு பண்ணியிருப்பாங்களே. அந்த பொண்ணைப் பத்தின விவரத்துல அதெல்லாம் ஒண்ணுமில்லையே?”
“வேணுமின்னே மறைச்சிருப்பாங்களோ?”
“எனக்கு அப்படித் தோணலை. அம்மா, கோகிலான்னு ஊர்ல அவ மட்டும்தான் இருக்காளா? இது கிராமம். ஒரே பேர்ல ரெண்ட மூணு பொண்ணுங்க இருக்கலாம். மனசைப் போட்டு குழப்பிக்காம வாம்மா.”
அம்மாவை சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு கோவிலை விட்டு வெளியே வந்தாள்.
காரில் - சாய்ந்தபடி நவநீதன் மெய்மறந்து கோகிலாவின் புகைப்படத்தை மொபைலில் பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த சாந்தி திடுக்கிட்டாள்.
‘அம்மா ஏதோ புதுக்கதை சொல்கிறாள். இவனோ கிடைக்கிற கேப்பிலெல்லாம் அந்த கோகிலாவோட புகைப்படத்தை பார்த்துப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கிட்டிருக்கான்.’
அவர்கள் வந்ததைக்கூட உணராமல் நின்று கொண்டிருந்த தம்பிக்காரனிடம் கிட்டத்தட்ட கடுப்படித்தாள் சாந்தி.
“போதும் ஜொள்ளுவிட்டது. வண்டியை எடு” என்றாள்.
“வந்துட்டீங்களா?” என்றவாறே காரில் அமர்ந்து இயக்கத் தொடங்கினான்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு கார் கோகிலாவின் வீட்டெதிரே நின்றது.
புதிதாக கட்டப்பட்ட வீடு, பார்க்க பளிச்சென இருந்தது.
எந்தவித மலர்ச்சியையும் கொள்ள முடியாமல் கிருஷ்ணவேணியின் உணர்வுகள் மாறியிருந்தன