1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
1 °P sammeln
  • Format: ePub

“அம்மா!” பலமாக அதிர்ந்தாள் ராதா . ‘என் அம்மா. என் அம்மாவை இவளுடைய அத்தை. என் அம்மாவா இரண்டாங்கல்யாணம் பண்ணிக் கொண்டாள்? நான் அப்பாவாக எண்ணிக்கொண்டிருப்பவர் என் அப்பா இல்லையா? அப்படியானால் சுந்தரமூர்த்தி என் தாயின் இரண்டாவது புருஷனா? என் அப்பா இல்லையா? ராதாவின் இதயம் கசக்கிப் பிழியப்பட்டது. வாழ்க்கையில் கனவில் கூட அவள் நினைத்திருக்கமாட்டாள். எதிர்பாராத இந்த அதிர்ச்சி அவளை நடுங்க வைத்து விட்டது. இதுவரை அனுபவித்தறியாத ஒருவித பயங்கரமான உணர்வுகளை அவளின் உள்ளமும் உடம்பும் அனுபவித்தது. கால்கள் ஆயிரம் மால் ஓடி வந்ததை போல் தளர்வுற்று வலித்தன. கண்களில் கண்ணீர் கட்டிக் கொண்டது. வழிய மறுத்து வலித்தது.…mehr

Produktbeschreibung
“அம்மா!”
பலமாக அதிர்ந்தாள் ராதா .
‘என் அம்மா. என் அம்மாவை இவளுடைய அத்தை. என் அம்மாவா இரண்டாங்கல்யாணம் பண்ணிக் கொண்டாள்? நான் அப்பாவாக எண்ணிக்கொண்டிருப்பவர் என் அப்பா இல்லையா? அப்படியானால் சுந்தரமூர்த்தி என் தாயின் இரண்டாவது புருஷனா? என் அப்பா இல்லையா?
ராதாவின் இதயம் கசக்கிப் பிழியப்பட்டது. வாழ்க்கையில் கனவில் கூட அவள் நினைத்திருக்கமாட்டாள். எதிர்பாராத இந்த அதிர்ச்சி அவளை நடுங்க வைத்து விட்டது. இதுவரை அனுபவித்தறியாத ஒருவித பயங்கரமான உணர்வுகளை அவளின் உள்ளமும் உடம்பும் அனுபவித்தது. கால்கள் ஆயிரம் மால் ஓடி வந்ததை போல் தளர்வுற்று வலித்தன. கண்களில் கண்ணீர் கட்டிக் கொண்டது. வழிய மறுத்து வலித்தது. ஆர்த்தியின் எதிரே தன் உணர்வுகளை எப்படிக் கட்டுக் கட்டுப்படுத்துவதென தெரியாமல் தடுமாறினாள். அழுகை வெடித்து கண்ணீர் பீறிட்டு ஏதோ ஒரு நொடியில் வந்து விடும் போலிருந்தது நடுங்கும் கைவிரல்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்துக் கொண்டாள். பற்களை நறநறவென கடித்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது. நாக்கு மேல ஒட்டிக் கொண்டது. இனிமேல் பேசவே முடியாதோ என்றொரு எண்ணத்தை உண்டு பண்ணியது.
“என்னடி அதிர்ச்சியடைஞ்சு உட்கார்ந்திட்டே பார். என் அத்தை எவ்வளவு அழகாயிருக்காங்க. ஆனா... புத்திதான் சரியில்லை. ராணி மாதிரி இந்த வீட்ல இருந்திருக்கலாம். பாவம்... எங்க இருக்காங்களோ.”
ராதா மௌனமாகவே இருந்தாள். ஆர்த்தி மட்டும் ஏதேதோ பேசினாள். அத்தை பற்றிய விஷயத்தை விட்டுவிட்டு வேறு ஏதேதோ விஷயத்திற்க்குத் தாவினாள். போனவாரம் தொலைக்காட்சியில் போட்ட படத்தைப் பற்றிப் பேசினாள். அதில் சிவாஜி கணேசனின் நடிப்பைப் பற்றி புகழ்ந்தாள். வழக்கமாய் தன் பின்னாடி சுற்றும் பக்கத்துக் கல்லூரி ராஜேஷை இரண்டு நாளாய் காணாததைப் பற்றி பேசினாள். மறுநாள் நடக்கப் போகும்கிரிக்கெட் டெஸ்ட்கூட பார்க்க முடியாமல் டியூஷன் இடைஞ்சலாக இருப்பதை எண்ணி வருத்தப்பட்டாள். ஆனால் ராதாவின் மனம் எதிலும் லயிக்கவில்லை.
அவளின் மனம் சிதறிப் போயிருந்தது. எண்ணங்கள் எரிந்து போயிருந்தது. சிந்திக்க முடியாத அஃறிணையாக இருந்தாள்.
ஆர்த்தியின் தாய் காபி டிபனோடு மேலே வந்தாள். இருவரையும் சாப்பிடும்படி கூறிவிட்டு கீழிறங்கிப் போனாள். ஆர்த்தி சூடான அல்வாவை அவளிடம் நீட்டினாள். ராதாவால் அதை ருசிக்க முடியவில்லை. குமட்டிக் கொண்டு வந்தது. பெயருக்குக் கொஞ்சமாய் வாயில் போட்டு அப்படியே விழுங்கினாள். ராதா ஒரு மாதிரியாக இருப்பதைக் கண்டு ஆர்த்தி துணுக்குற்றாள்.
“ஏண்டி ஒருமாதிரி இருக்கே?” என்றாள்.
“ஒண்ணுமில்லே...” சமாளித்தாள் ராதா. பின் சிறிதுநேரம் கழித்து “ஆர்த்தி நான் கிளம்பறேன்” என்றாள்.
“என்னடி... அதுக்குள்ள? இப்ப போய் என்ன செய்யப் போறே. ஆறு மணிக்கு மேல போயேன்.
“இல்லடி, இன்னைக்கு டான்ஸ் க்ளாஸ் போகணும். மறந்து போய்ட்டேன். இப்ப திடிர்னு ஞாபகம் வந்தது. வரட்டுமா?”
“நீ கொடுத்து வச்சவடி ராதா. உங்க அப்பா உன்னை டான்ஸ் கத்துக்க அனுப்பறார். மியூசிக் கத்துக்க அனுப்பறார். ஆனா எங்கப்பா சுத்த மோசம். என்ன வசதியிருந்து என்ன புண்ணியம்? இதெல்லாம் பொம்பளை புள்ளைக்கு எதுக்கும்பார்.”
அவள் அப்படிச் சொன்னதும் சுந்தரமூர்த்தி கண்ணெதிரே வந்தார்.
‘என்னை டான்ஸ் க்ளாஸ் அனுப்புகிறார். மியூசிக் க்ளாஸ் அனுப்புகிறார். ஆனால் என் அப்பா இல்லையே.’
தொண்டையில் பந்தாய் ஏதோ உருண்டது.
“ஆர்த்தி நான் வர்றேன்” சொல்லிவிட்டு வெளியே வந்தாள். ஆர்த்தி தாயிடத்திலும் சொல்லிவிட்டு அவள் வெளியே வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு சாலைக்கு வந்தாள். கால்கள் வீட்டை நோக்கி மிதித்தன