1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
1 °P sammeln
  • Format: ePub

பல்லவி துணிகளுக்கு சோப்பு போட்டுக் கொண் டிருந்தபோது அழைப்பு மணி ஒலித்தது. எழுந்து சோப்பு நுரையுடன் இருந்த கைகளை கழுவிக் கொண்டு சேலைத் தலைப்பால் துடைத்தவாறே வந்தாள். கதவைத் திறந்து பார்த்தாள். “வரதன் புன்னகையுடன் நின்றிருந்தான். அண்ணனைக் கண்டதும் அவளுடைய முகம் பூவாய் மலர்ந்த து. “அண்ணா... வாண்ணா” ஆவலுடன் வரவேற்றாள். வரதன் உள்ளே வந்தான். உள்ளே வந்த பல்லவி, “உட்காருண்ணா” என இருக்கையை எடுத்துப் போட்டாள். “எப்படிம்மா இருக்கே?” நலம் விசாரித்தபடியே அமர்ந்தான் வரதன். “ம்... நல்லா இருக்கேண்ணா’ நீ எப்படி இருக்கே? தேவசேனா எப்படி இருக்கா?” “எங்களுக்கு என்ன நல்லாத்தான் இருக்கோம். இந்தா... தேவசேனா உனக்காக…mehr

Produktbeschreibung
பல்லவி துணிகளுக்கு சோப்பு போட்டுக் கொண் டிருந்தபோது அழைப்பு மணி ஒலித்தது.
எழுந்து சோப்பு நுரையுடன் இருந்த கைகளை கழுவிக் கொண்டு சேலைத் தலைப்பால் துடைத்தவாறே வந்தாள்.
கதவைத் திறந்து பார்த்தாள்.
“வரதன் புன்னகையுடன் நின்றிருந்தான்.
அண்ணனைக் கண்டதும் அவளுடைய முகம் பூவாய் மலர்ந்த து.
“அண்ணா... வாண்ணா” ஆவலுடன் வரவேற்றாள்.
வரதன் உள்ளே வந்தான்.
உள்ளே வந்த பல்லவி, “உட்காருண்ணா” என இருக்கையை எடுத்துப் போட்டாள்.
“எப்படிம்மா இருக்கே?” நலம் விசாரித்தபடியே அமர்ந்தான் வரதன்.
“ம்... நல்லா இருக்கேண்ணா’ நீ எப்படி இருக்கே? தேவசேனா எப்படி இருக்கா?”
“எங்களுக்கு என்ன நல்லாத்தான் இருக்கோம். இந்தா... தேவசேனா உனக்காக ஜாதிமல்லி கொடுத்தனுப்பினா...” பையிலிருந்து ஜாதிமல்லி சரத்தையும், வாங்கி வந்த பழங்களையும் எடுத்து நீட்டினான். ஆசையுடன் வாங்கிக் கொண்டாள்.
“எங்க மாப்பிள்ளையைக் காணோம்? கடைக்குப் போயிருக்காரா?” என்றான்.
“அவர் எங்கே கடைக்குப் போறார்? எங்கயாவது சாராயக்கடையில் போய் உட்கார்ந்துக்கிட்டிருப்பார்.”
“இப்படியே இருந்தா என்னம்மா அர்த்தம்? நீ திருத்தக்கூடாதா?”ஜென்மத்துல பொறந்ததை செருப்பால அடிச்சாக்கூட போகாதுண்ணா...”
“என்னமோ போ... உன் கொழுந்தன் கண்ணும் கருத்துமா கடையைப் பார்க்குறார். நாளைக்கு பங்கு பாகம்னு வரும்போதுதானே தெரியும். நான்தானே பாடுபட்டேன். எனக்குத்தான் எல்லாம்னு எல்லாத்தையும் அவரே எடுத்துக்கப் போறார்.”
“என்னை என்னண்ணாபண்ணச் சொல்றே? எல்லாம் என் தலையெழுத்து. நல்ல மாப்பிள்ளைன்னுதான் பார்த்துக் கொடுத்தே. இங்க உள்ளே இத்தனை ஓட்டை இருக்கறது அப்புறம்தானே தெரியுது” என்றாள். சில நிமிடங்கள் மவுனமாக இருந்துவிட்டு நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றினாள்.
“ம்... என்னமோ என் தலையெழுத்துத்தான் இப்படி ஆயிட்டு. தேவசேனாவையாவது நல்லா விசாரிச்சு நல்ல பையனுக்கு கொடுண்ணா...”
“அதைப்பத்திதாம்மா பேச வந்தேன். தேவசேனாவை போன வாரம் பொண்ணு பார்த்துட்டு போனாங்க.”
‘‘அப்படியா? எந்த ஊரு?”
“மெட்ராஸ்தாம்மா.”
“நல்லதா போச்சு. மாப்பிள்ளை என்ன பண்றார்?”
“பிஸினஸ்தாம்மா. அப்பாவும் பையனுமா சேர்ந்து ஜவுளிக்கடை வச்சிருக்காங்க. ஒரே பையன். வசதியான இடம்தான். பையன் பேரு சுதாகர். ஆள் நல்லா இருக்கார்.
“அப்படியா? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்க அண்ணா...”
“வர்ற வெள்ளிக்கிழமை நிச்சயம் செய்துக்கலாம்னு சொல்லிட்டுப் போனாங்க. அதான் சொல்ல வந்தேன்.”
“அப்படியா ரொம்ப சந்தோஷம். அண்ணர் நிச்சயதார்த்தம் யார் செய்யறா?”
“நாமதான்.’’
“வசதியான இடம்னு சொல்றே. நிறைய கேட்பாங்களே...” என்றாள்“நம்ம சக்திக்கு மீறி நம்மால எப்படி செய்ய முடியும்? பதினைஞ்சு பவுன் போட்டு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னேன். ஒத்துக்கிட்டாங்க” என்றான்.
“பணத்துக்கெல்லாம் என்னண்ணா பண்ணப் பொறே?”
“என்னம்மா செய்யறது? கடனை உடனை வாங்கி செய்ய வேண்டியதுதான்” என்றான்.
“நான் பாட்டுக்கு பேசிக்கிட்டிருக்கேன். இருண்ணா காபி போட்டு எடுத்து வர்றேன்” என்றபடி உள்ளே சென்றாள் பல்லவி.
வரதனுக்கு மனம் வேறு சிந்தனையில் ஆழ்ந்தது. யார் பாரிடம் கடன் வாங்குவது என யோசிக்கத் தொடங்கினான்