1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

மனதை மயக்கும் மாலை நேரம். அந்த அழகை மேலும் அழகூட்டுவதைப் போல் ஆதிரை அலையடிக்கும் கரையோரம் கால் பதித்து நடந்து கொண்டிருந்தாள். அவளுடைய தோளை உரசியபடி நடந்து கொண்டிருந்த ஸ்டீபன் அவள் அழகை ரசித்த வண்ணம் நடந்தாலும்... வழக்கமாகப் பொலிவு பொங்கும் அவள் முகத்தில் ஒருவித அமைதியும் உற்சாகமின்மையும் தங்கியிருப்பதைக் கண்டான். சற்றுத் தூரம் நடந்து விட்டு இருவரும் மணற்பரப்பில் அமர்ந்தனர். “ஆதிரை... என்னாச்சு உனக்கு?” - அவளுடைய அமைதிக்கும் குழப்பத்திற்கும் விளக்கம் கேட்டான் ஸ்டீபன். “ஒண்ணுமில்லை. நல்லாத்தானே இருக்கேன்...” - சிரிக்க முயன்றாள். “வழக்கமான - கலகலப்பையே காணோம்? காதலிச்சவன் ஏமாத்திக் கைவிட்ட மாதிரி…mehr

Produktbeschreibung
மனதை மயக்கும் மாலை நேரம்.
அந்த அழகை மேலும் அழகூட்டுவதைப் போல் ஆதிரை அலையடிக்கும் கரையோரம் கால் பதித்து நடந்து கொண்டிருந்தாள்.
அவளுடைய தோளை உரசியபடி நடந்து கொண்டிருந்த ஸ்டீபன் அவள் அழகை ரசித்த வண்ணம் நடந்தாலும்... வழக்கமாகப் பொலிவு பொங்கும் அவள் முகத்தில் ஒருவித அமைதியும் உற்சாகமின்மையும் தங்கியிருப்பதைக் கண்டான்.
சற்றுத் தூரம் நடந்து விட்டு இருவரும் மணற்பரப்பில் அமர்ந்தனர்.
“ஆதிரை... என்னாச்சு உனக்கு?” - அவளுடைய அமைதிக்கும் குழப்பத்திற்கும் விளக்கம் கேட்டான் ஸ்டீபன்.
“ஒண்ணுமில்லை. நல்லாத்தானே இருக்கேன்...” - சிரிக்க முயன்றாள்.
“வழக்கமான - கலகலப்பையே காணோம்? காதலிச்சவன் ஏமாத்திக் கைவிட்ட மாதிரி சோகமா யிருக்கே...” சிரித்தபடியே சீண்டினான்.
“கடைசியில் நிலைமை அப்படித்தான் ஆகிடும் போலிருக்கு...” - தளர்வாகச் சொன்னாள்.
“என் மேலே உனக்கு நம்பிக்கை இல்லையா? நான் ஏமாத்திடுவேனோன்னு பயப்படறியா?”
“நீங்க இல்ல... நான்தான்.”
“அடிப்பாவி! என்னை விட ஸ்மார்ட்டா எவனாவது உன்கிட்ட ‘ஐ லவ் யூ’ன்னு சொன்னானா? உடனே நீ பல்டி அடிச்சுட்டியா? ஆண் பாவம் பொல்லாதது. நான் சாபம் விட்டேன்னா... நீ இந்த அழகையெல்லாம் இழந்து அவ்வைக் கிழவி மாதிரி ஆயிடுவே.”
ஆதிரை வாய் விட்டுக் கலகலவெனச் சிரித்தாள்“சொல்லு... யார் அந்த ஆணழகன்?”
“சொன்னா அவனைக் கண்டுபிடிச்சு கண்டந்துண்டமா வெட்டிப் போடப் போறீங்களா?”
“வெட்டிப் போடுறதா? அவன் கால்ல விழுந்து தயவு பண்ணி இந்தப் பிசாசைக் கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு விடுதலை கொடுன்னு கெஞ்சுவேன்...”
“என்னமோ இப்பத்தான் சாபம் தந்து கிழவியாக்கப் போறதாச் சொன்னீங்க?”
“அதுக்குத் தேவையே இல்லை. ஏன்னா நீ இப்பவே பார்க்க கிழவி மாதிரிதான் இருக்கே...”
“உங்களை...” - அவனைச் செல்லமாக மார்பில் குத்தினாள். பின் சொன்னாள்.
“எங்கப்பா எனக்குக் கல்யாணம் பண்றதா முடிவு பண்ணிட்டார்.”
“வெரிகுட்! இப்பத்தான் ஒரு நல்ல தகப்பன்கறதை நிரூபிச்சிருக்கார். நீ என்னைப் பற்றிச் சொல்லிட்டியா? அதனாலதான் கல்யாணம் பண்றதா முடிவு பண்ணியிருக்காரா?”
“உங்களைப் பற்றிச் சொல்றதா? ஐய்யோ...”
“ஏன்? நான் என்ன நாலு கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கா போயிட்டு வந்திருக்கேன். என்னைப் பற்றிச் சொல்லப் பயப்படுறே?”
“எங்கப்பா கொலைகாரனுக்குக் கூட பொண்ணு கொடுப்பார் போலிருக்கு. வேற ஜாதிக்காரனுக்குக் கொடுக்கமாட்டார். அதிலும் நீங்க மதமே வேற.”
“எங்க உங்கப்பா இந்தக் காலத்துல போய் இப்படியிருக்கார்...?”
“எந்தக் காலத்திலேயும் இப்படிப்பட்டவங்க இருக்கத்தான் செய்வாங்க. எங்கப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொல்லி ஒரு தரகர்கிட்ட சொல்லியிருந்தார். அவரும் ஒரு ஜாதகத்தைக் கொடுத்திருந்தார். மாப்பிள்ளை அழகு. அதிகச் சம்பளம்.”
“ஏய்... என்ன மட்டம் தட்டறியா?”அட... உண்மையைச் சொன்னேன். அந்தப் பையன் வேற ஜாதி. தரகர் ஏதோ அவசரத்துல ஜாதகத்தைக் கொடுத்துட்டார். அப்புறம்தான் விஷயத்தைச் சொல்லியிருக்கார். ஆனா அப்பா உடனே அந்த ஜாதகத்தைத் திருப்பி அனுப்பிட்டார்... அதான் பயமாயிருக்கு...” என நடந்ததைச் சொல்லி முடித்தாள்.
“அதான் என்னை ஏமாத்தப் போறதாச் சொன்னியா? அப்படின்னா உங்க அப்பா பார்க்கிற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னை அலைய விடப் போறியா?”
“ச்சே! சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். நீயின்றி நானில்லை. உன் நினைவே ஒரு சங்கீதம். நெஞ்சம் மறப்பதில்லை. உன் நினைவை இழப்பதில்லை.”
“சகிக்கலை. வசனம் பேசறதை நிறுத்து. வாழ்க்கையைப் பற்றிப் பேசு.”
“உங்கப்பா நம்ம காதலை ஏத்துக்கலைன்னா என்ன பண்றது?”
“விடு... ஜூட்தான்.”
“நீ ரொம்பத் துணிச்சலா இருக்கே...”
“வேற வழி இல்லை. இல்லாட்டி நம்மைக் கோழையாக்கிடுவாங்க. ஒண்ணு நம்மைச் சாகடிச்சுடுவாங்க. இல்லாட்டி அவங்க செத்துப் போறதாச் சொல்லி மிரட்டி நம்மைப் பணிய வைச்சுடுவாங்க. நம்ம காதலைச் சொல்லி நாமே நமக்குக் குழி தோண்டிக்க வேண்டாம்...
நம்ம ஃப்ரெண்ட்ஸுங்களை வச்சு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிப்போம். மாலையும் கழுத்துமா போய் அவங்க கால்ல விழுந்தா ஒண்ணும் பண்ண முடியாது.”
“அப்ப மட்டும் ஒத்துப்பாங்கன்னு என்ன நிச்சயம்?”
“அப்போதைக்கு ஏத்துக்கலைன்னாலும் காலப் போக்குல மனசு மாறி ஒத்துப்பாங்க. அதிலும் நான் ஒரே பொண்ணு. பாசம் விடாது. தேடிக்கிட்டு வந்துடுவாங்க.”
“ரொம்பத் தெளிவாத்தான் இருக்கே. ஆனா... என்னால அப்படி இருக்க முடியாது.
ரிஜிஸ்டர் மேரேஜல்லாம் பண்ணிக்க முடியாது.”