1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
1 °P sammeln
  • Format: ePub

அந்த வீடே பரபரப்பாக இருந்தது. மாற்றலாகி நாளைக்கு ரமணி வரும் நாள். தற்செயலாக அந்த நாள் பிரமாத முகூர்த்த நாளாக அமைந்துவிட்டது. இதை விட்டால் இந்த அளவுக்கு பிரமாதமான நாள் இன்னும் ஒரு மாசத்துக்கு இல்லை! அதே நாளில் காதம்பரியைப் பார்த்து, தாம்பூலம் மாற்றுவது என அப்பா தயாராகிவிட்டார். காதம்பரி வீட்டுக்கும் அதை அறிவித்துவிட்டார். “என்னங்க! ரமணி வந்து ஒரு வார்த்தை கேட்டுட்டு, இதை செஞ்சிருக்கலாம்!” “ரமணி வருவான். நாள் வருமாடி? காலைல ரயில் வருது! ரமணி எட்டு மணிக்குள்ளே வீட்டுக்கு வந்துடுவான். காதம்பரி வீட்டுக்கு சாயங்காலம் போகப் போறோம். நடுவுல ஏராளமான அவகாசம். உன் பிள்ளைகிட்டப் பேச உனக்கு அது போதாதா?”…mehr

Produktbeschreibung
அந்த வீடே பரபரப்பாக இருந்தது.
மாற்றலாகி நாளைக்கு ரமணி வரும் நாள். தற்செயலாக அந்த நாள் பிரமாத முகூர்த்த நாளாக அமைந்துவிட்டது. இதை விட்டால் இந்த அளவுக்கு பிரமாதமான நாள் இன்னும் ஒரு மாசத்துக்கு இல்லை!
அதே நாளில் காதம்பரியைப் பார்த்து, தாம்பூலம் மாற்றுவது என அப்பா தயாராகிவிட்டார்.
காதம்பரி வீட்டுக்கும் அதை அறிவித்துவிட்டார்.
“என்னங்க! ரமணி வந்து ஒரு வார்த்தை கேட்டுட்டு, இதை செஞ்சிருக்கலாம்!”
“ரமணி வருவான். நாள் வருமாடி? காலைல ரயில் வருது! ரமணி எட்டு மணிக்குள்ளே வீட்டுக்கு வந்துடுவான். காதம்பரி வீட்டுக்கு சாயங்காலம் போகப் போறோம். நடுவுல ஏராளமான அவகாசம். உன் பிள்ளைகிட்டப் பேச உனக்கு அது போதாதா?”
“நான் பேசவா சொல்றேன்? கட்டிக்கப் போறவன் அவன். அவனுக்குப் பிடிக்கணும்!”
“அவளுக்கென்னடி குறைச்சல்? அவளைப் பிடிக்கலைனு யார் சொல்ல முடியும்? நிச்சயமா புடிக்கும்! தங்கம்...! மசமசன்னு இருக்கக் கூடாது! ஒரு முடிவை எடுத்த பிறகு, அதை செயல்படுத்த கால தாமதம் கூடவே கூடாது! புரியுதா?”
அம்மா எதுவும் சொல்லவில்லை! உள்ளே வந்தாள்.
ரெண்டாவது மகன் சசி - கல்லூரி பேராசிரியர் தயாராகிக் கொண்டிருந்தான்.
“நாளைக்கு நீ லீவு போட்ரு சசி!”
“சரிம்மா! அப்பா - அண்ணனைக் கேக்காம ரொம்ப அவசரப்படறார். அவனுக்கு சில சமயம் சுருக்குனு கோவம் வந்துடும்!”இவருக்கு நினைச்சது நடக்கலைனா, புடிக்காது!”
“அந்த குணத்தையெல்லாம் இனிமே மாற்றிக்கணும்! எங்களுக்கும் சுதந்திரம் உண்டு. ரமணி விட்டுக் குடுக்கறான்! நான் மாட்டேன்!”
சசி புறப்பட்டு விட்டான்.
“சரிப்பா! எது நடந்தாலும் பிரச்னை இல்லாம நடக்கணும்! குடும்பம் சந்தோஷமா இருக்கணும்!”
இரவுக்குள் தாம்பூலம் மாற்றுவதற்குத் தோதான அத்தனை பொருட்களையும் அப்பா சேகரித்துவிட்டார்.
காதம்பரிக்கு சேலை ரவிக்கை இத்யாதிகள்!
பெண்கள் இருவரும் முதல் நாள் இரவே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
“ஸ்டேஷனுக்கு யாரு போறாங்க?”
“யாரும் வர வேண்டாம்னு ரமணி சொல்லிட்டான். அவன் வளர்ந்த இடம்தானே! வந்துடுவான்!”
கதிர் மட்டும் ஏதோ ஒரு விளையாட்டுக்காக வெளியூருக்குப் போயிருந்தான்.
அந்த வீட்டுக்கு ஒரு கல்யாணக் களை வந்துவிட்டது!
எல்லாரும் எதிர்பார்த்த மறுநாளைய காலைப் பொழுது விடிந்தது!
தொலைபேசியில் கேட்க, ரயில் சரியான நேரத்துக்கு வருகிறது என்றார்கள்.
எட்டுக்குள் ரமணி வந்துவிடுவான்.
ரமணிக்குப் பிடித்த காலை உணவாகச் செய்து அம்மா காத்திருந்தாள்!
சரியாக ஏழு ஐம்பது!
வாசலில் அந்தக் கால் டாக்ஸி வந்து நின்றது
விரைவில் அவன் கல்யாண மாப்பிள்ளை ஆகப் போகிறான் என்பதால், வந்ததும் அவனுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும் என்பது அப்பா உத்தரவுஅம்மா ஆரத்தித் தட்டோடு ஓடி வந்தாள்.
ரமணி இறங்கினான்!
ஒருமுறை அம்மாவைப் பார்த்துவிட்டு, டாக்ஸியின் பின் கதவைத் திறந்துவிட்டான்.
ஒரு இளம் பெண்ணும், மூன்று வயதுப் பெண் குழந்தையும் காரைவிட்டு இறங்கினார்கள்.
அவள் கலவரத்துடன் ரமணிக்கு சற்று தள்ளி நின்றுகொண்டாள்.
அப்பா கதவருகில் இருந்தார். அப்பா உட்பட, அனைவர் முகமும் மாறியது!
“அம்மா ஆரத்தியோட வந்திருக்காங்க! என் பக்கத்துல வந்து நில்லு இந்திரா!”
அம்மா ஆடிப்போனாள்.
“ரமணி! அவசரப்படாதே! புருஷன் - பொண்டாட்டிதான் ஆரத்திக்கு சேர்ந்து நிக்கணும். யாரோ ஒருத்தர் உன்பக்கத்துல நிக்கக் கூடாது!”
“யாரோ ஒருத்தர் இல்லைம்மா! இந்திரா என் மனைவிதான்!”
“ரமணீ...!”
அம்மா அலறியபடி ஆரத்தித் தட்டை நழுவவிட, அந்த சிகப்பான திரவம் தரையில் பரவி, ரமணியின் காலைத் தொட்டது!
குடும்பத்தில் அத்தனை பேருக்கும் பலத்த அதிர்ச்சி.
“தங்கம்! அவன் உள்ளே வரவேண்டாம்!”
அப்பா கூச்சலிட்டார்.
சசி அவரை நெருங்கினான்