1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
1 °P sammeln
  • Format: ePub

நான் வாசலை விட்டு இறங்கும் போதே -பூக்காரி எதிர்ப்பட்டாள். இடுப்பில் இருத்திக்கொண்ட கூடையில் - சம்பங்கியும் ரோஜாவும் மலர்ந்தது. பழக்க தோஷத்தால் என்னைப் பார்த்து சிரித்தாள். வெற்றிலைக்காவி பற்களைக் காட்டி கேட்டாள். “என்னம்மா வேலைக்கு கிளம்பிட்டீங்களா?” “ம்...” “பூ... வேணுமா தாயீ...?” “வேண்டாம்...தலையில இருக்கே...?” “அது மல்லி தானே... ரெண்டு சம்பங்கியையும் சொருகு...” “நீ விடமாட்டியே...?” மணக்கிற சம்பங்கியும், ரோஜாவும்…. என் தலையில் ஏறிக் கொண்டது. ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை டம்பப் பையிலிருந்து எடுத்து அவளுடையகையில் திணித்துவிட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி போனேன். இந்தப் பூக்காரி எனக்கு இரண்டு வருஷமாய்…mehr

Produktbeschreibung
நான் வாசலை விட்டு இறங்கும் போதே -பூக்காரி எதிர்ப்பட்டாள். இடுப்பில் இருத்திக்கொண்ட கூடையில் - சம்பங்கியும் ரோஜாவும் மலர்ந்தது. பழக்க தோஷத்தால் என்னைப் பார்த்து சிரித்தாள். வெற்றிலைக்காவி பற்களைக் காட்டி கேட்டாள்.
“என்னம்மா வேலைக்கு கிளம்பிட்டீங்களா?”
“ம்...”
“பூ... வேணுமா தாயீ...?”
“வேண்டாம்...தலையில இருக்கே...?”
“அது மல்லி தானே... ரெண்டு சம்பங்கியையும் சொருகு...”
“நீ விடமாட்டியே...?”
மணக்கிற சம்பங்கியும், ரோஜாவும்…. என் தலையில் ஏறிக் கொண்டது. ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை டம்பப் பையிலிருந்து எடுத்து அவளுடையகையில் திணித்துவிட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி போனேன். இந்தப் பூக்காரி எனக்கு இரண்டு வருஷமாய் பழக்கம். வாரத்தில் மூன்று நாளாவது நான் வேலைக்கு கிளம்பி வெளியே வரும் போது எதிர்ப்பட்டு விடுவாள். என் தலையில் பூ இருந்தாலும் என்னிடம் போணி பண்ணாமல் நகர மாட்டாள்.
இரண்டு நிமிஷ நடையில் பஸ் ஸ்டாப் வந்தது. கூட்டம் அதிகம் இல்லை. ஹிண்டு பேப்பரோடு ஒரு பெரியவர். காய்கறிகூடையோடு ஒரு கிழவி. கல்லூரி மாணவர்கள் போல தோற்றம் காட்டிய இரண்டு இளைஞர்கள். பஸ் ஷெல்டரின் பக்கவாட்டில் ஆபரேஷன் இல்லாமலேயே மூல நோயை குணப்படுத்த போவதாக புதிதாக ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர் சொல்லியது. போஸ்டரில் தேவையே இல்லாமல் ஒரு நடிகையின் படம்.
நான் போய் ஷெல்டர்க்கு கீழேநின்றேன். மணிக்கட்டில் நேரம் பார்க்க 9.20. பஸ் வர இன்னும் பத்து நிமிஷம் இருக்கிறது. டிபன் ஃபாக்ஸ் இருந்த பைக்குள் ‘மனோசக்தி’ இதழ் இருப்பது ஞாபகத்துக்கு வரவே -, அதை எடுத்துக் கொண்டு பக்கங்களை புரட்டினேன்.
ஒரு நிமிணம் கரைந்திருந்த போது - எனக்கு முன்பாய் ஏதோ வாகனம் ஒன்று வந்து நிற்க கலைந்தேன். நிமிர்ந்தேன்.
‘சென்னை தூர்தர்ஷன்’ என்று ஆங்கிலத்திலும் இந்திலும் எழுதப்பட்ட வாசகங்களோடு ஒரு வேன்.
நான்கைந்து பேர் இறங்கினார்கள். இரண்டு பேர்களின் கைகளில் காமிரா. ஒருவர் உருண்டை மைக்கோடு என்னை நெருங்கினார். ,
“எக்ஸ்க்யூஸ் மீ...! நீ ங்க காலேஜ் ஸ்டூடண்டா...? இல்லை வேலைக்கு போகிற பெண்ணா...?”
“வேலைக்கு போயிட்டிருக்கேன்.”
“எங்கே...?”
“தமிழ்நாடு டூரிஸம் அண்ட் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனில்...”
“என்ன வேலை...”
“டெஸிக்னேஷன் கைடு...”
“நீங்க மிஸ்ஸா... மிஸஸா...?”
“மிஸ்… “நாங்க சென்னை தூர்தர்ஷன்... நேத்து வெளியான பட்ஜெட்டைப் பத்தி பொது மக்களோடகருத்தை திரட்டிட்டி வர்றோம்... நீங்களும் பட்ஜெட்டை பத்தி கமெண்ட் பண்ணனும்... இந்த பட்ஜெட்டைப் பத்தி என்ன நினைக்கறீங்க...?”
நான் புன்னகைத்தேன்.
‘‘என்னோட கமெண்ட் எப்படி இருந்தாலும் அதை அப்படியே டி.வி.யில் டெலிகாஸ்ட் பண்ணுவீங்களா...?’’
“பண்ணுவோம்...’’
“இந்த இந்திய ஜனநாயகத்தில் மக்களுக்கு எப்படி நம்பிக்கையில்லையோ... அதேமாதிரி பட்ஜெட்டில் சொல்லப்படுகிற திட்டங்களிலும் அவங்களுக்கு நம்பிக்கையில்லை. – போடுகிற
வரிகளையெல்லாம் முன்னாலேயே போட்டுவிட்டு அப்புறமும் எதுக்காக தனியா பட்ஜெட்…”
“அப்படீன்னா… வரியே விதிக்கக் கூடாதுன்னு சொல்றீங்களா?’’
“வரி விதிக்கலாம்... ஆனா... அந்த வரி விதிப்பு மக்களை இம்சைப்படுத்தாமே இருக்கணும்... பூவுக்கு வலிக்காமல் பூவை சேதப்படுத்தாமல் வண்டுதேன் எடுக்குமே... அந்த மாதிரி இருக்க வேண்டும்... ஆனா இப்போது போடப்படுகிற பட்ஜெட்டுக்கள் செடிகளின் ஆணி வேரையே ஹதம் பண்ணுகின்றன...”
“இப்போது இருக்கிற நிதி அமைச்சரைப் பத்தி என்ன நினைக்கிறீர்கள்...?”
“அவர் தன்னை கெட்டிக்காரர் மாதிரி காட்டிக்கொள்கிறார். அவ்வளவுதான்...”
“முடிவாக பட்ஜெட்டைப் பத்தி...?”
“ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் சந்தோஷப்படுகிற மாதிரி என்றைக்கு ஒரு பட்ஜெட் வருகிறதோ... அன்னைக்குத்தான் உண்மையான பட்ஜெட்...”
நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே - தூரத்தில் பஸ்ஸின் முகம் தெரிந்தது. நான் போக வேண்டிய பஸ்