1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

பீட்டர் திண்ணையில் சைக்கிளை சாய்த்து நிறுத்திவிட்டு - வீட்டுக்குள் நுழைந்தான். கண்களிலும்- மீசையிலும் நடிகர் பிரதாப்பை நினைவுக்குக் கொண்டு வந்தான். சிவில் எஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு பக்கத்து டவுனில் சொந்தமாக சிவில் கன்சல்டன்ஸி அலுவலகம் நடத்தி வருபவன். பிஸ்னெஸ் சூடுபிடித்து விட்டதால் இன்னும் சில வாரங்களில் சைக்கிளை உதறிவிட்டு ஒரு ஹிண்ட்-சூசூகி வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறான். ஈஸி சேரில் உட்கார்ந்து - யோவானின் நல்வழி புத்தகம் ஒன்றில் மூழ்கியிருந்த பீட்டரின் அப்பா ஸ்டேன்லி அவனுடைய வரவால் கலைந்து போய் நிமிர்ந்தார். “என்ன பீட்டர் இன்னிக்கு லேட் போலிருக்கு?” “இன்னிக்கு…mehr

Produktbeschreibung
பீட்டர் திண்ணையில் சைக்கிளை சாய்த்து நிறுத்திவிட்டு - வீட்டுக்குள் நுழைந்தான். கண்களிலும்- மீசையிலும் நடிகர் பிரதாப்பை நினைவுக்குக் கொண்டு வந்தான். சிவில் எஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு பக்கத்து டவுனில் சொந்தமாக சிவில் கன்சல்டன்ஸி அலுவலகம் நடத்தி வருபவன். பிஸ்னெஸ் சூடுபிடித்து விட்டதால் இன்னும் சில வாரங்களில் சைக்கிளை உதறிவிட்டு ஒரு ஹிண்ட்-சூசூகி வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.
ஈஸி சேரில் உட்கார்ந்து - யோவானின் நல்வழி புத்தகம் ஒன்றில் மூழ்கியிருந்த பீட்டரின் அப்பா ஸ்டேன்லி அவனுடைய வரவால் கலைந்து போய் நிமிர்ந்தார்.
“என்ன பீட்டர் இன்னிக்கு லேட் போலிருக்கு?”
“இன்னிக்கு செவ்வாய். அந்தோணியார் கோயிலுக்கு போய்ட்டு வந்தேன்”
ஸ்டேன்லி பீட்டரின் அப்பா. பாங்க் ஒன்றில் வேலையிலிருந்த ஸ்டேன்லி ரெண்டு வருஷத்திற்கு முன்னால் வாலண்டியர் ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டவர். இப்போது ரிடையராகிற வயது. சுத்தமாய் தலை, தாடிப் பிரதேசங்களில் நிறமிழந்திருந்தார். படிக்க கண்ணாடியின் துணை அவசியமாயிருந்தது. மார்பில் நிளமாய் தொங்கிய செயினின் முடிவில் ஒரு வெள்ளி சிலுவை புரண்டது.
பீட்டர் ஷர்ட்டைக் கழற்றி சுவர் ஆணியில் மாட்டிவிட்டு பின்பக்கம் போய் கை, கால், முகம் கழுவிவிட்டு துண்டால் முகத்தை ஒற்றியபடியே திரும்பி வந்தான்.
“ஏன் பீட்டர்...”
“சொல்லுங்கப்பா...”
“கவர்ன்மெண்ட் வொர்க் ஒண்ணை கான்ட்ராக்ட் எடுத்திருந்தியே...?நான் எடுக்கலைப்பா... கருணாம்பிகா மெஷின் வொர்க்ஸ் லிமிடெட் டைரக்டர் மருதநாயகம் எடுத்த கான்ட்ராக்ட் அது... அதுக்காக என்னை வேலை பார்க்க சொன்னார்...”
“அதுல என்னவோ ப்ராப்ளம்னியே, சரியாயிடுச்சா?”
“இல்லைப்பா.... பாதியில நான் வொர்க்கை பார்க்க முடியாதுன்னுட்டேன்... அவனெல்லாம் ஒரு பெரிய மனுஷன்... கவர்ன்மென்ட் பணத்தை திங்கறதுலயே குறியா இருக்கான்... மனசாட்சி உள்ளவன் அந்த ஆளோட சேர்ந்து வேலை செய்ய மாட்டான்...”
“ஸோ, வொர்க் - வேண்டாம்னுட்டே....?”
“இன்னிக்குதான் சொன்னேன்... சொன்னதோடு மட்டும் நிக்கப் போறதில்லை கவர்ன்மென்ட் ஆஃபிசர்ஸ்கிட்டே அந்த மருதநாயகத்தோட ஊழலை பத்தி சொல்லப் போறேன்...”
“சில பெரிய மனுஷங்க அப்படிதான் இருப்பாங்க பீட்டர்.... நமக்கு பிடிக்கலைன்னா ஒதுங்கிக்க வேண்டியது தான்... அதுக்காக அங்கேயும் இங்கேயும் அவங்களைப் பத்தி சொல்லி வீண் பகையை வளர்த்துக்க வேண்டாம். அந்த ஆளோட வொர்க்கை செய்ய மாட்டேன்னு சொல்லிட்டியில்லே? விடு பிரச்னையை...”
“ந்நோ... இப்படி எல்லாரும் பயந்துகிட்டிருந்தா கவர்ன்மென்ட் பணத்தைத் திங்கறவன் தின்னுட்டேதான் இருப்பான்... இவனை மாதிரி நாலு பெரிய மனுஷங்க மாட்டிகிட்டா எல்லாருக்கும் கொஞ்சம் பயம் வரும்...”
“நீ சொன்னா கேக்க மாட்டே பீட்டர்...!”
ஸ்டேன்லி மறுபடியும் அந்த நல்வழி புத்தகத்துக்குள் மூழ்கினார்.
பீட்டர் கண்ணாடி முன்பாக நின்று தலை வாரி- பவுடரை ஒரு கோட்டி முகத்துக்குக் கொடுத்துவிட்டு மறுபடியும் சர்ட்டுக்குள் நுழைந்தான்.
“அப்பா... நான் சர்ச்சுக்கு போய்ட்டு வர்றேன்...”
பீட்டர் வெளியே வந்தான்