1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
1 °P sammeln
  • Format: ePub

கல்யாணம் முடிந்த மறுநாளே குலதெய்வம் கோயில் வழிபாடு, இன்னும் சில கோயில்கள் என பிரசாத்தின் அம்மா தீர்மானித்து விட்டாள்! அதையாவது குறைந்த நபர்களோடு போனார்களா? இரண்டு வேன் வைத்துக் கொண்டு, இருபத்தி நான்கு பேர் கொண்ட கூட்டம் புறப்பட்டது! அதுவும், காலை மூணு மணிக்கே எழுந்து புளிசாதம், இட்லி, சப்பாத்தி, தயிர் சாதம் என ஒரு பட்டாளமே இறங்கி வேலை பார்த்தது! “அக்கா! மருமகளைக் கூப்பிட்டு வேலை குடு! நீதான் ஆளுக்கு தகுந்த மாதிரி வேலை தருவியே!” “இப்பத்தானே வாழ வந்திருக்கா! அவ எதுவும் செய்ய வேண்டாம். அவங்க சின்னக்குடும்பம்! பெரிய குடும்பத்துக்கு செஞ்சு பழக்கம் இருக்காது வசுமதி!” அந்த காமெடி பீஸ் கேட்கவில்லை!…mehr

Produktbeschreibung
கல்யாணம் முடிந்த மறுநாளே குலதெய்வம் கோயில் வழிபாடு, இன்னும் சில கோயில்கள் என பிரசாத்தின் அம்மா தீர்மானித்து விட்டாள்!
அதையாவது குறைந்த நபர்களோடு போனார்களா?
இரண்டு வேன் வைத்துக் கொண்டு, இருபத்தி நான்கு பேர் கொண்ட கூட்டம் புறப்பட்டது!
அதுவும், காலை மூணு மணிக்கே எழுந்து புளிசாதம், இட்லி, சப்பாத்தி, தயிர் சாதம் என ஒரு பட்டாளமே இறங்கி வேலை பார்த்தது!
“அக்கா! மருமகளைக் கூப்பிட்டு வேலை குடு! நீதான் ஆளுக்கு தகுந்த மாதிரி வேலை தருவியே!”
“இப்பத்தானே வாழ வந்திருக்கா! அவ எதுவும் செய்ய வேண்டாம். அவங்க சின்னக்குடும்பம்! பெரிய குடும்பத்துக்கு செஞ்சு பழக்கம் இருக்காது வசுமதி!”
அந்த காமெடி பீஸ் கேட்கவில்லை!
“பழக்கிவிடுக்கா!”
அங்கே ஒரு முசுட்டு பெரியப்பா - அதிகபிரசங்கி பெரியப்பா, எதைப்பார்த்தாலும் பெருமூச்சு விடும் ஒரு அத்தை - செக்ஸ் ஜோக்கை கொஞ்சம் கூட லஜ்ஜையில்லாமல் சொல்லும் ஒரு மாமா... நல்லதும் கெட்டதுமாக கலந்த ஒரு பாட்டி... தவிர வாண்டுக் கூட்டங்கள்... அவர்களது மழலையை அதே குரலில் சொல்லிக்காட்டும் அக்காக்கள்... இந்த மாதிரி ஒரு கும்பல்!
பிரசாத்துக்கு பயமாக இருந்தது!
நேற்று ரத்திரி அவள் பேசிய பேச்சு, அவனை உறங்கவிடவில்லை! இதே நிலைமையில் இருந்தால், இவள் யாரிடம் என்ன பேசுவாளோ என்ற பதட்டம் இருந்தது“என்னடா? ராத்திரி தூங்கினியா?” ஒரு அக்கா புருஷன்!
“மூஞ்சி வீங்கிக்கிடக்கு! காலைல கதவு திறந்ததும் குழந்தையோட வருவான்னு நெனச்சேன்!”
இன்னொரு மாமா!
“டேய்! உங்கம்மா பெத்தது மொத்தம் எட்டு! மிஞ்சினது நீங்க அஞ்சு பேர்!”
“அந்தக் காலத்துல பொழுது போக்கே பலான விஷயம்தானே?”
பெரியவர்கள், குழந்தைகள் இருக்கும் வீடு என பார்க்காமல் அப்பட்டமாக பேசும் உறவுகள்.
நாற்பது கடந்த பெண்கள் வெட்கப்படுவதும், அவர்களை சேர்த்து வைத்து ஐம்பது கடந்த அரைக்கிழங்கள் தாம்பத்ய வர்ணனை தருவதும்... இரவு நேர ரெக்கார்ட் டான்ஸை மிஞ்சியது!
வேனில் புறப்பட்டு போய் நாலு நாட்களில் பதினோரு கோயில்கள் என கதறக் கதற அடித்து, கொண்டு போன உணவு ஊசிப்போக, வெளியில் நல்ல ஓட்டலை பதிவு செய்யாமல் சத்திரம், சாவடி என தங்கிக்கொண்டு, நரகத்தை உணர்ந்தாள் சொப்னா.
“டேய்! ரெண்டாவது நாள் பிரியக்கூடாது! தனி ரூம் குடுங்க!”
இவர்களுக்கு மட்டும் மட்டமான லாட்ஜில் ஒரு கேவலமான அறை!
ஜன்னல் வழியாக மூத்திர நாற்றம். மூச்சு முட்டியது!
“24 பேர் இருக்கும் போது பெரிய ஓட்டல்கள்ள ரூம் போட்டா கட்டுப்படியாகாது! கொஞ்சம் சமாளி சொப்னா!”
“எதுக்கு 24 பேர்? நமக்குக் கல்யாணமாகி, குல தெய்வ வழிபாட்டுக்கு நம்ம கூட உங்கப்பா, அம்மா மட்டும் போதாதா! இத்தனை பெரிய கும்பல் வேணுமா!”
“எல்லாரும் பணத்தை ஷேர் பண்ணிப்பாங்க!”
அவள் பேசவில்லை!
“நேத்திக்கே நமக்கு எதுவும் நடக்கலை!“வேண்டாம். அதுக்கொரு வசதியும், மனசந்தோஷமும் வேணும் பிரசாத்! இத்தனை நாற்றங்களோட, ஒரு தாம்பத்யம் தொடங்க வேண்டாமே! பிளீஸ்!”
மறுநாள் ஒரு பெரிய கோயில் வழிபாடு!
அந்தக்குளத்தில் குளித்தால்தான் விசேஷமாம்.
அது குலதெய்வம் கோயில்!
ஆண், பெண்களுக்கு தனித்தனி படித்துறை!
ஆனாலும் குளம் திசை வரும் போது சகலமும் கலக்கும் மையப்பகுதி!
“அய்யோ! இங்கே எப்படி அத்தே குளிக்கிறது!”
அந்த காமெடி பீஸ் வந்து விட்டது


Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.