1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
1 °P sammeln
  • Format: ePub

சாந்தி! அப்பாவும், ரமணியும் வந்தாச்சு! சாப்பாடை எடுத்துட்டு வா!” லஷ்மி நாராயணன் சொன்னது கேட்டது. “நான் சமையல் பண்ணலை!” “என்னடீது? குண்டைத் தூக்கிப் போடற?” “என்னால முடியலை! பசங்களுக்கு பிரெட் தந்தாச்சு! எனக்கு ஒரு டம்ளர் பால் போதும்! நீங்களும் பிரெட் சாப்பிட்டுக்குங்க!” “நான் சாப்பிடறது இருக்கட்டும். அப்பாவும், ரமணியும் எதைச் சாப்பிடுவாங்க?” “நானும் மனுஷிதான்! காலைல எழுந்தா, ராத்திரி வரைக்கும் வேலை சரியா இருக்கு! ஒரு நாளைக்கு முடியலைனு உட்காரக் கூடாதா?” “அதை சாயங்காலமே சொல்லித் தொலைக்கக் கூடாதா நீ? அண்ணிகிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணி இருப்பேனே!” “உங்கப்பாவும், தம்பியும் ஓட்டல்ல ஒரு நாளைக்கு…mehr

Produktbeschreibung
சாந்தி! அப்பாவும், ரமணியும் வந்தாச்சு! சாப்பாடை எடுத்துட்டு வா!”
லஷ்மி நாராயணன் சொன்னது கேட்டது.
“நான் சமையல் பண்ணலை!”
“என்னடீது? குண்டைத் தூக்கிப் போடற?”
“என்னால முடியலை! பசங்களுக்கு பிரெட் தந்தாச்சு! எனக்கு ஒரு டம்ளர் பால் போதும்! நீங்களும் பிரெட் சாப்பிட்டுக்குங்க!”
“நான் சாப்பிடறது இருக்கட்டும். அப்பாவும், ரமணியும் எதைச் சாப்பிடுவாங்க?”
“நானும் மனுஷிதான்! காலைல எழுந்தா, ராத்திரி வரைக்கும் வேலை சரியா இருக்கு! ஒரு நாளைக்கு முடியலைனு உட்காரக் கூடாதா?”
“அதை சாயங்காலமே சொல்லித் தொலைக்கக் கூடாதா நீ? அண்ணிகிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணி இருப்பேனே!”
“உங்கப்பாவும், தம்பியும் ஓட்டல்ல ஒரு நாளைக்கு சாப்பிடட்டுமே! குறைஞ்சா போய்டுவாங்க?”
“சாந்தி! நீ என்ன பேசற? அப்பாவுக்கு ஓட்டல் சாப்பாடு சேராதுனு உனக்குத் தெரியாதா?”
“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? ரமணிக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கட்டும். புது மருமகள் வந்து சமைச்சுப் போடட்டும்!”
“அதை நீ சொல்ல வேண்டியதில்லை!”
“நான் சொல்லாம், யார் சொல்லுவாங்க?சாந்தி பேசாம இரு!”
“இதப்பாருங்க! நீங்க ஒரு சம்பளக்காரர். பிடித்தம் போக நீங்க கொண்டு வர்ற பணத்துல குடித்தனம் நடத்த மூச்சு முட்டுது! உங்கப்பா, ரமணி ரெண்டு பேருக்கும் மாசம் பதினஞ்சு நாளைக்கு சாப்பாடு! என்ன செலவு?”
“அடிப்பாவி! பெத்த தகப்பன்கிட்ட, கூடப்பிறந்த தம்பிகிட்ட கணக்கு பாக்கச் சொல்றியா?”
“தாயும், பிள்ளையும் ஆனாலும் வாயும், வயிறும் வேறதாங்க! உங்கப்பாவுக்கு பென்ஷன் இருக்கு! தம்பி சம்பாதிக்கறார். என்ன தர்றாங்க?” ரமணி எழுந்து விட்டான்.
“இரு ரமணி! அவ பேசட்டும்! நீ குறுக்கே போகாதே!”
“இல்லைப்பா! இத்தனை நாள் சாப்பிட்டதுக்கு செக் போட்டுத் தந்துர்றன். எனக்கும் தன்மானம் இருக்கு!”
ரமணியின் குரல் கேட்டு லஷ்மி, சாந்தி இருவரும் வெளியே வந்தார்கள்.
“ரமணி நீ இரு! அண்ணிகிட்ட நான் சொல்றேன்!”
அதற்குள் கெளரிசங்கரும், சரோஜாவும் வெளிப்பட்டார்கள்.
“அண்ணி! அப்பா, ரமணிக்கு இன்னிக்கு நீங்க சாப்பாடு தந்துருங்க!”
“ஏன்? சாந்திக்கு என்னாச்சு?”
“அவளால முடியலியாம்!”
“என்னங்க! உங்க தம்பி பொண்டாட்டியால முடியலியாம். என் உடம்பு மரக் கட்டையா? இருக்கறவங்களுக்கெல்லாம் வடிச்சுக் கொட்டவா நானிருக்கேன்?”
ரமணி அதிர்ந்தான்