பீடியை வீசியெறிந்தான் அவன். “எவன் வீட்டில இழவு விழுந்ததுன்னு இம்மாங்கூட்டம். எம்மா நேரம் வெயில்ல கிடக்கிறது. ந்தா... அந்தச் சனியன் ஏன் இப்படி உயிர் போறாப்போல கத்துது? கல்லு மாதிரி நிக்கிறியே... பால் பாட்டிலை எடுத்துக் குடேன்...” - என்றான்.
சாராய வாடை குமட்டிக்கொண்டு வந்தது வெண்ணிலாவுக்கு.
பழக்கமற்ற இரைச்சல். குழந்தையின் அழுகை. வாகன நெரிசல். சுட்டெரிக்கும் வெயில்... எல்லாவற்றுக்கும் மேலாக மாமனின் சாராய நாற்றம். பதில் பேச மனமின்றித் தோளிலிருந்து வழுக்கிக்கொண்டிருந்த குழந்தையை வியர்வை வழியும் கையோடு தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள்.
குழந்தை திமிறிக்கொண்டு வீறிட்டது. அப்போதுதான் அவள் அருகே அந்தக் கம்பீரமான ஆண் குரல் கேட்டது.
“எக்ஸ்கியூஸ் மீ!” என்றான் சந்துரு.
தனக்கு வெகு அருகே கேட்ட குரலில் திரும்பினாள் வெண்ணிலா. அவளைத் தொடர்ந்து குருசாமியும் திரும்பினான். “யாரு?” என்றான் அதட்டும் குரலில்.
சந்துரு அமைதியாய், “ஸார்! வெயில் இப்படிக் கொதிக்குதே... கைக் குழந்தையோட இப்படிக் கஷ்டப்படுறாங்களே... இதுதான் என்னோட கார். ஏ.சி. கார். டிராஃபிக் குறையுற வரைக்கும் என் கார்லே வேணா உட்காருங்களேன். பாவம்... இந்த வெயிலைக் குழந்தையும் எப்படித் தாங்கும்? செருப்புகூட இல்லாம நிக்கிறாங்களே... ப்ளீஸ் ஸார்! கார்ல உட்கார்ந்துக்குங்க...” என்றான்.
குருசாமியின் கண்கள் இரத்தச் சிவப்பாய் மாறிவிட... வெண்ணிலாவைப் பார்த்தான். அவள் முகம் வெளிறி நடுங்கினாள். எச்சில் விழுங்கியவாறே பயமாய்ப் பார்த்தாள்.
“யாருடி இவன்?” - சிங்கத்தின் சீற்றம் தெரிந்த அவன் குரலில் நடுநடுங்கிப் போனாள் வெண்ணிலா.
“மாமா... தெரியாது மாமா. இவர் யாருன்னே தெரியாது மாமா!” - சொல்லும்போதே கண்ணில் நீர் நிறைந்தது.
சந்துருவின் முகம் குழப்பம் அடைந்தது.
'என்ன கேட்கிறான், இவன்?'
“எனக்குத் தெரிஞ்சு போச்சுடி. இவராம் இவர்... உன் இவருக்கு நீ வெறும் காலோட நிக்கிறதைப் பார்க்க முடியலியாமே... ஏன்டி இவனை நினைச்சுட்டுத்தான் என்னை வேண்டாமின்னியா?
அதுவும் சரிதான். ஏ.சி. கார் வைச்சிருக்கிறவனை விட்டுட்டு வாடகை ரிக்ஷா ஓட்டுபவனைக் கட்டிக்க மனசு வருமா என்ன? ஆளும் பார்க்க ஷோக்காத்தான் இருக்கான். எத்தினி நாள் பழக்கம் இது? கேட்கறனில்ல... சொல்லுடி!” - குருசாமியின் அதட்டலில் அழுதேவிட்டாள்.
“ஐயோ! இல்லை மாமா... சத்தியமா இவர் யாருன்னே - தெரியாது. என்னை நம்புங்க மாமா!” - என்றவளின் கண்ணீர் தன்னைச் சுட வெகுண்டு எழுந்தான் சந்துரு.
சட்டெனக் குருசாமியின் சட்டையைக் கொத்தாகப் பற்றினான்.