1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
1 °P sammeln
  • Format: ePub

ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வு. பார்க்கும் விஷயங்கள் எல்லாமே அவர்களை சந்தோஷப்படுத்துகிறது. சின்ன கண்ணனின் வரவு, உலகின் ஒட்டு மொத்த இன்பத்தையும் அவர்கள் மடியில் போட்டு தாலாட்டுவது போன்ற நிறைவு... உடலின் ஒவ்வொரு ‘செல்’லிலும் இவன் என் மகன் என்ற எண்ணம் படிந்து போக, இருவரும் அன்பையும், பாசத்தையும் அவன் மேல் மழையாக பொழிகிறார்கள். “இவ்வளவு சொல்லியும் கேட்காமல், யாரோ பெத்த பிள்ளையை அதுவும் முறை தவறி பிறந்தவனை, தூக்கிட்டு வந்து கொண்டாடுறீங்க... இது நம் குல தெய்வத்துக்கு ஆகாது. என்ன கஷ்டம் வரப் போகுதோ தெரியலையே...” “தூக்கிட்டு போங்க. இனி இவனை மகன்னு சொல்லிட்டு என் எதிரில் வராதீங்க...” அம்மா, அன்போடு…mehr

Produktbeschreibung
ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வு.
பார்க்கும் விஷயங்கள் எல்லாமே அவர்களை சந்தோஷப்படுத்துகிறது. சின்ன கண்ணனின் வரவு, உலகின் ஒட்டு மொத்த இன்பத்தையும் அவர்கள் மடியில் போட்டு தாலாட்டுவது போன்ற நிறைவு...
உடலின் ஒவ்வொரு ‘செல்’லிலும் இவன் என் மகன் என்ற எண்ணம் படிந்து போக, இருவரும் அன்பையும், பாசத்தையும் அவன் மேல் மழையாக பொழிகிறார்கள்.
“இவ்வளவு சொல்லியும் கேட்காமல், யாரோ பெத்த பிள்ளையை அதுவும் முறை தவறி பிறந்தவனை, தூக்கிட்டு வந்து கொண்டாடுறீங்க... இது நம் குல தெய்வத்துக்கு ஆகாது. என்ன கஷ்டம் வரப் போகுதோ தெரியலையே...”
“தூக்கிட்டு போங்க. இனி இவனை மகன்னு சொல்லிட்டு என் எதிரில் வராதீங்க...”
அம்மா, அன்போடு வரவேற்பாள் என்று ஆசையுடன் வந்தவன், வீட்டிற்குள் நுழைய விடாமல் சப்தம் போட,
“வா சாந்தி போகலாம். நம் மனசையும், உணர்வையும் அவங்க மதிக்கலை. ஒரு குழந்தைக்காக தவம் இருந்த ஏக்கம் நமக்கு தான் தெரியும்.
இனி நம் உலகமே சூர்யா தான். அவனுக்காக வாழ்வோம். உறவுன்னு சொல்ல, அவன் ஒருவன் நமக்கு போதும்.”
சாந்தியுடன், குழந்தையை தூக்கியபடி வெளியேறுகிறான் சங்கர்.
குழந்தை சூர்யாவுடன் இரண்டு வருட வாழ்க்கை இனிமையாக போக,
அந்த கருப்பு நாள் சாந்திக்காக விடிகிறது.
வேலைக்கு போன சங்கர், லாரியில் அடிபட்டு பொட்டலமாக திரும்புகிறான்“ஐயோ சாந்தி, உனக்கு இப்படியொரு நிலைமையா வரணும். கல்யாணமாகி இப்ப தானே இரண்டு வருஷமாக உன் முகத்தில் மலர்ச்சியைப் பார்த்தோம். அதை பொறுக்கமுடியாமல் அந்த கடவுள், சங்கரை அழைக்கிட்டாரே...”
தோழியை கட்டிக் கொண்டு புவனா தான் கதறி அழுகிறாள்.
“எனக்கு அப்பவே தெரியும். குழந்தைங்கிற பேரில் இந்த சனியனை வீட்டுக்குள் கொண்டு வந்தாங்க.
இந்த குட்டிச்சாத்தான் என் மகனை வெளியே அனுப்பிட்டானே... சண்டாளி எல்லாம் இவளால் வந்த வினை.
இந்த மலடி தான் என் பிள்ளை மனசை கலைச்சு... இப்படி செய்து... இப்ப என் மகனின் உயிரை பலி கொடுத்துட்டா”
மகன் போன துக்கத்தில் வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி அவர்களை தூற்றுகிறாள்.
“சாந்தி தனியாக இருக்கிறாள் என்ற பரிதாபம் சிறிதும் இல்லாமல், வந்த உறவு ஜனம் காரியம் முடிந்த கையோடு கிளம்ப, முதல் ஆளாக சங்கரின் தாய் வெளியேறுகிறாள்.”
“என்ன ஒரு கல் மனசு. உன் நிலைமையை நினைச்சு பார்க்காமல் எல்லாரும் ஒட்டு மொத்தமாக போய்ட்டாங்களே...”
சினேகிதிக்காக புவனா கவலைப்பட,
“என் சூர்யா மட்டும் எனக்கு போதும் புவனா. இந்த உலகமே என்னை கை விட்டாலும் என் சூர்யாவின் அருகாமையில் நான் வாழ்ந்துடுவேன் புவனா.
அவருடைய இழப்பை... என் மகன் சரிகட்டுவான். இவனோட தாய்ங்கிற சந்தோஷம் மட்டும் எனக்கு கடைசிவரை இருந்தால் போதும்”
சுரேனும், புவனாவும் சாந்திக்கு உதவியாக இருக்கிறார்கள். கவினும், சூர்யாவும் சகோதர பாசத்துடன் பழக, புவனாவுடன், சாந்தி வேலைக்கு போக தொடங்குகிறாள்.
காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே... நாட்கள் வேகமாக நகர்ந்து, வருடங்கள் உருளகவின் படித்து முடித்து, திருமணமாகி, வேலை பார்க்கும் சேலத்தில் செட்டிலாக,
இன்று வரை புவனா தான் சாந்திக்கு துணையாக அருகிலேயே இருக்கிறாள்.
கதவு தட்டப்பட,
“வா புவனா... இந்த சூர்யா நேரத்துக்கு கிளம்பாமல் லேட் பண்ணிட்டான். இப்ப தான் போனான்.
இதோ அஞ்சு நிமிஷம், புறப்பட்டு வரேன்”
“ஒண்ணும் அவசரமில்லை. மெதுவா வா... நமக்கு இன்னும் நிறைய டயம் இருக்கு.”
சோபாவில் உட்கார்ந்தவள், மாலையுடன் காட்சியளிக்கும் சங்கரின் படத்தையும், மகனுக்காக தவ வாழ்க்கை வாழும் சாந்தியையும் மாறி, மாறி பார்க்கிறாள்