1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

சுபாஷ் வீட்டிற்கு வந்தபோது அப்பா சுப்பையா வாசலிலேயே அமர்ந்திருந்தார். கையில் செய்தித்தாள் இருந்தது. அவருக்கு வயது அறுபதாகப் போகிறது. இன்னும் முகத்தில் கம்பீரமும், கடுமையும் விட்டுப் போகவில்லை. அவர் சாதாரணமாகப் பார்த்தாலே யாருக்கும் பயம் ஏற்படும். அப்படி ஒரு பார்வை. அவரைப் பார்த்தாலே... அந்தப் பார்வையை சந்தித்தாலே சுபாஷுக்கு குலை நடுங்கும். அந்தப் பார்வைக்காகத்தான் அவன் எதையெல்லாம் இழந்திருக்கிறான்! அவர் அந்தப் பார்வையினால் எதையெல்லாம் சாதித்திருக்கிறார்! சுபாஷுக்கு ஓவியம் வரையும் திறமை இருந்தது. அதிலேயே தன்னை அர்ப்பணிக்கத் துடித்தான். அவனுடைய ஆசை, லட்சியம் எல்லாம் இதோ இந்த பார்வையாலேயே…mehr

Produktbeschreibung
சுபாஷ் வீட்டிற்கு வந்தபோது அப்பா சுப்பையா வாசலிலேயே அமர்ந்திருந்தார். கையில் செய்தித்தாள் இருந்தது. அவருக்கு வயது அறுபதாகப் போகிறது. இன்னும் முகத்தில் கம்பீரமும், கடுமையும் விட்டுப் போகவில்லை. அவர் சாதாரணமாகப் பார்த்தாலே யாருக்கும் பயம் ஏற்படும். அப்படி ஒரு பார்வை.
அவரைப் பார்த்தாலே... அந்தப் பார்வையை சந்தித்தாலே சுபாஷுக்கு குலை நடுங்கும். அந்தப் பார்வைக்காகத்தான் அவன் எதையெல்லாம் இழந்திருக்கிறான்! அவர் அந்தப் பார்வையினால் எதையெல்லாம் சாதித்திருக்கிறார்!
சுபாஷுக்கு ஓவியம் வரையும் திறமை இருந்தது. அதிலேயே தன்னை அர்ப்பணிக்கத் துடித்தான். அவனுடைய ஆசை, லட்சியம் எல்லாம் இதோ இந்த பார்வையாலேயே அழிந்தது.
‘டிராயிங் வரைஞ்சே குடும்பத்தைக் காப்பாத்திடுவியா? டிராயிங் போடற வேலையைப் போட்டுட்டு பொழைக்கற வழிய பாரு. ஒழுங்கா படி.’
- என்று ஆரம்பித்து ‘ஓவியக் கல்லூரியில் சேர வேண்டும்’ என்ற அவனுடைய ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
ஆத்மா ஆசைப்படும் வேலையிலிருந்து விடுபட்டு அப்பாவின் சொற்களுக்கு பயந்து அவர் கைகாட்டிய படிப்பை படித்து, அவர் வேலை வாங்கித் தந்த நிறுவனத்தில் உழைத்து...
அவனைப் பொறுத்தவரை திருப்தி இல்லாத வாழ்க்கை.
மனதிற்குள் முதன் முதலாய் முளைவிட்ட காதலை தனக்குத்தானே நசுக்கிக் கொண்டதும் இதோ இந்த அப்பாவிற்கு பயந்துதான்.காதல் என்று இறங்கிவிட்டு பின்னால் அப்பாவை எப்படி எதிர் கொள்வது’ என்ற கேள்வி, காதலின் ஆரம்பத்திலேயே எழ, அதை அடியோடு அழித்துக் கொண்டான்.
அதிலும் அவன் தோல்வியுற்றான்.
இப்பொழுதும் மனதிற்குள் சங்கமித்திரையின் முகம் வந்து போகும், தன்னையும் மீறி கலங்குவான்.
அவளிடம் கூட தன் காதலை அவன் சொன்னதில்லை. யாருக்கும் தெரிவிக்காமல் மனதிற்குள்ளேயே வைத்திருந்து அழித்துவிட்டான்.
காரணம் -
பயம். அப்பாவிற்கு முன் அடிமை போல் குறுகிப் போவான். அப்படி வளர்ந்தான். அந்த வளர்ப்பு அவனை பரம சாதுவாக்கியிருந்தது. அதனால் அவனுக்கு நண்பர்கள் அதிகம் இல்லை. அதட்டிப் பேசும் பழக்கம் அவனிடம் இல்லை. யாராக இருந்தாலும் பணிந்து போய் பழக்கப்பட்டவன். எதிர்த்துப் பேசும் எண்ணம் இல்லாதவன். பல அப்படிப்பட்டவனால் எப்படி இப்பொழுது பயப்படாமலிருக்க முடியும்?
உள்ளே நுழைந்ததும் அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு படிப்பதைப்போல் பாவனை செய்தார்.
இந்த நேரத்தில் அவர் எப்பொழுதும் வீட்டிலிருக்கமாட்டார். ஓய்வு பெற்று வந்த பணத்தை வட்டிக்கு விட்டிருக்கிறார். அதை வசூலிக்க தினமும் வெளியே செல்வார். இன்றைக்கு அவனுக்கு சம்பள தேதியாதலால் இருக்கிறார். அவருக்கு எப்பொழுதும் மனம் பணத்திலேயே இருக்கும்.
உள்ளே வந்தவன் சட்டையைக் கூட கழற்றாமல் நேரே தன் படுக்கையறைக்குள் நுழைந்து அப்படியே படுத்துவிட்டான்.
தங்கை சுசிலா உள்ளே சமையலறையில் அம்மாவுடன் ஏதோ பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்து கொண்டிருந்தது.
சில நிமிடங்களில் அம்மா லோகநாயகி அவனுடைய அறையினுள் நுழைந்தாள்.
“என்னடா... வந்ததும் படுத்திட்டே? உடம்பு சரியில்லையா?” என அவனுடைய நெற்றியில் கை வைத்தாள்அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா. சும்மாதான் படுத்திருக்கேன். ஒரே களைப்பா இருக்கு” என்றான்.
“வேலை அதிகமா?” என்றாள்.
“ஆமாம்மா.”
“சரி படுத்திரு. நான் போய் காபி கொண்டு வர்றேன்” என உள்ளே சென்றாள்.
அம்மாவின் நடையில் ஒரு வேகம் இருந்தது.
காரணம் - இன்றைக்கு சம்பள நாள்.
‘எல்லோரையும் ஏமாற்றப் போகிறேன்.’
அம்மா காபியுடன் வந்தாள்.
“எழுந்திரிப்பா.”
எழுந்து உட்கார்ந்தான். காபியை வாங்கும்போதே கைகள் நடுங்கின.
“ஏம்பா... கையெல்லாம் இப்படி நடுங்குது? என்ன ஆச்சு?”
“அது வந்து...”
வாங்கிய காபியை குடிக்க முடியவில்லை.
கை நடுங்கியதில் காபி தளும்பியது. தொடையில் சிந்தியது. சுட்டது.
“சொல்லுப்பா... என்ன விஷயம்?”
“அம்மா...” என அழைத்தபடியே காபியை அம்மாவின் கையிலேயே கொடுத்தான்.
“என்னப்பா ஆச்சு? ஏன் இப்படியிருக்கே?”
“அம்மா... வந்து என்னோட... என்னோட...”
“சொல்லுப்பா.”
“என்னோட சம்பளப் பணம் காணாம போயிட்டு.திக்கென அதிர்ந்தாள் அம்மா