1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

அரைகுறை வெளிச்சத்தில் அந்த உருவத்தை நன்றாகப் பார்த்தான் உதயகுமார். இந்த நேரத்தில் தோளில் மூட்டையோடு ஒருவன். ஏன்? மூட்டையில் என்ன இருக்கிறது? ஒற்றையடிப் பாதையாதலால், அவன் இவன் நிற்கும் பாதையில்தான் வர வேண்டும். உதயகுமார் சட்டெனச் சவுக்கு மரங்களின் பின்னே இருளில் மறைந்து கொண்டான். அவனைப் பார்த்தான். அவன் இறங்கி வந்து விட்டான். நிலவொளியில் உதயகுமார் கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு பார்த்தான் அவன் அந்த மூட்டையோடு இவன் நின்ற இடத்திற்கு வந்து விட்டான். உதயகுமார் அதிரும் இதயத்துடன் பார்த்துக் கொண் டிருந்தான். அவன் - இவனை நெருங்கியதும் ‘குப்பென நாற்றம் அடித்தது. உதயகுமாருக்கு வயிற்றைப் புரட்டிக் கொண்டு…mehr

Produktbeschreibung
அரைகுறை வெளிச்சத்தில் அந்த உருவத்தை நன்றாகப் பார்த்தான் உதயகுமார்.
இந்த நேரத்தில் தோளில் மூட்டையோடு ஒருவன். ஏன்? மூட்டையில் என்ன இருக்கிறது?
ஒற்றையடிப் பாதையாதலால், அவன் இவன் நிற்கும் பாதையில்தான் வர வேண்டும்.
உதயகுமார் சட்டெனச் சவுக்கு மரங்களின் பின்னே இருளில் மறைந்து கொண்டான். அவனைப் பார்த்தான்.
அவன் இறங்கி வந்து விட்டான். நிலவொளியில் உதயகுமார் கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு பார்த்தான்
அவன் அந்த மூட்டையோடு இவன் நின்ற இடத்திற்கு வந்து விட்டான்.
உதயகுமார் அதிரும் இதயத்துடன் பார்த்துக் கொண் டிருந்தான். அவன் - இவனை நெருங்கியதும் ‘குப்பென நாற்றம் அடித்தது. உதயகுமாருக்கு வயிற்றைப் புரட்டிக் கொண்டு வாந்தி வந்தது. மூக்கைப் பிடித்துக் கொண்டான்.
அவன் இவனைக் கடந்து சென்றுவிட்டான், அவன் நடை லேசாக விந்தி விந்தி நடப்பதைப் போல் இருந்தது. எவ்வளவு முயன்றும் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அரை குறையான நிலவொளியில் முகம் இருட்டாகத் தெரிந்தது.
அவன் கடற்கரையை நோக்கிச் செல்வது தெரிந்தது. அங்கே அவன் என்ன செய்கிறான் எனக் கவனித்தான்.
அவன் மூட்டையைத் தூக்கிக் கடலில் எறிந்தான்.
‘என்னவாக இருக்கும்?’
அவன் கடந்து சென்றபோது அடித்த நாற்றம் அந்த மூட்டையிலிருந்துதான் வந்திருக்க வேண்டும்.
ஒரு வித ரத்த வாடை. ஒரு வித மாமிச நாற்றம்நிச்சயம் அது மனித உடம்பு. அப்படியானால் கொலையா?
ஆமாம். யாரையோ கொலை செய்து மூட்டையாகக் கட்டிக் கடலில் தூக்கி எறிகிறான்.
‘யார் இவன்?’
முகம் தெரியவில்லை.
மூட்டையில் பிணத்தைக் கொண்டு வந்திருக்கிறான் என்றால் நிச்சயம் ஏதாவது ஒரு வாகனத்தில்தான் வந்திருக்க வேண்டும். என் ஊகம் சரியாக இருந்தால் இந்த மேட்டிற்கு மறுபுறம் வாகனம் இருக்க வேண்டும்.
உடனே செயல்பட்டான் உதயகுமார். மரங்களின் மறைவிலிருந்து வெளிப்பட்டான். கிடுகிடுவென அந்த மேட்டுப் பகுதியில் ஏறினான். மறுபுறம் இறங்கும் போதே கவனித்தான். சாலையோரம் ஒரு கார் நின்றிருந்தது. காரினுள் யாரும் இல்லை.
இவன் தனியாகத்தான் வந்திருக்கிறான். காரின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருளோடு இருளாக இருந்தது.
வேறு யாராவது இருக்கிறார்களா எனச் சுற்று முற்றும் பார்த்தான்.
யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். தைரியமாகக் காரின் அருகில் வந்தான். காரின் பின்புறம் வந்து காரின் எண்ணைக் கவனித்தான். வெள்ளை நிற எழுத்துக்கள் நிலவொளியில் அரைகுறையான வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது.
4235.
மனதில் குறித்துக் கொண்டான். காரின் முன் பக்கம் பார்த்தான். உள்ளே அழகான நாய்க்குட்டியின் பொம்மை ஒன்று தொங்கியது.
பின் சீட்டில் கதவுகள் சாத்தப்பட்டிருந்ததால் ஒரே இருட்டாகத்தான் தெரிந்தது.
சட்டென அந்த இடத்தைவிட்டு அகன்றான். அருகிலிருந்த மரத்திற்குப் பின்னே ஒளிந்து கொண்டான்.
சில நிமிடங்களில் வேக வேகமாக அந்த உருவம் கடற்கரைப் பிரதேசத்திலிருந்து மேடேறி வந்தது.
உதயகுமார் பார்த்துக் கொண்டேயிருக்க, அந்த உருவம் காரைத் திறந்து ஏறி அமர்ந்து கொண்டு இயக்கியது.கார் நகர்ந்து வேகம் பிடித்து மறைந்தது. உதயகுமார் மறைவிலிருந்து வெளிப்பட்டு ஒருவிதத் திகிலுடன் நடக்கத் தொடங்கினான்