1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

“என்னங்க! இப்ப வெளியூர்ப் பயணம் தப்போ? யோசனை பண்ணிப் பாருங்க!” அம்மா கேட்டாள். “என்ன தப்பு அதுல? நமக்குனு ஒரு விருப்பம் இருக்கக் கூடாதா? நாம இந்த வீட்ல அடிமைகளா? நாம இல்லாம இருந்தாத் தாண்டி, அதுங்களுக்கு நம்ம அருமை புரியும்!” “நான் இல்லைனு சொல்லலீங்க! ஆனா...! “என்ன ஆனா?” “நமக்குள்ள சலிப்பு நியாயம்தான். வயசான காலத்துல பாரம் சுமக்க முடியலை. எல்லாம் சரிதான். ஆனா நம்மகிட்டேயும் கொஞ்சம் தப்பு இருக்குங்க!” “என்ன உளர்ற?” ‘உளறலை! எல்லாத்துக்கும் ஆளை ஏற்பாடு பண்றதா ரெண்டு பேரும் சொல்றாங்க! நாம ஒப்புக்காம பிடிவாதம் பிடிக்கிறோம்!” “அதெல்லாம் சரிப்படாதுடி!” “ஏன்? நாமும் கஷ்டப்படக்கூடாது! பிரச்னையும்…mehr

Produktbeschreibung
“என்னங்க! இப்ப வெளியூர்ப் பயணம் தப்போ? யோசனை பண்ணிப் பாருங்க!”
அம்மா கேட்டாள்.
“என்ன தப்பு அதுல? நமக்குனு ஒரு விருப்பம் இருக்கக் கூடாதா? நாம இந்த வீட்ல அடிமைகளா? நாம இல்லாம இருந்தாத் தாண்டி, அதுங்களுக்கு நம்ம அருமை புரியும்!”
“நான் இல்லைனு சொல்லலீங்க! ஆனா...!
“என்ன ஆனா?”
“நமக்குள்ள சலிப்பு நியாயம்தான். வயசான காலத்துல பாரம் சுமக்க முடியலை. எல்லாம் சரிதான். ஆனா நம்மகிட்டேயும் கொஞ்சம் தப்பு இருக்குங்க!”
“என்ன உளர்ற?”
‘உளறலை! எல்லாத்துக்கும் ஆளை ஏற்பாடு பண்றதா ரெண்டு பேரும் சொல்றாங்க! நாம ஒப்புக்காம பிடிவாதம் பிடிக்கிறோம்!”
“அதெல்லாம் சரிப்படாதுடி!”
“ஏன்? நாமும் கஷ்டப்படக்கூடாது! பிரச்னையும் தீரணும்னு அவங்க சொல்றாங்க! அதை மறுத்தா, அவங்களுக்கும் பிரச்னைதானே?”
“அவ வேலையை விடட்டுமே!”
“என்ன பேசறீங்க? அத்தனை பெரிய சம்பளம் வாங்கும்போது வேலையை விட முடியுமா?”
“நீ யார் பக்கம் பேசற?“கோவப்படாதீங்க! பணம் இருக்கும்போது ஆள் - அம்பாரினு அவங்களால நிலைமையை சமாளிச்சிட முடியும். கொஞ்சம் தடுமாறி அப்புறமா எழுந்து நின்னுடுவாங்க!”
“நிக்கட்டும்!”
“அப்புறமா நம்ம மேல வெறுப்பு வரும். இத்தனை நாள் பட்ட பாடு இல்லைனு ஆயிடும்! அவன் நமக்கு ஒரே பிள்ளை! அந்த மாதிரி ஒரு கசப்பை சம்பாதிக்கலாமா? சொல்லுங்க!”
“அப்படீன்னா அவளைத் தொங்கணும்னு சொல்றியா?”
“இதப்பாருங்க! இது குடும்பம். கோவமாவே பிரச்னைகளை அணுகினா, பூதாகரமா அது வெடிக்கும்! கொஞ்சம் சாந்தமா பார்த்தா, நல்லதில்லையா?”
“நாளைக்கு நாம போறோம்!”
“என் தம்பி வீட்டுக்குப் போயிட்டு, அங்கிருந்து பதிவு பண்றோமா?”
“ஆமாண்டி! டிக்கெட் கிடைக்கும்! எனக்குப் போகணும்னு தோணியாச்சு! நீ வரலைனாலும் நான் போவேன்!”
“சரி! உங்க பிடிவாதத்தை யாரால மாற்ற முடியும்? நானும் வர்றேன்!”
மறுநாள் காலை எழுந்து சீக்கிரமே குளித்து அம்மா சமையலுக்கான ஏற்பாடுகளைச் செய்ய, சுமி வந்துவிட்டாள்.
“அத்தே! நீங்க பயண ஏற்பாடுகளை கவனிங்க! நான் பாத்துக்கறேன்!”
“நீ வேலைக்கு போக வேண்டாமா?”
“நீங்க ஊருக்குப் போறீங்களே! நான் எப்படி போக முடியும்?”
“ஒரு மாசம் லீவா?” கேட்டபடி அப்பா வர,
“இல்லை மாமா! அதிகபட்சம் ரெண்டு நாள்! ஆட்களை ஏற்பாடு பண்ண அந்த அவகாசம் வேண்டாமா?”
“ஓ... ஆளைப் போடறதா முடிவு பண்ணியாச்சா?”“வேற வழியில்லையே? நான் வேலைக்குப் போயாகணுமே!”
“அப்பவும் நீ வேலையை விடமாட்டே?”
“இல்லை மாமா!” ஒரே பதில் பளிச்சென!
அம்மா பேக் செய்யத் தொடங்கினாள். பாபுவும் லீவு போட்டிருந்தான்.
“அத்தே... உங்களுக்கு என்ன சாப்பாடா? டிபனா?”
“எங்களுக்கு எதுவும் வேண்டாம்மா! வழில சாப்பிட்டுக்கறோம்!”
“சரி மாமா!”
அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரும் பெட்டிகளோடு தயாராகிவிட்டார்கள்