1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
1 °P sammeln
  • Format: ePub

அந்த பெரிய பங்களாவின் முன்னால் காரை நிறுத்தினான் வைதேகியின் டிரைவர். “டிரைவர்...” “சொல்லுங்கம்மா...” “காரை விக்க ஏற்பாடு பண்ணிடு.” “அம்மா, கொஞ்சம் யோசனை பண்ணி செய்ங்கம்மா.” “என்ன யோசனை பண்ணச் சொல்றே?” “அம்மா இது வாரிசு இல்லாத சொத்து இல்லை. வாணியம்மா என்னைக்காவது ஒரு நாளைக்கு உங்களைத் தேடி வருவாங்க.” “அவ வரமாட்டா.” “அம்மா... அப்படி சொல்லாதீங்க. வாணியம்மா மட்டும் இல்லை ஐயாவும் வருவாங்க. உறவுகள் என்னைக்கும் உடைஞ்சுடாது. அப்ப வந்து சொத்துக்களை ஏன் வித்தீங்கன்னு கேட்டா நீங்க என்ன பதில் சொல்லுவீங்க? அம்மா பாசம்கிறது அத்தனை சீக்கிரத்துல விட்டுப் போகாதும்மா. அந்த சக்தி என்னைக்கும் ஜெயிக்கும்.…mehr

Produktbeschreibung
அந்த பெரிய பங்களாவின் முன்னால் காரை நிறுத்தினான் வைதேகியின் டிரைவர்.
“டிரைவர்...”
“சொல்லுங்கம்மா...”
“காரை விக்க ஏற்பாடு பண்ணிடு.”
“அம்மா, கொஞ்சம் யோசனை பண்ணி செய்ங்கம்மா.”
“என்ன யோசனை பண்ணச் சொல்றே?”
“அம்மா இது வாரிசு இல்லாத சொத்து இல்லை. வாணியம்மா என்னைக்காவது ஒரு நாளைக்கு உங்களைத் தேடி வருவாங்க.”
“அவ வரமாட்டா.”
“அம்மா... அப்படி சொல்லாதீங்க. வாணியம்மா மட்டும் இல்லை ஐயாவும் வருவாங்க. உறவுகள் என்னைக்கும் உடைஞ்சுடாது. அப்ப வந்து சொத்துக்களை ஏன் வித்தீங்கன்னு கேட்டா நீங்க என்ன பதில் சொல்லுவீங்க? அம்மா பாசம்கிறது அத்தனை சீக்கிரத்துல விட்டுப் போகாதும்மா. அந்த சக்தி என்னைக்கும் ஜெயிக்கும். வாணியம்மா வருவாங்க. உங்கக்கூட இருப்பாங்க. அவங்க அனுபவிக்க வேண்டிய சொத்துக்களை இப்படி அனாதைப் பசங்களுக்கு எழுதி வைக்காதீங்கம்மா...”
“ம்... நீ சொல்றதெல்லாம் எதுவும் நடக்காது. எனக்கு நல்லாத் தெரியும். என் கணவரும், என் மகளும் திரும்ப என்கிட்ட வரமாட்டாங்க. அதுல எந்த மாற்றமும் இல்லை. ஏன்னா... நான் பண்ணின பாவம் அப்படி. அந்த பாவத்துக்கு பரிகாரமா நான் என் சொத்தையெல்லாம் தானம் பண்ணலை. என் கணவருக்கு நான் செய்யற நன்றி இதுதான். இதெல்லாம் அவர் சம்பாதித்த சொத்து. அவர் வந்து இதை அனுபவிக்கபோறதில்லைங்கிறது உறுதி. அவரோட பொண்ணுங்களும் அவரை மாதிரிதான். உயிரே போனாலும் வைராக்கியத்திலிருந்து மாறமாட்டாங்க. ரெண்டு பேருமே அதை நிரூபிச்சிட்டாளுங்க. ப்ச்! பேசி எதுவும் ஆகப் போறதில்லை. சொன்னதை செய்.”
சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். தனிமை வெறுமை அவளை எள்ளி நகையாடியது. சோர்வுடன் வந்து சோபாவில் சரிந்தாள்.
வாணியும் சரளாவும் காற்சதங்கை ஒலிக்க அந்த வீடு பூராவும் ஓடி விளையாடிய காட்சி கண்களில் தெரிந்தது.
அம்மா, அம்மா என அழைத்த அவர்களுடைய குரல் காதில் ஒலித்தது.
இப்பொழுது, வீடு சுடுகாடு போல் ஒரு அமைதியில் இருந்தது. ஒரு பேச்சுக்குரல் இல்லை. அவள் மட்டுமே தன்னந்தனியாக பேய் போல் உலவிக் கொண்டிருக்கிறாள். கண்ணீர் திரண்டது. சுவரில் பெரிதாக்கப்பட்டு மாட்டப்பட்டிருந்த அந்த புகைப்படத்தில் அவளுடைய விழிகள் நிலைத்தது.
இளம் வயது வைதேகியும் சேகரும் சரளாவையும்,. வாணியையும் அணைத்தபடி இருந்தனர். சிரிப்பு அனைவரின் முகத்திலும் குடி கொண்டிருந்தது.
மகிழ்ச்சி பூத்துக்குலுங்கியது அந்த புகைப்படத்தில். அவளுடைய நெஞ்சம் வேதனையில் வாடியது. விம்மியது. அவள் குலுங்கியபொழுதே அதே நேரம் தொலைபேசி ஒலித்தது.
முந்தானையால் கண்களை அவசரமாகத் துடைத்துக் கொண்டாள்.
“ஹலோ... வைதேகி பேசறேன், நீங்க யாரு?”
“மேடம், நான் கோபால்சாமி பேசறேன்.”
“சொல்லுங்க.”
“சொத்துக்களை விக்க ஏற்பாடு பண்ணச் சொல்லியிருந்தீங்களே! நல்ல பார்ட்டி ஒண்ணு வந்திருக்கு. அழைச்சுட்டு வரட்டுமா மேடம்.சரி. எப்ப வர்றீங்க?”
“சாயந்தரம் அஞ்சு மணிக்கு வர்றோம்.”
“சரி.” வைத்துவிட்டு வந்தாள்.
அவள் பார்த்துப் பார்த்துக் கட்டிய இந்த வீடு இன்னொரு கைக்குப் போகப் போகிறது. ரசித்து ரசித்து பராமரித்த தோட்டம் விலைக்குப் போகப் போகிறது. அமுத சுரபியால் விளைந்த வயல்கள் அடுத்தவர் கைக்குப் போகப் போகிறது.
நெஞ்சில் பொங்கிய வேதனை அலைகளை கட்டுப்படுத்த தெரியாமல் திண்டாடினாள்.
கோபால்சாமி சொன்னபடியே மாலை, சொத்துக்களை வாங்க ஆள் அழைத்து வந்தார்.
வீடு விலை பேசப்பட்டது. வந்தவர் பெரும் பணக்காரர். அவரே நிலங்களையும் விலைக்கு வாங்கத் தயாராக இருந்தார்.
பேசிமுடிக்கப்பட்டது. பத்திரம் எழுதவும் பணம் கொடுக்கவும் தேதி குறிக்கப்பட்டது.
வந்தவர் திருப்தியாக எழுந்து சென்றார்.
அவர் சென்றபின் வைதேகி எழுந்தாள்.
மனம் அழுதது.
இரவு உணவு இறங்கவில்லை.
படுக்கையில் புரண்டாள்.
இந்த சொத்துக்களுக்காகத்தானே எல்லா உறவுகளையும் இழந்தாய். இன்று சொத்துக்களை அனாதைகளுக்கு எழுதி வைக்க முன் வந்திருக்கிறாய்.
மனசாட்சி அவளை கேள்வி கேட்க அவளுடைய மனத்திரையில் கடந்த காலம் விரிந்தது