"நான் அசைவன்" எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் க்ரைம் த்ரில்லர். பல கதைகளில் உங்கள் மனம் கவர்ந்த விஷாலின் அதிரடியில் நான் அசைவன் உங்களுக்கு நல்லதொரு விருந்து என்றால் மிகையாகாது. நாவலிலிருந்து "ஷர்மி" "ம்" "எப்பவுமே எனக்கு அதிர்ஷ்டம் அதிகம். " சொன்ன என்னைப் புரியாமல் பார்த்தாள். "புரியலயா?" "ம்" "இப்போ இந்த வீட்ல உன்னையும் என்னையும் தவிர யாரும் இல்லை கரெக்டா ?" என் கேள்வியில் பயந்தாள். "என்ன சொல்றீங்க?" "எனக்கு அதிர்ஷ்டம்னு சொல்றேன்." "புரியல." பேசியபடியே கதவை நோக்கி ஓட முயன்றாள். சட்டென்று டேபிள் மீதிருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து அவள் தலையை நோக்கி எறிந்தேன். அது குறி தவறாமல் போய் அவள் பின் தலையை தாக்கக் கீழே விழுந்தாள். கதறினாள். "விஷ்ணு உங்களுக்கு என்னாச்சு? ப்ளீஸ் என்னை விடுங்க." அவளை அப்படியே அள்ளிக் கொண்டேன். பூக்குவியல் போல் மென்மையாக இருந்தாள். அறைக்குள் கிடத்தினேன். பயமாய் பார்த்தாள். அறையில் ஜீரோ வாட்ஸ் பல்பு எரிந்து கொண்டிருந்தது. அந்த மங்கலான வெளிச்சத்தில் அவள் முகத்தில் இருந்த பயம் என் ரசனையை அதிகப்படுத்தியது. பயத்தோடு கேட்டாள். "என்ன எதுக்கு இங்க கொண்டு வந்திருக்கீங்க?" நான் புன்னகைத்தேன். அவள் பயத்தை ரசித்தேன். "எனக்கு ஒரு விசித்திரமான வியாதி இருக்கு வெளியே சொன்னா நம்ப மாட்டாங்க. " நான் சொல்வதை ஒன்றும் புரியாமல் பார்த்தாள் அவள். "புரியலையா? புரியற மாதிரி சொல்றேன். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வர்ற அன்னிக்கி என் உடம்புல எனக்கே தெரியாம ஏதோ ஒரு மாற்றம் நடக்கும். அப்போ எனக்கு சாப்பாடு என்ன தெரியுமா? மனுசங்க சாப்பிடற எதுவுமே நான் சாப்பிட மாட்டேன் எனக்குப் பிடிக்காது" நான் சொல்ல அவள் பயத்துடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். "இங்க பாரும்மா. உனக்கு எத்தனை வயசு ஆகுது? " "இருபத்திரண்டு." "ஓட்டு போட்டியா?" "ம்" "பெரிய பொண்ணு நீ. மனுசங்க சாப்பிடறது எனக்குப பிடிக்காதுன்னு சொன்னா நீ என்ன பண்ணனும்?" "என்ன ப...ண்ண...னும்?" அவள் பயத்துடன் தடுமாறியபடி கேட்டாள். "வேற என்ன சாப்பிடுவீங்கன்னு கேட்கணும்." அவள் தயங்கினாள். நான் விழிகளால் கட்டளையிட தயங்கியபடி கேட்டாள். "வேற எ .ன்ன சாப்பி...டுவீ.ங்க?" "கொஞ்சம் ரத்தம். அதும் சூடா." நான் சொன்னபடி அவளை நெருங்க அவள் வீறிட்டாள். நான் கண்டுகொள்ளவில்லை. அவள் மீது பாய்ந்தேன். தப்ப முயன்றவளின் கழுத்தில் என்கோரைப் பல்லால் அழுத்தினேன். சூடான ரத்தம்.
*** 'விஷால் அப்பா செத்துட்டார். கொலைகாரன் வெளில இருக்கான். நான் ரூமுக்குள்ள இருக்கேன். அவன் என்னையும் கொன்னுடுவானோன்னு பயமா இருக்குடா. விஷால் நீ எப்பவும் நல்லா இருக்கணும் ஐ லவ் யூடா' *** எனக்கு யேசுதாஸ் பாட்டு ரொம்ப பிடிக்கும். 'எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்' பாட்டைப் போட்டேன். காட்டில் மழையில் அந்தக் குரலில் அந்த இசையில் ஆர்த்தியைக் கொல்லப் போகிறேன் என்ற நினைப்பே ஜிவ் என்றது. அந்த உணர்வை வார்த்தையால் சொல்ல முடியாது.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.