1,99 €
1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
0 °P sammeln
1,99 €
1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar

Alle Infos zum eBook verschenken
payback
0 °P sammeln
Als Download kaufen
1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
0 °P sammeln
Jetzt verschenken
1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar

Alle Infos zum eBook verschenken
payback
0 °P sammeln
  • Format: ePub

திருவிளையாடல் என்றாலே நமக்கெல்லாம் மதுரைதான் நினைவுக்கு வரும். ஸ்ரீபரமேஸ்வரன் தேர்ந்தெடுத்த இடமாயிற்றே! அம்பிகை ஜனனமெடுத்த ஸ்தலமல்லவா? சோமசுந்தரப் பெருமான் சுயம்பு லிங்கம். கருங்குருவிப் பறவைக்கும் மிருத்யுஞ்சய மந்திரம் உபதேசித்த க்ஷேத்திரம். இந்திரன் பழி தீர்த்த பதி. இந்நூலைப் படிக்கும் எவருக்கும் ஆலவாய்க்குப் போய் சுந்தரேசப் பெருமானையும், மீனாட்சியம்மன் கோயிலுள்ள 64 திருவிளையாடல் சிற்பங்களையும், செட்டி பெண்ணுக்கு சாட்சி சொன்ன வன்னி மரம், கிணறு ஆகியவற்றையும் பார்த்து வர வேண்டும் என்று அவா எழுந்ததென்றால் அதில் வியப்பில்லை! ஐராவதம் சாபம் தீர்ந்தபதி! கால் மாறியாடிய வெள்ளியம்பலம்! எண்ணாயிரம்…mehr

  • Geräte: eReader
  • mit Kopierschutz
  • eBook Hilfe
  • Größe: 15.03MB
  • FamilySharing(5)
Produktbeschreibung
திருவிளையாடல் என்றாலே நமக்கெல்லாம் மதுரைதான் நினைவுக்கு வரும். ஸ்ரீபரமேஸ்வரன் தேர்ந்தெடுத்த இடமாயிற்றே! அம்பிகை ஜனனமெடுத்த ஸ்தலமல்லவா? சோமசுந்தரப் பெருமான் சுயம்பு லிங்கம். கருங்குருவிப் பறவைக்கும் மிருத்யுஞ்சய மந்திரம் உபதேசித்த க்ஷேத்திரம். இந்திரன் பழி தீர்த்த பதி. இந்நூலைப் படிக்கும் எவருக்கும் ஆலவாய்க்குப் போய் சுந்தரேசப் பெருமானையும், மீனாட்சியம்மன் கோயிலுள்ள 64 திருவிளையாடல் சிற்பங்களையும், செட்டி பெண்ணுக்கு சாட்சி சொன்ன வன்னி மரம், கிணறு ஆகியவற்றையும் பார்த்து வர வேண்டும் என்று அவா எழுந்ததென்றால் அதில் வியப்பில்லை! ஐராவதம் சாபம் தீர்ந்தபதி! கால் மாறியாடிய வெள்ளியம்பலம்! எண்ணாயிரம் சமணர்களையும் ஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து கழுவேற்றல், பிராட்டியார் பட்டாபிஷேகம், மீனாக்ஷியம்மன் திக்விஜயம், மீனாக்ஷி சுந்தரேஸ்வராள் திருமண வைபோகம் இதையெல்லாம் சித்திரைத் திருவிழாவில் இன்றும் காணலாம். ஆவணி மாதம் புட்டுத் திருநாளில் ஏழையான வந்தியின் பிட்டுக்குக் கூலியாளாக வந்து அரிமர்த்தன பாண்டியனிடம் மாணிக்கவாசகருக்காக காட்டிலுள்ள நரிகளையெல்லாம் குதிரைகளாக்கி விற்றதற்காக பிரம்படி பட்ட லீலை, நாரைக்கு மோக்ஷம் கொடுத்தது, விறகு விற்றுப் பாடி ஏமநாதபாகவதரை! ஊரைவிட்டே ஓட வைத்தது, தருமிக்குப் பொற்கிழி அளித்தது, குறையாத அரிசி மூட்டையை பக்தனுக்கு வழங்கியது, ஆசிரியர் மனைவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த மூர்க்கனை ஆசிரியர் வடிவில் வந்து சிலம்பப்போர் நடத்தி அங்கம் வெட்டிய லீலை! சம்பந்தர் கூன் பாண்டியன் ஜுரம் தீர்த்தது, வளையல் விற்றருளிய லீலை, சொக்கநாதர் பட்டாபிஷேகம். குதிரைக் கயிறு மாற்றியது, மதுரையில் வெள்ளத்தை வரவழைத்து உதிர்ந்த பிட்டுக்கு மண் சுமந்தது. இன்றும் திருவிழாக் காலத்தில், வளையன் மகளாக பிறந்த கயற்கண்ணி அம்மையாருக்காக வண்டியூர் தெப்பக்குளத்தில் மீன்பிடித்த திருவிளையாடல் நிதர்சனமாக நடத்தப்படுகிறது. வைகையை ஈசன் குண்டோதரனுக்காக ஏற்படுத்தினார் என்பது அழகுற இந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. அனாவசியமான வார்த்தை ஜாலங்கள் இல்லை. ஈசனே நடத்திய திருவிளையாடல் ஆனதால் தினமும் ஒரு சர்க்கம் படித்து முடிக்கிற அன்று பாயசம் நிவேதனம் செய்தால் அந்த இல்லத்தில் பிரச்சினைகள் எழாது. குறைகள், நோய்கள் தீர கூன் பாண்டியன் நோயை ஞான சம்பந்தர் தீர்த்த படலத்தைப் பாராயணம் செய்து வரவும். இதே போல் கடன் தீர நவரத்தினம் விற்ற படலத்தைப் பாராயணம் செய்யவும். தானியங்கள் செழிப்பாய் வளர, வியாபாரம் பெருக உலவாக் கோட்டை அருளிய லீலையை மனம் ஒன்றி வாசிக்கவும். போட்டிகளில் வெற்றி பெற பாணபத்திரரும், அவர் மனைவி பத்திரையும் வாதில் வென்ற படலத்தையும், சீமந்தம் வர வளையல் விற்ற படலத்தையும், பதவி கிடைக்க பன்றிக்குட்டிகளை வளர்த்து மந்திரிகளாக்கியதையும், சிறந்த எழுத்தாளனாக, புத்தக வியாபாரம் செழிக்க சங்கப்பலகை அளித்ததில் தொடங்கி, நக்கீரருக்கு இலக்கண முறைத்தது, நூல்களின் ஏற்றதாழ்வு கண்டது வரை பாராயணம் செய்து வந்தால் நற்பயன் பெறலாம். சித்தர் விளையாடல், ரசவாதம் புரிதல் கல்லானைக்குக் கரும்பு கொடுத்தல் மந்திரவாதிகளுக்கும், ஜோதிடர்களுக்கும் வெற்றியைத் தரும். மாபாதகம் தீர்த்தல் பாபங்களைப் போக்கும். வெள்ளம் வடிய உக்கிர பாண்டியனுக்கு வளையம், வேல், சண்டாயுதம் கொடுத்ததும், கடலை வற்றடித்ததும் பாராயணம் செய்ய உகந்தவை. திருமணம் நடக்க திருமண காண்டம். பழிகள் தீர இந்திரன் பழி தீர்த்ததும், வெள்ளையானை சாபம் தீர்த்ததும் பாராயணம் செய்யலாம். உக்கிரபாண்டியன் பிறப்பும், தடாதகை பிராட்டியார் பிறப்பும் தொடர்ந்து உருக்கமாகப் பாராயணம் செய்து வந்தால் ஆண், பெண் மலட்டுத் தனத்தை நீக்கும். அன்னக்குழிப் படலம் தரித்திரத்தைப் போக்கும். ஏழு கடலழைத்தல் படலம் புண்ணிய நதிகளில் நீராடிய பலனைத்தரும். வேதப் பொருளுரைக்கும் சர்க்கம் வேதங்கள், மந்திரங்கள் படிப்பவருக்கு உகந்ததாகும். பில்லி, சூனியம், காற்று, கருப்பு தொல்லைகள் நீங்க, அண்டாதிருக்க சமணர்கள் அபிசார ஹோமம் செய்து ஏவிய சர்ப்பத்தை, பசுவை, யானையை வதைக்கும் படலங்களை பக்தியோடு படித்து வரவும். மேருவிலிருந்து தங்கம் எடுக்கும் சர்க்கம் ஐஸ்வர்யத்தைப் பெருக்கி திருட்டு பயத்தைப் போக்கும். மழை வர வைகையில் வெள்ளம் பெருகிய படலமும், பெருமழையிலிருந்து காத்த படலமும் பாராயணம் செய்து வரவும். பகையில்லாமல் இருக்க இந்திரன் முடிதகர்த்த சர்க்கம். மலையத்துவஜனை அழைத்த சர்க்கம் இழுபறி என்று மரணப் படுக்கையில் கிடப்பவருக்கு மோட்சத்தை அளிக்கும். எந்தெந்த ஸ்தலத்தில் என்னென்ன நடனம் என்பதைப் படித்தால் நாட்டியம் நன்றாக வரும். அஷ்டமாசித்தி உபதேசிக்கும் சர்க்கம் படிப்புக்கு உகந்தது. அந்தந்த சர்க்கத்தின் முடிவிலேயே பலன் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நூல் வீட்டில...


Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.